[முகநூலில் வெளிவரும் கலை / இலக்கியக் குறிப்புகள் அவ்வப்போது இப்பகுதியில் பிரசுரமாகும்.- பதிவுகள்-]
இந்தச் சீனத்து கவிதைகளை மொழிபெயர்த்த திரு.வை.சுந்தரேசன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இந்தக் கவிதைத் தொகுப்பு 1990-களின் மத்தியில் வெளிவந்ததாக அறியமுடிகிறது. (புத்தகத்தில், காலம் குறித்தோ/ தேதி குறித்தோ எந்தத் தகவலுமில்லை) இக் கவிதைகள் மொழிபெயர்ப்பே என்றாலும்.. தமிழீழப் பிரச்சனையின் பின் புலத்தில் வைத்துப் பார்க்க முடியும். உள்நாட்டு யுத்தம் நடக்கும் காலகட்டங்களில், அந் நாட்டில் வாழும் மக்கள் கலைஞர்கள் மேற்கொள்ளும் யுக்திகளில் ஒன்றாக, இப்படியான செயல்பாடுகளை பார்க்கிறார்கள். உலகப் பார்வையிலும் இது வரவேற்கப்படுகிறது.