விஜய் தொலைக்காட்சியின் ‘ஏர்டல் சுப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியின் மூலம் உலகத் தமிழர்களின் மத்தியில் மிகுந்த ஆதரவையும், அன்பையும் பெற்ற இளைய பாடகி மகிஷாவின் இசைப்பயணம் நிறைவு…
[எழுத்தாளர் விந்தனின் நினைவுதினமான ஜூன் 30இனையொட்டி அவர் பற்றிய இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்] எழுத்துலகில் “விந்தன்’ என்று அறியப்படும் கோவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வேதாசலம்-ஜானகி இணையருக்கு மகனாகப் பிறந்தார். அவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியது சென்னைப் பட்டினம். சூளைப் பகுதியில்தான் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். பிடித்தமான தொழில் இல்லாவிட்டாலும் வேறு சிறு சிறு தொழிலையும் செய்ய வேண்டிய கட்டாயம். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. அச்சுக் கோக்கும் தொழில் அவருக்கு உதவியது. இயற்கையிலேயே தமிழ்ப் பற்றும் புத்திக் கூர்மையும் உடைய விந்தன், அச்சகத்தில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றத் தொடங்கினார். அச்சுத் தொழிலாளியாக இருந்து, மேதையாக மாறிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி.க்கு அடுத்து விந்தனைக் கூறலாம். மாசிலாமணி முதலியார் நடத்திய “தமிழரசு’ மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். அப்போது பாரதிதாசனாரின் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற கவிதையை அச்சுக் கோத்ததைப் பெருமையாகச் சொல்வார் கோவிந்தன்.
[ தனிமனிதராக நின்று இத்தனை வருடங்களாகச் சளைக்காமல், களைக்காமல் ‘மல்லிகை’ மாத இதழினை நடாத்திவரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்த தினம் ஜூன் 27. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவரது சிறுகதைகள் முக்கியமானவை. இலங்கை அரசின் சாகித்திய அகாடமி விருது, கனடாவிலிருந்து சுயாதீன திரைப்பட அமைப்பினரின் ‘அகேனம்’ இலககிய விருது ஆகியவற்றைப் பெற்றவர். எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினத்தையொட்டி அவரைப் பற்றிய விக்கிபீடியாக் குறிப்புகள் பிரசுரமாகின்றன- பதிவுகள் -] டொமினிக் ஜீவா (பிறந்த திகதி: ஜூன் 27, 1927, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முக்கியமான ஒரு சிறுகதையாசிரியர், பதிப்பாளர். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.
அன்புள்ள தமிழ் நண்பர்களே! “மானிட ஜாதியை ஆட்டிவைப்பேன்- அவர் மாண்டுவிட்டாலதைப் பாடிவைப்பேன்- நான் நிரந்தரமானவன் அழிவதில்லை- எந்த நிலையிலுமெனக்கு மரணமில்லை!” இது போன்ற மணியான கருத்து நிறைந்த…