வாசிப்பும், யோசிப்பும் 140 : எழுத்தாளர் என்றால் யார்? யார்? முகநூலில் ஓர் அலசல்!

வாசிப்பும், யோசிப்பும்  140 : எழுத்தாளர் என்றால் யார்? யார்? முகநூலில் ஓர் அலசல்!எழுத்தாளர் பற்றி எழுத்தாளர் குப்பிளான் சண்முகம் தனது முகநூற் பதிவொன்றில் “கதை. கவிதை, கட்டுரை எழுதுபவர்களையே “எழுத்தாளர்” எனக் கொள்லாமென நம்பியிருந்தேன். அண்மைகாலங்களில் கட்டுரை எழுதுபவர்களுயும் எழுத்தாளர் எனக் கொள்ளலாமென ஒரு கருத்து மேலோங்கி இருக்கிறது என்னால் இதுபற்றி தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?.” என்றொரு வினாவினை எழுப்பியிருந்தார். அது பற்றிய எனது சிந்தனை கீழே.

எழுத்தாளன் என்பதற்குப் பல அர்த்தங்களுள்ளன. எழுத்தை ஆள்பவர் என்பது ஓர் அர்த்தம். ஆனால் எழுத்தாளன் என்னும் சொல் உருவானது அந்த அர்த்தத்தில் மட்டுமல்ல. ஆளன் என்பது விகுதி. அந்த விகுதியைக்கொண்டு அமைக்கப்பட்ட சொல்தான் எழுத்தாளன் என்பதுவும். அந்த அர்த்தத்தில் இங்கு எழுத்து என்பதுடன் ஆளன் என்னும் விகுதியைச்சேர்த்து உருவாக்கப்பட்ட சொல்லாக எழுத்தாளன் வருகின்றது. உதாரணமாக பேச்சு + ஆளன் = பேச்சாளன். எனவே கட்டுரை மட்டுமல்ல எழுத்தின் எந்த வடிவத்தினையும் கையாள்பவனை எழுத்தாளன் என்றும், பொதுவாக எழுத்தாளர் என்று அழைப்பதில் எந்த விதத்தவறுமில்லை.

Rajaji Rajagopalan ஆளன் என்னும் விகுதிக்கு நீங்கள் தந்த விளக்கம் அர்த்தமுள்ளது. எழுதும் எல்லாரும் எழுத்தையே தமது சிந்தனைக்கு உருவம் கொடுக்கும் ஆயுதமாகக் கொள்கிறார்கள்.

Sri Sritharan ஆங்கிலத்தில் writer, author என இரண்டு வெவ்வேறு சொற்கள் உள்ளன. https://en.wikipedia.org/wiki/Author

Jeeva Kumaran எனக்கு அறிவு தெரிந்த காலத்தில் புனைவு இலக்கியம் (FICTION: சிறறுதை-கதை-நாவல்-கவிதை-நாடகம்) போன்ற இலக்கிய வடிவங்களைப் படைத்தவர்களை ஆக்க (CREATIVE WRITERS) எழுத்தாளர்கள் என்றும்…. மற்றைய வகை நூல்களை எழுதியவர்களை நூலாசிரியர் என்றும் அழைத்ததாக ஞாபகம்.

F.ex: Writer Mr. Jeyakanthan: Authour Mr. Sivathamby

ஆனால் பத்தி எழுத்துகளும்… புனைவு இலக்கிய ஆசிரியர்களே பத்தி எழுத்துக்குள் வந்ததும் அவர்களை அங்கே வேறுபடுத்தாது அதே எழுத்தாளர்கள் தலையங்கத்துடன் பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. இன்று எழுதுபவன் எல்லாம் எழுத்தாளராயும் கவிஞனும் என்றாகி விட்டது என்று நினைக்கின்றேன்

Continue Reading →

இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று இன்புற்றிருப்போம்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இன்று பிறக்குமிப்புத்தாண்டில்
இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று
இன்புற்றிருப்போம்!
கொன்றழிக்கும் கவலை நீக்கி,
எண்ணமதைத் திண்ணமுற
இசைத்துக்கொண்டு,
மனதினில் உறுதி கொண்டு,
வாக்கினில் இனிமையேற்றி,
நினைவு நல்லது நாடி,
மண் பயனுற வேண்டி,
இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று
இன்புற்றிருப்போம்!
இன்புற்றிருப்போம் இனிவருமாண்டில்.
இன்புற்றிருப்போம்! இன்புற்றிருப்போம்!
பதிவுகள் வாசகர்கள் அனைவருக்குமெம்
அகம் திறந்து வாழ்த்துகின்றோம்:
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

