நீர்வை பொன்னையன் அவர்களது ‘நினைவலைகள்’ நூல் ஆய்வரங்கு (24.06.2012)!

நீர்வை பொன்னையன் ஒரு முற்போக்காளர், தளராத கொள்கைப் பிடிப்பாளர். மூத்த எழுத்தாளர். பல தசாப்தங்களாக எழுத்துத் துறையில் தொடர்ந்து ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பவர். இப்பொழுது அவர் தனது வாழ்க்கைப் பயணத்தின் அத்தியாயங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார். ஆம் 'நினைவலைகள்' என்பது அவரது அரசியல், கலை இலக்கிய. சமூகப் பயணத்தின் பதிவாக வெளிவர இருக்கிறது.நீர்வை பொன்னையன் ஒரு முற்போக்காளர், தளராத கொள்கைப் பிடிப்பாளர். மூத்த எழுத்தாளர். பல தசாப்தங்களாக எழுத்துத் துறையில் தொடர்ந்து ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பவர். இப்பொழுது அவர் தனது வாழ்க்கைப் பயணத்தின் அத்தியாயங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார். ஆம் ‘நினைவலைகள்’ என்பது அவரது அரசியல், கலை இலக்கிய. சமூகப் பயணத்தின் பதிவாக வெளிவர இருக்கிறது. அப்படியானால் இது அவரது சுயசரிதை எனலாமா? இல்லை என்கிறார்.. ” ‘நினைவலைகள்’ என்ற இந்த நூல் என் சுயசரிதையல்ல. நான் அரசியல்வாதியல்ல. இலக்கியவாதியுமல்ல. அரசியல் இலக்கியச் செயற்பாட்டாளன் நான். சிலர் எழுத்துத்துறையிலிருந்து அரசியலுக்குள் நுழைகிறார்கள். நான் அரசியல் களத்திலிருந்து எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தவன்……… எனது அரசியல், கலை இலக்கியச் செயற்பாடுகளில் என் நினைவுத்தடத்தில் உள்ளவற்றில் சிலவற்றை இந்த நூலில் தந்துள்ளேன்” என்கிறார். நிச்சயம் படிப்பதற்கு சுவார்ஸத்துடன், நிறையத் தகவல்களையும் உள்ளதாக இருக்கும் என நம்பலாம். ஏனெனில் யாழ்குடாநாட்டின் நீர்வேலியிலுள்ள ஒலிவைக் குறிச்சி எனப்படும், அக்காலத்தில் பின் தங்கியிருந்த பகுதியில் பிறந்தவர். அங்கிருந்து மட்டக்களப்பு, கல்கத்தா, மீண்டும் யாழ்ப்பாணம் கொழும்பு எனப் பல பிரதேசங்களில் வாழ்ந்ததால் கிடைத்த அனுபவங்களால் இந் நூல் சுவாரசியமானதாக இருக்கப் போதில்லை.

Continue Reading →

ஹூஸ்டன்: ஹூஸ்டன் வாழ் இந்தியத் தமிழர்களின் தலைவர் திரு. சாம் கண்ணப்பன் டெக்சாஸ் நிபுணத்துவ பொறியியலாளர்கள் வாரியத்தில் (Texas Professional Engineering Board) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹூஸ்டன்: ஹூஸ்டன் வாழ் இந்தியத் தமிழர்களின் தலைவர் திரு. சாம் கண்ணப்பன் டெக்சாஸ் நிபுணத்துவ பொறியியலாளர்கள்  வாரியத்தில் (Texas Professional Engineering Board) நியமிக்கப்பட்டுள்ளார். டெக்சாஸ் மாநில…

Continue Reading →

அதிகாரத்தில் அகப்பட்ட காலமும் வாழ்வும் (தீபச்செல்வனின் ‘கூடாரநிழல் ’ கவிதைகள் குறித்து…)

உலகில் எங்கெங்கு அடக்கப்பட்ட இனக்குழுமங்கள் தொடர்ந்தும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனவோ அங்கெல்லாம் ‘அதிகாரம்’ தன் கரங்களை அகல விரித்து வைத்திருக்கின்றது. இந்தத் தொடர் ஓட்டத்தில்தான் அகதிவாழ்வும் அடையாளஅழிப்பும் இந்த நூற்றாண்டிலும் பேசப்படும் சொற்றொடர்கள் ஆகியிருக்கின்றன. இனம், மொழி, பண்பாடுகளுக்கு அப்பால் ஓரினம் சந்திக்கின்ற அதே பேரழிவை இன்று தமிழினமும் சந்தித்திருக்கிறது. அதன் அடிப்படையில் எழுந்துள்ள கவிதைகளாகவே தீபச்செல்வனின் ‘கூடாரநிழல்’ கவிதைகளைக் கருதமுடிகிறது. மக்களை எவ்வளவு தூரம் விளிம்புநிலைக்குக் கொண்டு வந்து விடமுடியுமோ அந்த வேலையை யுத்தம் செய்து முடித்திருக்கிறது. கொளுத்தும் வெய்யிலிலும் கொட்டும் மழையிலும் வாட்டும் நோயிலும் பசியும் தாகமும் உந்தித்தள்ள நேரத்திற்கு நேரம் கையேந்தி வாழவேண்டிய அவலநிலையை அது உண்டாக்கியிருக்கிறது. தொடர்ச்சியான அகதிவாழ்வும் அவலங்களும் அடையாள அழிப்பும் இரக்கமில்லாதவர்களிடம் இரக்க வைத்திருக்கிறது. பேதலித்த மனங்கள் ஒருபுறமும் இழந்துவிட்ட உறவுகள் மறுபுறமும் இருப்பவர்களையும் காப்பாற்ற வழியில்லாது தவிக்கும் இரண்டகநிலை இன்னொருபுறமுமாக எல்லாம் சேர்ந்த குழப்பநிலையில் வாழ்ந்த மக்களின் கண்ணீர்க் கதைகள் தான் இந்தக் கவிதைகள்.

Continue Reading →