திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “சுடுமணல்” நாவலின் மலையாள மொழி பெயர்ப்பு நூல் வெளியிட்டு விழா!

திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின்  “சுடுமணல்” நாவலின்  மலையாள மொழி பெயர்ப்பு நூல்  வெளியிட்டு விழா ஞாயிறு மாலை  காந்திநகர்   மத்திய அரிமா  சங்கத்தில் நடைபெற்றதுதிருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின்  “சுடுமணல்” நாவலின்  மலையாள மொழி பெயர்ப்பு நூல்  வெளியிட்டு விழா ஞாயிறு மாலை  காந்திநகர்   மத்திய அரிமா  சங்கத்தில் நடைபெற்றது. சு. மூர்த்தி   ( கல்விக் கூட்டமைப்பு , தலைவர், திருப்பூர்), தலைமை தாங்கினார். மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கனடா நாட்டில் வாழும்   தமிழ் எழுத்தாளர் அகில் நூலை வெளியிட மணி (  தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநிலத் தலைவர்) பெற்றுக்கொண்டார்.. தேசியம் என்பது கற்பிதம் என்பதினை வெளிப்படுத்தும் வகையில் நதிநீர் பிரச்சினையில் தமிழர்கள் அவதியுறுவதை இந்த நாவல் வெளிப்படுகிறது. இது தமிழில் 3 பதிப்புகள் வந்துள்ளது. மலையாளத்தில் சபி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதை திருவனந்தபுரத்தைச் சார்ந்த சிந்தா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.( இதற்கு முன்பே சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை என்ற நாவல் மலையாளத்தில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளது. )மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். * கனடா அகிலின் “ கூடுகள் சிதைந்தபோது “ சிறுகதை தொகுப்பை  வழக்கறிஞர் ரவி  அறிமுகம் செய்தார்.* மாற்றுக் கல்வி குறித்த நூல்கள் பாவ்லோவின் ” யதார்தத்தை வாசித்தலும் எழுதுதலும்” மற்றும் கிருஸ்ணகுமாரின் “முரண்பாடுகளிலிருந்து கற்றல்” ஆகியவற்றை  பற்றி மருத்துவர் சு. முத்துசாமி(தாய்த்தமிழ்ப் பள்ளி, பாண்டியன்நகர்), வழக்கறிஞர்கள் நீலவேந்தன், கனகசபை, சிவகாமி,ஈஸ்வரன், இளஞாயிறு, வெற்றிச் செல்வன், நந்த கோபால் ஆகியோர் பேசினர்.

Continue Reading →

வசந்தி தயாபரனின் ‘காலமாம் வனம்’ என்ற சிறுகதை நூல்!

வசந்தி தயாபரனின் 'காலமாம் வனம்' என்ற சிறுகதை நூல்  வெளியீடு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (2012, யூன் 10ம் திகதி) மாலை நடைபெற இருக்கிறது. வசந்தி தயாபரனின் ‘காலமாம் வனம்’ என்ற சிறுகதை நூல்  வெளியீடு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (2012, யூன் 10ம் திகதி) மாலை நடைபெற இருக்கிறது. வெள்ளவத்தை 57ம் ஒழுங்கையில் (உருத்தரா மாவத்தை) கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பி.ப 5.30 மணிக்கு விழா ஆரம்பமாகும். பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தின் பணிப்பாளரான கலாநிதி.செல்வி திருச்சந்திரன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார். ‘காலமாம் வனம்’ நூல் வெளியீட்டு விழாவில் நூல் வெளியீட்டு உரையை டொக்டர்.எம்.கே.முருகானந்தன்  நிகழ்த்துகிறார். முதற் பிரதியை பெறுபவர் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்களாகும். சிறப்புப் பிரதியை மூத்த பத்திரிகையாளரான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை பெறுகிறார். நூல் பற்றிய கருத்துரையை வழங்க இருப்பவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா ஆவார். இவர் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் மொழிகள் பண்பாட்டுத் துறைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க இருப்பவர்கள் திரு. திருமதி தெளிவத்தை ஜோசப் அவர்களாவார். இருதய சத்திரசிகி்ச்சைக்கு் பின்னான அவரது முதல் இலக்கிய நிகழ்வு இது என்பது குறிப்படத்தக்கது. அதைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்துப் பாட இருப்பவர் திருமதி சொர்ணலதா பிரதாபன்( ஆசிரியை சென் கிளயர்ஸ் கல்லூரி) ஆவார். நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்புரையை திரு.மு.தயாபரன் ஆற்ற, இறுதி நிகழ்வாக ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் திருமதி வசந்தி தயாபரன் வழங்குவார்.

