நடுகற்கள் கல்வெட்டு காட்டும் மக்கள் வரலாறு மக்கள் மொழி

எளிய மக்கள் வரலாறு – மக்கள் மொழி என்பவை பற்றிய நோக்கில் நடுகல் கல்வெட்டுகள் உணர்த்தும் செய்திகளை விளங்கச் செய்வதே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்கம். நடுகற்கள் குறித்த அறிமுக உரை ‘ தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள் ‘ என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு கட்டுரையாக வரையப்பட்டுவிட்டது. அதன் இரண்டாம் பகுதியே இக்கட்டுரை. தமிழ முன்னோரே மேலை நாகரிகங்களையும், கீழை நாகரிகங்களையும் ஏற்படுத்தினர் என்பதற்குச் சான்றாக நடுகல் கல்வெட்டுத் தமிழ்ப் பெயர்களுடன் ஒத்து உள்ள பிற நாகரிக மன்னர்ப் பெயர்களும் இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. நடுகல் கல்வெட்டுகளில் சிறப்பாக ஆளப்பட்டு உள்ள மருமக்கள் > மருமகன், மக்கள் > மகன், சேவகன், அடியான் ஆகிய சொற்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ள படைவீரர்களைக் குறிக்கின்றன. ஒரு வேந்தனுக்கு அவன் தனியாகப் பேணுகிற நிலைப் படை (Reserve Army) தவிர படை உதவிகள் அவனுக்கு அடங்கிய மாமன்னர், மன்னர் ஆகியோரிடம் இருந்தே வந்தன. ஆதலால் ஒரு வேந்தனுக்கு மன்னன் எனபவன் படைத்தலைவன் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டான். அவ்வாறே ஒரு மன்னனின் மேலாதிக்கத்தை ஏற்ற பல சிற்றரசர் அவனுக்கு படைத் தலைவர் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டனர். ஒரு சிற்றரசனுக்குக் கீழ் இருந்த வேள், கிழான் எனும் ஊர்த் தலைவன் படைத்தலைவன் ஆவதால் மகன், சேவகன் எனப்பட்டான். ஈண்டு, வேந்தன் குலோத்துங்கனுக்கு பல்லவன் கருணாகரத் தொண்டைமான் படைத் தலைவனாய் இருந்ததை எண்ணுக.

Continue Reading →

(93) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -இன்னொரு நண்பரைப் பர்றிச் சொல்லவேண்டும் என்று இருந்தேன். அவர் பெயர் நினைவுக்கு வருவதாயில்லை. இப்போது தான் என்ன மாயமோ திடீரென்று  மின்னல் அடிப்பது போல் நினைவில் பளிச்சிட்டது. அவர் பெயர் சிவ கோபால கிருஷ்ணன்.  “வாரும். உங்களுக்கு வீடு கிடைக்கிற வரையில் நம்மோடு தங்கலாம்,” என்று அழைத்து வரப்பட்டவர். இங்கே எங்கோ வேலை செய்யறது கிடக்கட்டும். உங்களுக்கு எதிலே இண்டெரெஸ்ட் என்று எங்களில் ஒருவர் கேட்க “பாட்டு” என்றார். அவர். “அடி சக்கை, எங்களுக்கு யாருக்குமே பாடத் தெரியாது. ஒரு குறை தீர்ந்ததுன்னு வச்சுக்குவோம். என்ன பாட்டு? சினிமாவா, இல்லே பாட்டு கத்துட்டிருக்கிங்களா? என்று கேட்க,, சிவ கோபால கிருஷ்ணன், மிகவும் வெட்கப்பட்டு பவ்யமா, “ பாட்டு எழுதுவேன்.” என்று சொல்லி சில பத்திரிகைகளை தன் பெட்டியிலிருந்து எடுத்து தான் எழுதியது வெளியாகிருக்கும் பக்கத்தைப் பிரித்துக் காண்பித்தார். பாட்டுக்கள் அல்ல. கவிதைகள். .பிறகு தான் புரிந்தது அவர் பாட்டு என்று எதைச் சொன்னார் என்று.. அந்தக் காலத்திலே பாட்டுன்னுதானே சொல்றது வழக்கம்?. சங்கப் பாடல்கள் தானே. சங்கக் கவிதைன்னா சொல்றோம்?. சரி. அதுவும் குறை தீர்க்கிற சமாசாரம் தான். இங்கே யார் கவிதை எழுதறா?.

