சிறுகதை: நெய் பிஸ்கட்

ஜெயந்தி சங்கர் -“பேசாம தற்கொல பண்ணிக்லாம்னு தோணுது, மிஸிஸ் வாங்”, என்று முனகினார். சட்டென்று என் மூளை ஸ்தம்பித்தே விட்டது. உடம்பு சரியில்லையோ. எழுபதைக் கடந்த ஒரு மூதாட்டியின் வாயிலிருந்து இப்படியான சொல் வருவதென்றால்? என்ன சொன்னார் என்றே புரியாதபடி முதலில் மிகுந்த மென்குரலில் முனகினார். இரண்டாவது தடவை சற்றே குரலை உயர்த்திச் சொன்ன போது தான் எனக்கு சொற்களே புரிந்தன. கைபேசியில் மின்னிய இலக்கத்திலிருந்து தான் கூப்பிட்டது ஃபாதிமா என்றே தெரிந்தது. நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்த போதிலும் பல்லாண்டுகளாகத் தனியே இருந்தார்கள் அவரும் அலியும். அதை நினைத்து மறுகுவதே அவர்கள் அனுபவிக்கும் ஆகக் கொடிய துயரம். இரண்டு மணிநேரமாகச் சூழலை மறந்து மூழ்கியிருந்த முக்கியக் கோப்பிலிருந்து என் கவனம் முற்றிலும் விலகியிருந்தது.

Continue Reading →

திருக்குமரனின் ‘விழுங்கப்பட்ட விதைகள்’ மீதான எனது பார்வை!

திருக்குமரனின் 'விழுங்கப்பட்ட விதைகள்' மீதான எனது பார்வை!முல்லை அமுதன்உலகை  அசைத்துப் பார்க்கிற  படைப்புக்கள்  நமக்கு  அவசியம்  தேவையாக இருக்கின்றது. மறுக்க முடியாத  படி தொடர்ச்சியான  அவலங்களை  காலம்  நமக்கு  தந்து கொண்டிருகின்றது. முடிவில்லாத  சோகத்திலும்  ஓரளவேனும்  ஒத்தடம்  கொடுப்பது  போல ஈழத்து படைப்புக்கள் அமைந்துவிடுகின்றன. மஹாகவி  போன்றோரால்  தொடக்கி  வைக்கப்பட்ட  மண்,மக்கள் சார்ந்து  சிந்திக்க  வைக்கிற  கவிதைகளை  வாசிக்க  வைத்திருபதற்காக  காலத்திற்கு  நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இடப்பெயர்ச்சி, யுத்த அவலம்,இனசம்ஹாரங்கள் என தொடர்கின்ற  நமது  ரண களப் பயணத்தில் திருக்குமாரன்  வரை  தம்  படைப்புக்களூடே மறைக்கப்பட்ட, மறைக்கப்படமுடியாத  தடங்களை சொல்லிவைக்கிறார்கள். புதுவையின் உச்சஸ்தாயிலமைந்த  கவிதையிலிருந்து மாறுபட்டதாக கருணாகரன், சித்தாந்தன், துவாரகன், தீபச்செல்வன், அமரதாஸ், முல்லைக்கோணேஸ், ஆதிலட்சுமி, கப்டன். வானதி, மேஜர்.பாரதி, நிலாந்தன், போஸ், அகிலன், யோ.கர்ணன் எனப் பலர்  போர் அவலங்களை  சொல்லி  வந்திருக்கிறார்கள். வித்தியாசமான வடிவமைப்பில் ஆழமாக மனதில் படியும்  வண்ணம்  எழுதுபவர்கள் வரிசையில்  திருக்குமாரனும்  இடம்பெறுகிறார்.

Continue Reading →