பதிவுகள்’ வாசகர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் தனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. அனைவரது வாழ்விலும் அவர்தம் எண்ணங்கள் இப்புதிய ஆண்டில் ஈடேறட்டும். தொடர்ந்தும் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் ஈழத்தமிழர்கள் வாழ்வில் இந்த வருடமாவது நல்லதொரு முடிவினைக்கொண்டு வரட்டும். அல்லவற்றைத் தவிர்த்து, நல்லவற்றை நாடிப் பயணங்கள் தொடரட்டும்; பிறப்பு சிறக்கட்டும்

Continue Reading →

அழியாத கோலங்கள் : யாழ் றியோவில் பார்த்த சார்ல்ஸ் புரோன்சனின் ‘ரெட் சன்’ (Red Sun)

அழியாத கோலங்கள் 1 : யாழ் றியோவில் பார்த்த சார்ல்ஸ் புரோன்சனின் ‘ரெட் சன்’ (Red Sun)

என் பதின்ம வயதினில் , யாழ் றியோ திரையரங்கில் (திரையரங்காக மாற்றப்பட்ட யாழ் நகரசபை மண்டபங்களிலொன்று, யாழ் சுப்பிரமணியம் பூங்காவுக்கு அண்மையிலிருந்தது) , என் நண்பர்களுடன் பார்த்த 'வெஸ்டேர்ன்' திரைப்படங்களில் மறக்க முடியாத திரைப்படம் 'Red Sun'. நான் பார்த்த முதலாவது சார்ஸ்ல்ஸ் புரோன்சனின் திரைப்படம் இதுதான். இதனைத்தொடர்ந்து அவரது திரைப்படங்களைத்தேடிப்பார்த்தது நினைவுக்கு வருகிறது.

என் பதின்ம வயதினில் , யாழ் றியோ திரையரங்கில் (திரையரங்காக மாற்றப்பட்ட யாழ் நகரசபை மண்டபங்களிலொன்று, யாழ் சுப்பிரமணியம் பூங்காவுக்கு அண்மையிலிருந்தது) , என் நண்பர்களுடன் பார்த்த 'வெஸ்டேர்ன்' திரைப்படங்களில் மறக்க முடியாத திரைப்படம் 'Red Sun'. நான் பார்த்த முதலாவது சார்ஸ்ல்ஸ் புரோன்சனின் திரைப்படம் இதுதான். இதனைத்தொடர்ந்து அவரது திரைப்படங்களைத்தேடிப்பார்த்தது நினைவுக்கு வருகிறது.என் பதின்ம வயதினில் , யாழ் றியோ திரையரங்கில் (திரையரங்காக மாற்றப்பட்ட யாழ் நகரசபை மண்டபங்களிலொன்று, யாழ் சுப்பிரமணியம் பூங்காவுக்கு அண்மையிலிருந்தது) , என் நண்பர்களுடன் பார்த்த ‘வெஸ்டேர்ன்’ திரைப்படங்களில் மறக்க முடியாத திரைப்படம் ‘Red Sun’. நான் பார்த்த முதலாவது சார்ஸ்ல்ஸ் புரோன்சனின் திரைப்படம் இதுதான். இதனைத்தொடர்ந்து அவரது திரைப்படங்களைத்தேடிப்பார்த்தது நினைவுக்கு வருகிறது.

