சிறுகதை: அவன் ‘ஐசிஎம்’மில் வேலை செய்கின்றான்!

1.

அவனிற்கு எப்படியாவது கனடாவில் நல்லதொரு வேலையில் அமர்ந்துவிட வேண்டுமென்பது நெடுநாளைய ஆசை. இலங்கையில் அவனொரு விஞ்ஞானப் பட்டதாரி. கனடா வந்ததிலிருந்து அவனும் முயற்சி செய்யாத வழிகளில்லை. எத்தனைதரம் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியபோதும் அதனையிட்டுக் கவலையேதுமின்றி மீண்டும் மீண்டும் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனைப்போல் அவனும் பலவேறு வழிகளில் முயன்றுகொண்டுதானிருந்தான். அவன் பார்க்காத வேலைகளேயில்லை என்னுமளவிற்கு அவற்றின் எண்ணிக்கைதான் கூடிக்கொண்டே போனதுதான் இதுவரை கண்ட மிச்சம். இவ்விதமாக அவனது வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடிக்கொண்டிருந்தது. அவ்விதமானதொரு சூழலில்தான் அவனது நண்பனொருவன் அறிவுரையின்றினை அவனுக்குதிர்த்தான்.

அவனிற்கு எப்படியாவது கனடாவில் நல்லதொரு வேலையில் அமர்ந்துவிட வேண்டுமென்பது நெடுநாளைய ஆசை. இலங்கையில் அவனொரு விஞ்ஞானப் பட்டதாரி. கனடா வந்ததிலிருந்து அவனும் முயற்சி செய்யாத வழிகளில்லை. எத்தனைதரம் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியபோதும் அதனையிட்டுக் கவலையேதுமின்றி மீண்டும் மீண்டும் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனைப்போல் அவனும் பலவேறு வழிகளில் முயன்று கொண்டுதானிருந்தான். அவன் பார்க்காத வேலைகளேயில்லை என்னுமளவிற்கு அவற்றின் எண்ணிக்கைதான் கூடிக்கொண்டே போனதுதான் இதுவரை கண்ட மிச்சம். இவ்விதமாக அவனது வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடிக்கொண்டிருந்தது. அவ்விதமானதொரு சூழலில்தான் அவனது நண்பனொருவன் அறிவுரையொன்றினை அவனுக்குதிர்த்தான்.

Continue Reading →

கனடா வாழ் எழுத்தாளர் அகிலுக்கு மணிவாசகர் பதிப்பக விருது

அன்மையில் வெளிவந்த அகிலின் ‘கூடுகள் சிதைந்தபோது” சிறுகதைத் தொகுப்புக்கு.மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விழா 21.06.2012 அன்று திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் மாலை…

Continue Reading →

42 ஆண்டு கால இலக்கியச் சிந்தனையின் பட்டியல்!

வணக்கம், 42 ஆண்டு கால இலக்கியச் சிந்தனையின் மாதத் தெரிவுகள், ஆண்டுத் தெரிவுகள் என்று மொத்தம் 505 சிறுகதைகளையும், அவற்றை எழுதிய 333 ஆசிரியர்களையும், அச்சிறுகதைகளை வெளியிட்ட…

Continue Reading →

இலங்கையில் வாழும் பெண் கவிஞர்களின் கவனத்திற்கு ..!

இன மத பாகு பாடுகள் இன்றி தரமான பெண் கவிஞர்கள் 25 பேர்களின் கவிதைகளை ஒன்று சேர்த்துஒரு கனதியான தொகுப்பாக தடாகம் கலை இலக்கிய வட்டம் (இன்சாஹ்…

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோவின் “டாக்கிங் க்ளப்” – ஆங்கில மொழியின் ஆளுமை..

தமிழ் ஸ்டுடியோவின் "டாக்கிங் க்ளப்" - ஆங்கில மொழியின் ஆளுமை..நண்பர்களே இன்றைய தமிழ் சினிமாவில் பணிபுரியும் பல உதவி இயக்குனர்கள், மற்ற பல உதவி கலைஞர்களுக்கு ஆங்கிலம் நிச்சயம் ஒரு சவாலான மொழிதான். ஆனால் திரைப்பட துறையில் பணியாற்றும் நண்பர்கள் நிச்சயம் கொஞ்சமாவது ஆங்கில மொழி கற்றிருக்க வேண்டும். பேச, புரிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் படங்களை விருதுகளுக்கு அனுப்பவும், உலக படங்கள் பற்றி நிறைய பேசவும், புரிந்துக் கொள்ளவும் கொஞ்சமாவது ஆங்கில அறிவு அவசியம். தமிழ் ஸ்டுடியோவில் இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். திரைப்பட துறை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் சேரலாம். ஆங்கிலத்தில் பேச, எழுத நீங்களாகவே கற்றுக் கொள்ளும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நண்பர்கள் இனைந்து தங்கள் ஆங்கில மொழி புலமையை விரிவுப் படுத்திக் கொள்ளலாம். ஆங்கில பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகளும் நடக்கும். நண்பர்கள் கூடி தப்பு தப்பான ஆங்கிலத்தில் பேசியும், அதனை ஆங்கிலம் நன்கு தெரிந்த ஒருவர் சரி செய்வதுமே இந்த அமைப்பின் மையம்.

Continue Reading →

சிறுகதைப்போட்டி: தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம், நூற்றாண்டு விழாவையொட்டிய சிறுகதைப்போட்டி – 2012

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்  இவ்வருடம் தனது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறது. அதனையொட்டி சிறுகதைப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.இப்போட்டியில் இலங்கையில் வாழும் படைப்பாளிகள் பங்கு கொள்ள முடியும்.…

Continue Reading →