இடம்: யாழ் மங்கையர்க்கரசி வித்தியாலயம் நல்லூர் (கோவில் பின் வீதி )காலம்: 24 .06 .2012 மாலை 2 .00 மணி -5 .00 மணி வரைதலைவர்…
அ.முத்துலிங்கம் அவர்களின் சமீப நூல்கள் பற்றிய கட்டுரைப் போட்டியொன்றை “கனவு” அறிவித்திருந்தது. அதில் தேர்வு பெற்ற கட்டுரையாளர்கள் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான சன்மானம் அனுப்பி வைக்கப்படும்: போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.. இக்கட்டுரைகளும், வேறு சில அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளும் சேர்த்து ஒரு தொகுப்பாக்க எண்ணமிருக்கிறது.
திருவாளர்கள்:
1. மு.இராமநாதன், சென்னை
2. சைலபதி, சென்னை
3. நா.அனுராதா, மதுரை
4..சுமதிராம், கோவை
5. பாரதிவாணர் சிவா, புதுச்சேரி
6. பிரபாகர், தக்கலை, கன்னியாகுமரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த யூன் 16, 2012 அன்று ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தது. முக்கியமாக மூன்று தலைப்புகளில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. (1) தாயகத்தில் போரினால் இடப் பெயர்வுக்கு உள்ளாகி மக்களது பொருண்மிய வாழ்வாதாரச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் (2) தமிழர்களின் அரசியல் எதிர்காலம் (3) ஊடகங்கள் வகிக்கும் பாத்திரமும் பங்களிப்பும் ஆகியவையே அந்தத் தலைப்புகளாகும். அரசியல் கைதிகளின் விடுதலை, சிங்களக் குடியேற்றம், சிங்கள இராணுவத்தால் நில அபகரிப்பு, கிழக்கு மாகாண சபைத் தேர்தல், தாயகத்தில் இடம்பெறும் பண்பாட்டுச் சிதைவு ஆகியவை பற்றியும் ஆராயப்பட்டன. அஞ்சப்பர் உணவகத்தில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் 25 பேர் கலந்து கொண்டார்கள். ததேகூ (கனடா) தலைவர் வே. தங்கவேலு தலைமையில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் வேறு அமைப்புக்களை சார்ந்த செயற்பாட்டாளர்களும் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது. தாயகத்தில் நிலப் பறிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு சமாந்தரமாக புலத்திலும் ஆர்ப்பட்டங்களை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இதன் பொருட்டு ரொறன்ரோ மாநகரத்தில் உள்ள ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் உட்பட அனைத்து அமைப்புக்களது ஒத்துழைப்பைக் கேட்பது என முடிவாகியது.
[ முகநூல் குறிப்புகள்: முகநூலில் பதிவுசெய்தவர்: பாஸ்டன் பாலா] எஸ்.ரா: வாழ்வது என்பதே ஒரு மாயம் தான். தீராநதி பிப்ரவரி 2005 இதழில் எனது நேர்முகம் வெளியாகியிருக்கிறது. அப்பேட்டியின் சில பகுதிகள் அவர்களால் வெளியிடப்படவில்லை. இணைய வாசகர்களுக்காக முழுமையான நேர்முகம் பிரசுரிக்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் எனது வாழ்க்கை குறிப்புகள் சார்ந்த கேள்விகள் அடங்கிய எனது நேர்முகம் முன்னதாக காலச்சுவடு இதழிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் குமுதம் இலக்கியமலரிலும் வெளியாகியிருக்கின்றன. ஆகவே அக்கேள்விகள் இந்த சந்திப்பில் இடம் பெறவில்லை. –
1) புதுவகை எழுத்துகள் ஒரு போக்காக தமிழில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த வகை எழுத்துக்களை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்போது யதார்த்தவாதம் முடிந்துவிட்டது கதை யம்சம் தேவையில்லை என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன ஆனால் அப்போதும் புதுமுயற்சிகளை செய்தவர்களில் நீங்கள் மட்டும் கதையம்சம் கொண்ட கதைகளை எழுதி வந்தீர்கள். அது சார்ந்து குறிப்பாக அப்போது நடைபெற்ற விவாதங்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்.?