கதை இதுதான்: கொள்ளையர்களான சார்ல்ஸ் புரோன்சனும், அலென் டெலோன் (Alain Delon) குழுவினரும் விரைந்து கொண்டிருக்கும் புகையிரதமொன்றைக் கொள்ளையிடுகின்றார்கள். அந்தப்புகையிரத்ததில் ஒரு பெட்டியில் யப்பானிய தூதுவர், ஜனாதிபதிக்கு அன்பளிப்பாகக்கொடுப்பதற்காக ஒரு தங்க வாளொன்றினையும் கொண்டு வருகின்றார். அவருக்குப்பாதுகாப்பாக அவருடன் கூட ‘சாமுராய்’ போர் வீரர்கள் சிலரும் வருகின்றார்கள். கொள்ளையடித்துச்செல்கையில் அலென் டெலொன் யப்பானியத்தூதரிடமிருந்த தங்க வாளினையும் சார்ள்ஸ் புரோன்சனுக்குத்தெரியாமல் கொள்ளையடித்துக்கொண்டு செல்கின்றார். அவரது குழுவினர் சார்ள்ஸ் புரோன்சனிருந்த புகையிரதப்பெட்டியின் மீது குண்டுகளை வீசிவிட்டுச் செல்கின்றார்கள். சாகக்கிடந்த சார்ல்ஸ் புரோன்சனை  யப்பானியத்தூதுவர் காப்பாற்றுகின்றார். அவ்விதம் காப்பாற்றிய யப்பானிய தூதுவருக்கு உதவும் பொருட்டு, ஏழு நாள்களுக்குள் அவர் இழந்த அந்த அந்தத்தங்க வாளினை மீளக்கைப்பற்றி அவரிடம் ஒப்படைப்பதற்காகச் செல்லும் சார்ல்ஸ் புரோன்சனுக்குத் துணையாக யப்பானியத்தூதுவர் தன் பாதுகாவலர்களில் ஒருவரையும் கூட அனுப்பி வைக்கின்றார். அந்தச் சாமுராயாக யப்பானிய நடிகர் Toshiro Mifune அற்புதமாக நடித்திருப்பார்.

Continue Reading →

அழியாத கோலங்கள்: சாகாதவரம் பெற்ற வேதாள மாயாத்மா!

அழியாத கோலங்கள்: சாகாதவரம் பெற்ற வேதாள மாயாத்மா!

வேதாள மாயாத்மா ஆழநடுக்காட்டில்...எம் பால்ய காலத்தில், குறிப்பாகப் பதின்ம வயதுப்பருவத்தில் நான் வாசித்த ‘காமிக்ஸ்’களின் அளவு கணக்கிலடங்காதவை. ஆரம்பத்தில் விகடன், கல்கி, குமுதம் போன்றவற்றில் வெளியான சித்திரக்கதைகளுடன் என் ‘காமிக்ஸ்’ வாசிப்பு ஆரம்பமாகிவிட்டது. குமுதத்தில் வெளியான ‘கடற்கன்னி’, விகடனில் வெளியான ‘கிங்கரனும், சங்கரனும்’, மற்றும் கல்கியில் வெளியான ‘ஓநாய்க்கோட்டை’ இவ்விதமான ஆரம்பமான என் சித்திரக்கதைகளின் மீதான ஆர்வத்தை டால்டன் பிரசுரமாக வெளிவந்த பொன்மலர் , பால்கன் மற்றும் இந்திரஜால் காமிக்ஸ்ஸில் வெளியான வேதாள மாயாத்மாவின் சாகசக்கதைகள் ஆகியன ஆக்கிரமித்துக்கொண்டன.

பொன்மலர், பால்கன் ஆகிய இரு இதழ்களும் மாத இதழ்களாக வெளிவந்ததாக ஞாபகம். அவை ‘Tabloid’ அளவில் ஏனைய இதழ்களை விடப் பெரிதாக வெளிவந்ததாக ஞாபகம். இவற்றில் பல சித்திரக்கதைத்தொடர்கள் (எல்லாமே மேனாடுகளில் வெளியான காமிக்ஸ்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளே), மற்றும் நாகரிகத்தின் வரலாறு, சாகசம் மிக்க கடற்பயணங்களின் வரலாறு போன்ற அம்சங்களை உள்ளடக்கிய ஆக்கங்கள் மிகவும் அழகான வர்ண ஓவியங்களுடன் வெளியாகிய இதழ்கள் அவை. ஆனால் அவற்றில் ஒரிதழைக்கூட இணையத்தில் இதுவரையில் என்னால் தேடி எடுக்க முடியவில்லை என்பது இன்னும் ஒரு குறையாகவேயுள்ளது.

Continue Reading →