இணையத்தள அறிமுகம்: ‘பெயரற்ற யாத்ரிக’னின் ‘நடைவழிக்குறிப்புகள்’

ஒர்ஹான் பாமுக் 2 : படைப்புகளில் மிளிரும் சாதுர்யம்‘பெயரற்ற யாத்ரிக’னின் ‘நடைவழிக்குறிப்புகள்‘ வலைப்பதிவு நவீன கலை, இலக்கியம் சம்பந்தமான சிந்தைக்கு விருந்தளிக்கும் பல்லாக்கங்களை உள்ளடக்கியுள்ளதொரு வலைப்பதிவு. ஏப்ரில் 2006 இலிருந்து நவம்பர் 2007 வரையில் மட்டுமே இவ்வலைப்பதிவில் தொகுப்புகள் காணப்படுகின்றன. இத்தொகுப்புகளில் காணப்படும் ஆக்கங்களின் பயன் கருதி பதிவுகள் வாசகர்களுக்கு இவ்வலைப்பதிவினை அறிமுகம் செய்கின்றோம். அதன்பொருட்டு இவ்வலைப்பதிவில் காணப்படும் நோபல் பரிசுபெற்ற துருக்கிய எழுத்தாளரான ஒர்ஹான் பாமுக் பற்றிய கட்டுரையினைப் பிரசுரிக்கின்றோம். – பதிவுகள்-

ஒர்ஹான் பாமுக் 2 : படைப்புகளில் மிளிரும் சாதுர்யம்

அரசியலைக் குறித்து பாமுக் வெளிப்படுத்தும் கருத்துக்களைவிட, அவரது படைப்புகளில் மிளிரும் கருத்துகள் மிகவும் புத்திசாலித்தனமானவை. —ஒரு விமர்சனத்திலிருந்து.

Continue Reading →

அகமுகம்: யாவற்றையும் கேள்விக்குட்படுத்துவோம்! நவீன கவிதை சொல்லாக்கப் பிற்புலமும் அதன் வளர்ச்சியும்!

அகமுகம்: எழுத்தாளரும், விமர்சகரும், இதழாசிரியரும் , கவிஞருமான சி.ரமேஷின் வலைப்பதிவு. [அகமுகம்: எழுத்தாளரும், விமர்சகரும், இதழாசிரியரும் , கவிஞருமான சி.ரமேஷின் வலைப்பதிவு. ஆரம்பநிலையிலிருந்தாலும், இவ்வலைப்பதிவில் காணப்படும் படைப்புகள் ஆழமானவை; வரவேற்கத்தக்கவை. ரமேஷ் அவர்கள் தனது வலைப்பதிவினைத் தொடர்ந்தும் வளர்த்தெடுக்க வாழ்த்துகிறோம்; அத்துடன் ‘பதிவுகள்’ வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைக்கின்றோம். – பதிவுகள்-]

அறிமுகக் குறிப்புக்கள்

நவீனம் என்னும் சொல் புதியது, புதுமை, மறுமலர்ச்சி என்னும் பொருண்மையில் கட்டமைக்கப்பட்டு தமிழில் வழங்கி வரும் சொல்லாகும். இவற்றிடையே சிற்சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பினும் “புதுமை” என்ற அம்சமே பொதுவானதாய் இருப்பது கவனிக்கத்தக்கது. நவீனம் என்னும் சொல்லை க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மைகளையும் கொண்டமைவது” என வரையறுக்கும். எனவே நவீனம் என்றால் வழிவழி வந்த மரபிலிருந்து மாறுபட்டு புதுமையைச் சார்ந்து நிற்றல் அல்லது புதுமையை நாடிச் செல்லல் எனப்பிறிதொரு வகையில் பொருள் கொள்ளலாம். நவீன கவிதையுருவாக்கத்தில் நவீனத்துவத்தின் பண்புகள் இன்றியமையாதவையாகும். நவீனத்துவம் என்பது சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாட்டு அம்சங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு வளர்ச்சி நிலையைச் சுட்டுகின்றது. கிறிஸ்தவ இறையியலுக்கூடாக அடையாளம் காணப்பட்ட நவீனத்துவம் ஆரம்பத்தில் ஜெர்மனியில் டி.எம்.ஸ்ட்ராஸ், பிரின்ஸில் ஏர்னஸ்ட்ரெனான், முதலானோராலும் இங்கிலாந்தில் பெடரிக்ஹேன் ஹ்யூகல், இத்தாலியில் அன்டானியோ போலஸ்டோ ரோமலோ போன்றோராலும் வளர்த்தெடுக்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் இயக்கத்தை நிறுவிய பிரிட்டிஸ் மதப் பேச்சாளரான ஜான்நியூமான் மூலம் இலக்கிய உலகில் நுழைந்தது.

Continue Reading →