நாட்டை நாசமாக்கும் நால்வர் – மனோ கணேசன் தகவல்

மனோ கணேசன் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சம்பிக்க ரணவக்க, மேதானந்த எல்லாவல தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகர ஆகிய நால்வரும் நாட்டை நாசமாக்கி படுகுழியில் தள்ளுகிறார்கள். நாட்டின் தேசிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களை சிறுமைப்படுத்துவதையே இவர்கள் நால்வரும் தமது நாளாந்த நடவடிக்கைகளாகக் கொண்டுள்ளார்கள்.  இந்த நாட்டில் இன்று நடக்கும், தமிழ்-முஸ்லிம் இனத்தவர்களுக்கும், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தவர்களுக்கும் எதிரான அனைத்து இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கும் இந்த நால்வரும்தான் பொறுப்புக் கூற வேண்டும். இந்த நாட்டில் மத, இன நல்லிணக்கம் ஏற்படுத்தும் எண்ணம் இருக்குமானால் இந்த நால்வரையும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாடு மீளவே முடியாத படுபயங்கர அதள பாதாளத்தில் விழும் நாள் மிகத்தொலைவில் இல்லை. இந்தக் கருத்தை நமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Continue Reading →

Rajapakse Besieged In London, After Gota Denies Tamil Region

Dushy Ranetunge -[June 8, 2012 } On the eve of the Presidents visit to the UK to attend the Queens Diamond Jubilee, Gotabaya in his usual finger wagging style told the BBC that the north cannot be recognised as a “Tamil” region. In the run up to the first Presidential election, Mahinda Rajapakse told his Sinhala Buddhist electorate that he is from the “south”. Was he not indicating that he was from the Deep South, which is hard line Sinhalese? By denying that the North is a Tamil region, the Rajapakse’s are denying to the Tamils, what the Sinhalese take for granted in their perceptions of the Deep South and elsewhere. The “Tamil” identity of the North is no different to the Kandyan identity of the central highlands or the Rohona identity of the South. It is folly to deny them, as they are deep-rooted identities, which are embedded in the psyche of the different communities that inhabit this island. It was the Kandyans who first wanted federalism. The response one could expect in denying the “Tamil” identity of the North is no different to the response the Rajapakse’s could expect, if they were to deny the “Kandyan” identity of the highlands.

Continue Reading →

சிறுகதை: எங்கோ… யாரோ…யாருக்காகவோ…..

-  லெ. முருகபூபதி -“ சேர்… வவுனியா வந்திட்டுது.” சாரதி அருகில் அரைத்தூக்கத்திலிருந்த மூர்த்தியை தட்டி எழுப்பினான். அதிகாலை கொழும்பிலிருந்து புறப்படும்போது, ‘எப்படியும் காலை ஒன்பது மணிக்குள் வவுனியாவை வந்தடைந்துவிடலாம்’ என்று  சொன்ன சாரதி சொன்னபடி நிரூபித்தும்விட்டான். அந்த வாகனத்தையும் சாரதியையும் வெள்ளவத்தையில் அறிமுகப்படுத்திய நண்பனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டார் மூர்த்தி. போர் முடிந்து இரண்டுவருடங்களின் பின்னர் இலங்கை வந்திருந்த மூர்த்திக்கு இலங்கையில் பார்ப்பதற்கு சொந்தபந்தங்கள் என்று குறிப்பிடும்படியாக எவரும் இல்லை. பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு நாட்டில் புகலிடம்பெற்று, கடைகள் நடத்தலாம். சங்கங்களில் இணைந்திருக்கலாம். கோயில்கள் கட்டியிருக்கலாம். கடன் அட்டை மோசடிகளிலும் ஈடுபட்டிருக்கலாம். எழுத்தாளர்கள் ஆகியிருக்கலாம்…. அவர்களைப் பற்றிவரும் மின்னஞ்சல் தகவல்களும் தொலைபேசி அலட்டல்களும் மூர்த்திக்கு முக்கியத்துவமற்றுப்போய்விட்டன.

Continue Reading →