பேராசிரியர் க. கைலாசபதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக நியமனம் பெற்றதையடுத்து, அவர் 1976 ஆம் ஆண்டு இலக்கிய உலகிற்கும் இலக்கிய மாணவர்களுக்கும் பயனுள்ள ஆய்வரங்கொன்றை இரண்டு நாட்களுக்கு பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்தார். தமிழகத்திலிருந்து அசோகமித்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். குறிப்பிட்ட 1976 ஆம் ஆண்டு தமிழ் நாவல் நூற்றாண்டுக்காலமாகும். பல முன்னோடி நாவலாசிரியர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருந்த தமிழ்நாடு, இந்த நூற்றாண்டுக்காலத்தை ஏனோ மறந்துவிட்டிருந்தது. இத்தனைக்கும் தனது வாழ்நாள் பூராகவும் தன்னை ஒரு எழுத்தாளன் என்று நிறுவிவரும் கலைஞர் தமிழக அரசில் அப்போது முதல்வராக பதவியிலிருந்தார். இவ்வாறு தமிழகம் மறந்த பல விடயங்கள் இருக்கின்றன. 1990 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் இலக்கிய ஆர்வலர் (அமரர்) ரங்கநாதன் அவர்களின் இல்லத்தின் மேல்மாடியில் நடைபெற்ற மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுகநிகழ்வில் கலந்துகொண்ட இலக்கிய விமர்சகர் சிட்டி அவர்கள், இலங்கையரின் பல முன்மாதிரிகளை சுட்டிக்காட்டிப்பேசும்போது கைலாசபதியினால் நடத்தப்பட்ட நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கையும் தொடர்ச்சியாக 25 ஆண்டுகளையும் கடந்து வெளியாகும் மல்லிகையையும் சிலாகித்துப்பேசினார். மேற்சொன்ன யாழ்.பல்கலைக்கழக நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிலும் அடையாறில் நடந்த மல்லிகை நிகழ்விலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன்.

From: Muralidharan Parthasarathy
To: ngiri2704@rogers.com
Sent: Monday, May 21, 2012 3:05 AM
Subject: Sathyanandhan’s blog id
அன்பு வ.ந.கிரிதன் அவர்கட்கு வணக்கம். என்னுடைய படைப்புக்களை tamilwritersathyanandhan.wordpress.com என்னும் வலைத் தளத்தில் வாசிக்க வரிசைப்படுத்தியிருக்கிறேன். அன்பு சத்யானந்தன்.sathyanandhan,mail@gmail.com [உங்கள் வலைப்பதிவு பற்றிய விபரத்தை அறியத் தந்ததற்கு நன்றி. பதிவுகள் இணைய இதழில் உங்கள் வலைப்பதிவினை அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இது போல் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை ஆவணப்படுத்த வேண்டும், ஆய்வுகளுக்கு, திறனாய்வுகளுக்கு மற்றும் படைப்புகளை வாசித்துப் பயனுறுவதற்கு இத்தகைய பதிவுகள் அவசியம். – ஆசிரியர், பதிவுகள்-]
[அண்மையில் மறைந்த நண்பர் ‘தமிழர் மத்தியில்’ நந்தா முன்பொருமுறை (அக்டோபர் 2004, இதழ் 58ற்கு) ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். அதனை ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள் -] நந்தா என நன்கு அறியப்பட்ட திரு.நந்தகுமார் இராஜேந்திரம் ஒரு மொறட்டுவைப் பல்கலைக் கழகக் கட்டடக் கலைப் பட்டதாரி. இலங்கையில் இருந்த காலத்தில் இலங்கை அரசப் பொறியியற் கூட்டுஸ்தாபனம் (State Engineering Corporation), மற்றும் பண்டிதரட்ன-ஆதித்தியா கட்டடக் கலைஞர்கள் நிறுவனம் ஆகியவற்றில் கட்டடக் கலைஞராகப் பணிபுரிந்தவர். அச்சமயம் நிலாவெளிக் கடற்கரை விடுதி (Beach Lodge), மாளிகாவத்தை சமூக நிலையம் (Community Centre) ஆகியவற்றை வடிவமைத்தவர். பின்னர் மத்திய கிழக்கில், பஹ்ரயினில் கட்டடக் கலைஞராகப் பணி புரிந்த காலத்தில் உயர்ந்த தொடர்மாடிக் குடியிருப்புக் கட்டடங்களையும், மசூதியொன்றினையும் வடிவமைத்தவர். அதன் பின்னர் கனடா புலம் பெயர்ந்த இவர் Page & Steele கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தில் வடிவமைப்பாளராகச் (Designer) சேர்ந்து, இன்று பங்காளியாக(Associate) வளர்ந்து பணிபுரிந்து வருகின்றார். இது வரையில் சுமார் இருபது தொடர்மாடிக் கட்டடங்களையும், அவற்றிலுள்ள 10,000யிரம் வரையிலான குடியிருப்புக்களையும் வடிவமைத்துள்ளார். தொடர்மாடிக் கட்டடங்களை வடிவமைப்பதில் இன்று இவர் ஒரு நிபுணராக (Specialist) விளங்குகின்றார்.