Statement by the Prime Minister of Canada on National Aboriginal Day

Prime Minister Stephen HarperAboriginal peoples have made immense contributions to our nationJune 21, 2012, Ottawa, Ontario-  Prime Minister Stephen Harper today issued the following statement to mark National Aboriginal Day: “Today we celebrate the rich and diverse culture of our country’s Aboriginal peoples and reflect upon the important role they have played and continue to play in shaping modern-day Canada. “Aboriginal peoples have made immense contributions to our nation. First Nations fought as allies in the War of 1812 and in every major conflict since, and their cultures and traditions continue to be an integral part of Canadian identity. The enduring relationship between the Government of Canada and First Nations is one based on mutual respect, friendship and support, and we are committed to working towards deepening this bond.  “Our Government has made strengthening this relationship a priority. For instance, in 2008 we issued an historic apology to former students of Indian Residential Schools, and in 2010, we endorsed the United Nations Declaration on the Rights of Indigenous peoples. In January of this year, we also participated alongside First Nations in the historic Crown-First Nations Gathering to set the context for renewed collaboration.

Continue Reading →

Aboriginal Affairs and Northern Development Canada: National Aboriginal Day History

On June 21st, Canadians from all walks of life are invited to participate in the many National Aboriginal Day events that will be taking place from coast to coast to coast. On June 21st, Canadians from all walks of life are invited to participate in the many National Aboriginal Day events that will be taking place from coast to coast to coast. June 21st kick starts the 11 days of Celebrate Canada! which includes National Aboriginal Day (June 21), Saint-Jean-Baptiste Day (June 24), Canadian Multiculturalism Day (June 27) and concludes with Canada Day (July 1)! On June 13, 1996, the Governor General of Canada proclaimed June 21st to be National Aboriginal Day, offering Aboriginal peoples an excellent opportunity to share their rich, diverse cultures with family members, neighbours, friends and visitors. First Nations, Métis and Inuit people will gather to celebrate and share with spectacular dance, song and theatrical performances both contemporary and traditional that will bring you to your feet! National Aboriginal Day is a fun-filled day for the whole family to enjoy together. National Aboriginal Day is an opportunity to learn more about Aboriginal people and their contributions to Canada. Share in the Celebration

Continue Reading →

கீதா கணேஸின் ‘எத்தனங்கள்’ சிறுகதைத் தொகுப்பிற்கான இரசனைக்குறிப்பு..

எழுத்துத் துறையில் ஆரம்ப நிலையில் இருக்கும் கீதா கணேஸ் தமிழ் இலக்கியப்பரப்பில் தன் கதைகள் மூலம் ஆழமான தடத்தை பதித்திருக்கிறார். அவரது கதைத்தொகுப்பை வாசித்து முடிந்ததும் என்மனதில் எழுந்த இக்கருத்து மிகையானதல்ல.யாழ்ப்பாணத்திற்கு தெற்கே உள்ள வேலணையில் சிற்பனை எனும் ஊரில் பிறந்த கீதா கணேஸ் தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வருகிறார் யாழ் பல்கலைக்கழகப்பட்டதாரியான இவரது எத்தனங்கள் என்ற சிறு கதைதொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது ஈழத்து இலக்கியப்பரப்பில் ஒரு வறட்சியான போக்குநிலை அவதானிக்கப்படுகின்ற சூழலில் கீதாகணேஸின் கதைகள் வெளிவந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. போர்ச்சூழல் ஓய்ந்து விட்ட நிலையிலும் தமிழ் சமூகத்தில் காணப்படுகின்ற போலித்தனங்கள் மூட நம்பிக்கைகள் வக்கிரங்களுக்கெதிராக போராட வேண்டிய நிலையில் தமிழ் சமூகம் உள்ளதை இவரது கதைகள் சுட்டி நிற்கின்றன. தான் வாழ்ந்த சமூகத்தில் காணப்படுகின்ற சமூக போலித்னங்களுக்கெதிராக பகுத்தறிவு குரலாக ஒலிக்கின்ற இவரது கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு செய்தியை எமக்குசொல்கின்றன. இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்த கதைகள் பற்றி இங்கு குறிப்பிட விழைகிறேன்.

Continue Reading →

இணையத்தில் தமிழ், இணைய இதழ்கள் பற்றிய கட்டுரைகள் சில.

இணையத்தில் தமிழ்!

– முனைவர் மு. பழனியப்பன் –

இணையத்தின் இதழ்கள்தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.

Continue Reading →

இணையமெனும் இனிய வலை

அரசியல், சமூகம், இலக்கியம், சமையல், பெண்கள், மருத்துவம், ஆன்மீகம், வணிகம், சோதிடம், பல்சுவை என பல தலைப்புகளில் செய்திகளை தன்னில் உள்ளடக்கி வெளிவரும்  இணைய இதழ்களில் கீழ்க்கண்டவை பலராலும் வரவேற்பு பெற்றவை.அரசியல், சமூகம், இலக்கியம், சமையல், பெண்கள், மருத்துவம், ஆன்மீகம், வணிகம், சோதிடம், பல்சுவை என பல தலைப்புகளில் செய்திகளை தன்னில் உள்ளடக்கி வெளிவரும்  இணைய இதழ்களில் கீழ்க்கண்டவை பலராலும் வரவேற்பு பெற்றவை. திண்ணை:  வீட்டில் திண்ணை வைத்துக்கட்டுவது தமிழா் மரபு. இந்த திண்ணையில் உட்கார்ந்து பல செய்திகள் அலசப்படும். அதுபோல இலாப நோக்கமின்றி நடத்தப்படும்  இம்மின்னிதழில் கலை, அரசியல், கதை, கட்டுரை இலக்கியம், கவிதை எனப்  பலவற்றையும் படிக்கலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுகிறது. பழைய மின்னிதழ்களில் இதுவும் ஒன்று. தட்ஸ் தமிழ்: இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப்போல வெளிவருகிறது. இதில் பலதுறைச் சார்ந்த செய்திகளும் இலக்கியமும் இடம் பெற்றுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளிவருகிறது. மேலும் திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். வார்ப்பு: தமிழ்க் கவிதைக்கோர் இணைய இதழ். 1998 இல் ‘நிக்குமோ நிக்காதோ” என்ற பெயரில் வந்த இம்மின்னிதழ் பிறகு ‘வார்ப்பு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுமதி, கனிமொழி போன்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் வெளிவந்துள்ளன. புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நுால்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களை இந்த இதழில் உள்ள ‘நூலகம்” என்ற இணைப்பின் வழியாக காணலாம். பதிவுகள்: 2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் வ.ந. கிரிதரன் . மாதந்தோறும் வெளிவரும் மின்னிதழ். இதன் நோக்கம் ‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” என்பதாம்.  கவிதை, சிறுகதை, நாவல், நூல் விமர்சனம், அறிவியல். . .இலக்கியம் சார்ந்த செய்திகளைப் படிக்கலாம். இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகிறது. மேலும் விக்கிபீடியா (தமிழ் தகவல் களஞ்சியம்), மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் இணைப்புகளையும் வழங்குகிறது.

Continue Reading →