Continue Reading →

(29) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

- வெங்கட் சாமிநாதன் -சமீபத்திய இரு தமிழ்ப் படங்களைப் பற்றி எழுதுவதாகச் சொன்னேன். அந்த இரண்டையும் பார்த்து வெகு நாட்களாகி விட்டன. ஆகவே சிறு சிறு தகவல்களுக்கு விரிவாகச் செல்ல முடியாது. அவசியமும் இல்லை. இங்கு எந்தப் படத்தைப் பற்றியும் கதா பாத்திரங்கள் ஒவ்வொருவராக, அல்லது காட்சிகள் எது பற்றியும் விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது மனதில் தோன்றியதையும் இப்போது அந்த இரு படங்கள பற்றி மனதில் படிந்துள்ள எண்ணங்கள் பற்றியும் சொன்னாலே போதும். அவற்றைச் சொல்லி நகர்வது தான் என் உத்தேசமும். யாரையும் என் தரப்புக்கு மனமாற்றம் செய்யும் நோக்கமில்லை. எது பற்றியும் அவரவர் தம் எண்ணங்களைச் சொல்லி சர்ச்சித்து ஒருவர் மற்றவர் எண்ணவோட்டங்களைப் புரிந்து கொள்வது என்பது இன்றைய தமிழ்ச் சூழலில், சினிமா பற்றியும் அரசியல் பற்றியும் சாத்தியமில்லை. அம்மாதிரியான ஒரு கலாசாரத்தை, சூழலை நாம் வளர்த்துக்கொள்ளவில்லை. தனக்குப் பிடிக்காத அல்ல்து  தாம் வணங்கித் தொழும், போற்றித் தோத்திரம் பாடும் நக்ஷத்திரங்களையோ, அரசியல் தலைமைகளைப் பற்றியோ ஒரு மாறிய அபிப்ராயத்தைச் சொல்லி விட்டாலே, உடனே ஜாதிக்குண்டாந்தடியை எடுத்து வீசும் மூர்க்கத்தனம் இங்கு பரவலாக வளர்ந்து முற்றிக் கிடக்கிறாது. தனக்குப் பிடிக்காதது எதுவும் பேசப்படக் கூடாது என்ற மூர்க்கத் தனம் இங்கு ஆட்சி செலுத்துகிறது. அவர்களுக்கு ஆண்டவன் அறிவையும் உணர்வுகளையும் எதற்குக் கொடுத்துள்ளான்? சரி ஆண்டவன் கொடுக்கவில்லை, தந்தை பெரியார் சொல்லிவிட்டார். இந்த சமாசாரங்கள் இவர்கள் மண்டையிலும் இதயத்திலும் எதற்கு இருக்கிறது?, இவர்கள் யாராலோ பிடித்து வைக்கப்பட்ட களிமண் பொம்மைகளாக, சூளையில் சுட்டு இறுகிவிட்டவையாக இருந்தால் அவற்றை நாம் என்ன செய்ய முடியும்?

Continue Reading →

தொடர்நாவல்: மனக்கண் (15 & 16)

15-ம் அத்தியாயம்: மழை நீராட்டு!

15-ம் அத்தியாயம்: மழை நீராட்டு!தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமிஅடுத்த வாரம் டாக்டர் சுரேஷ் சீமைக்குப் பயணமானான். ஸ்ரீதர் அவனுக்குத் தான் வாக்களித்த பிரகாரம் விலை உயர்ந்த உடைகளைப் பரிசளித்தான். கொழும்புத் துறைமுகத்தில் அவனை வழியனுப்பப் பத்மாவுடன் அவன் போயிருந்தான். அவர்களைத் தவிர சுரேஷின் சொந்தக்காரரான வெள்ளவத்தைக் கடைகாரர், அவனது மாமனார், மற்றும் நண்பர்கள் பலரும் துறைமுகத்துக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் அவனை வாழ்த்தி வழியனுப்பினார்கள். ஆனால் சுரேஷைப் பிரிவதற்கு மற்றவர்கள் எல்லோரிலும் பார்க்க ஸ்ரீதரே கஷ்டப்பட்டான். சுமார் ஐந்து வருடங்களாக அவனது வாழ்க்கையில் முற்றாக ஒட்டிக் கொண்டு இரவும் பகலும் கூடி வாழ்ந்த அறிவு நிறைந்த அருமை நண்பனல்லவா? ஆகவே அவனது பிரிவு ஸ்ரீதரை அப்படியே ஆட்டிவிடும் போலிருந்தது. இனித் தொட்டதற்கெல்லாம் ஆலோசனைகள் கேட்பதற்கும், மனதிலுள்ளவற்றையெல்லாம் கொட்டிப் பேசுவதற்கும் எங்கு போவது? அதை நினைத்ததும் கப்பல் புறப்படும் நேரம் வந்த போது ஸ்ரீதரின் கண்கள் கலங்கிவிட்டன. சுரேஷ் சிரித்துக் கொண்டு அவன் கலங்கிய கண்களைத் துடைத்து விட்டான். “ஸ்ரீதர்! நான் இங்கிலாந்திலிருந்து மீள இரண்டு வருடங்களாகும். அதற்கிடையில் உன்னுடைய கல்யாணம் நடந்து முடிந்து விடுமல்லவா? நான் மீண்டு வரும்பொழுது ஒரு சின்ன ஸ்ரீதர் உன் கையைப் பற்றிக் கொண்டு ஓடித் திரிவான்! நான் இலங்கை வந்ததும் முதலில் உன்னைத்தான் சந்திப்பேன். அதன் பின் எனது திருமணமும் நடைபெறும். நீ அதற்குக் கட்டாயம் வர வேண்டும். அது தவிர உனது சுகம் பற்றி எனக்கு அடிக்கடி கடிதங்கள் எழுத மறக்காதே. நானும் உடனுக்குடன் பதில் போடுவேன்.” என்று கூறினான் சுரேஷ்.

Continue Reading →