Continue Reading →

நீண்ட ஆறு

ஜெயந்தி சங்கர்ஸியா, ஷாங், ஜோவ் முடியாட்சிகளுக்கெல்லாம் மூதாதையரான லுவோஜு சீனர்களின் ஆதித்தாய் என்றறியப் பெறுகிறாள். மஞ்சள் மாமன்னரின் மனைவியான லுவோஜு யாங்சே ஆற்றங்கரையோரத்தில் முற்கால சீனத்தின் ஸிலிங் என்றறியப்பட்ட நகரத்தில் பிறந்தாள். இவர்களுக்கு ஸுவான் ஸியாவ் மற்றும் ச்சாங் யீ என்று இரண்டு மகன்கள் பிறந்தனர். அரசி லுவோஜு தான் முதன்முதலில் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு மற்றும் பட்டிழை நெய்தல் பற்றி அக்காலச் சமூகத்துக்குக் காட்டியதால் இன்றைக்கும் சீனத்தில் லுவோஜு என்றால் பட்டுப்புழுக்கள் வளர்க்கும் தேவதை என்றே பொருள். இந்தக் கண்டுபிடிப்பு சீன நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சிக்குப் பெரிது உதவியுள்ளது. லுவோஜுவின் நினைவாக அன்றே கட்டப்பெற்ற ஓர் ஆலயம் இன்றைக்கும் யிச்சாங்கில் இருக்கிறது. ஒவ்வொரு சந்திர ஆண்டின் மூன்றாம் மாதத்தின் ஐந்தாம் நாளில் இந்தக்கோவிலில் பெரிய திருவிழா நடக்கும். லுவோஜு கலாசாரத்தைக் குறித்த கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளும் இங்கு நடைபெறும்.

Continue Reading →

அகேனம் (ஃ) விருது குறமகளுக்கு

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் குறமகள் என அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம். ஆறுமுகநாவலர் முதல் மனுஸ்ய புத்திரன் வரை எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்  – குறமகள் மேற்கண்டவாறு ரொரண்ரோவில் நடைபெற்ற 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் தெரிவித்திருந்தார். மனுஸ்யபுத்திரன் குஸ்பு விவாகரத்தில் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதற்கு மேலும் இச் சந்திப்பில் கண்டனம் தெரிவித்திருந்தார். கைலாசபதி போன்ற விமர்சக மேதைகள் புகழ்ந்த ஆறுமுக நாவலரையே குறமகள் விமர்சித்துள்ளார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநாவலர்கள் அவர்களும், முன்பு இருந்ததை விட மோசமான நிலையில் பெண்களுக்கான விதிமுறைகளைக் கவனத்திற்கு எடுத்தார். குடும்பத்துக்கான பொறுப்புக்களை மாத்திரமல்ல அவளது உணர்வுகளை சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் எழுதிவைத்தார். சாதியத்தைவிடக் கடும்போக்காகப் பெண்களை ஒடுக்கும் வகைகளை எடுத்தியம்பினார்.” என தனது யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலில் தெரிவித்துள்ளார். பெண்கள் மறுவாழ்விற்காக தனது எழுத்துக்களை சமர்ப்பித்த குறமகளுக்கு இவ் வருடம் ‘அகேனம் (ஃ) விருது” வழங்கப்பட்டுள்ளதாக சுயாதீன கலை திரைப்பட கழகத்தின் நிறைவேற்று இயக்குனர் திரு. த. சிவசதாசன் அறிவித்துள்ளார்.

Continue Reading →

பதிவுகளில் அன்று: குறமகள் கூறியவை….

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் குறமகள் என அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம். ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் குறமகள் என அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம். பல வருடங்களாகக் கனடாவில் வசித்து வரும் இவரது ‘குறமகள் கதைகள்’, ‘உள்ளக் கமலமடி’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் அண்மையில் மித்ர பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. பல வருடங்களுக்கு முன்னால் இவருடன் குரும்பசிட்டி ஜெகதீசனை ஆசிரியராகக் கொண்டு கனடாவில் வெளிவந்த ‘பொதிகை’ மாத இதழுக்காகக் கலந்துரையாடினேன். அக்கலந்துரையாடல் ‘பொதிகை’யில் பின்னர் வெளிவந்தது. அக்கலந்துரையாடலில் குறமகள் தெரிவித்த கருத்துகள் சிலவற்றைப் பதிவுகளில் ,பேச்சுத் தமிழிலேயே, பொதிகையில் வந்தமாதிரியே பதிவு செய்கின்றேன் காலத்தின் தேவை கருதி. நான் சிறுவனாக இருந்த பொழுதிலிருந்து ஈழத்துச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாயிலாக அறிந்திருந்த குறமகளைச் சந்தித்தது நல்லதொரு அனுபவம். இது போல் எஸ்.பொ.வினையும் அவர் அண்மையில் கனடா வந்திருந்த பொழுது சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது அவர் மனம் விட்டுக் கலந்துரையாடினார். இவர்கள் இருவரும் மேலும் மூவருடன் இணைந்து எழுதிய ‘மத்தாப்பு’ என்னும் குறுநாவலும் அண்மையில் மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத் தக்கது.

Continue Reading →