குடியுரிமை / குடிவரவு கனடா: கனடாவின் குடிவரவு அமைப்பை பாதுகாப்பதற்கான சட்டம் அரச இசைவு பெறுகிறது

மந்திரி கென்னீ ஒட்டாவா, ஜூ ன் 29, 2012 —கனடாவின் குடிவரவு அமைப்பை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவும் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரச இசைவு பெற்றதை குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்கலாச்சார துறை மந்திரி ஜேசன் கென்னீ  இன்று வரவேற்றுள்ளார்: “இந்த சட்டமானது வெளிநாட்டு குற்றவாளிகள், ஆள் கடத்தல்காரர்கள் மற்றும் கண்டுபிடிக்கப்படாத அகதி கோரல்களுடையவர்கள் ஆகியோர் கனடாவின் தாராளத்தன்மையுடைய குடிவரவு அமைப்பை துர்பிரயோகம் செய்வதையும் வரி செலுத்துவோரால் நிதிபெறும் ஆரோக்கியம் மற்றும் சமுதாய நன்மைகள் பெறுவதையும் தடுத்து நிறுத்தும்” என்று மந்திரி கென்னீ குறிப்பிட்டார். “கனடாவின் குடிவரவு மற்றும் அகதி அமைப்பு என்பது உலகத்திலேயே மிக நேர்மையான மற்றும் தாராளத்தன்மையுடைய அமைப்புகளில் ஒன்றாகும், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அமைப்பிலும் அது அப்படியே தொடரும்.”

Continue Reading →

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பரிசளிப்பு விழா

புலம்பெயர்ந்த மண்ணில் இன்று அதிக தமிழர்கள் வாழும் இடமாகக் கனடா திகழ்கின்றது. புலம் பெயர்ந்த மக்களின் தாய் மொழியைக் காப்பதில் ஒன்ராறியோ அரசாங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. ஒன்ராறியோ கல்விச் சபைகளில் தமிழ் மொழி கற்கும் மாணவர்களுக்கான தமிழ் மொழித் திறன் காணல் போட்டி ஒன்றை ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் சமீபத்தில் நடத்தியிருந்தது. அவர்கள் நடத்திய தமிழ் மொழித்திறன் காணல் போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 17-06-2012 ஸ்காபரோ பெலாமி வீதியில் அமைந்துள்ள பெரியசிவன் ஆலயக் கலை அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.