சங்ககாலத்தெய்வ வழிபாடு!

த.சிவபாலுதமிழர் பண்பாடு உலகில் உள்ள ஏனைய பண்பாடுகளோடு ஒப்புநோக்கும்போது காலத்தால் முந்தியது எனக்கொள்ள பல்வேறு சான்றுகளை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். ஐயாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்து எனக்கருதப்படும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனப்படுகின்றது. அதற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவ தெய்வ வழிபாடு, கொம்புகளை உடைய மாட்டின் முகத்தினைக் கொண்ட நந்தி ஈஸ்வரர் வழிபாடு என்பன நடைமுறையில் இருந்துள்ளன என்பனவற்றிற்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. சங்க காலத்தை கி.மு. 2000 ஆண்டுகள் தொடக்கம் கி.பி.  600 ஆண்டுகள் வரையும் எனக் கணிப்பீடு செய்வோரும். அதற்கு முந்திய நெடுங்காத்திற்கு முன்பே தமிழ் இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன என்ற கருத்தினைக் கூறுவோரும் உள்ளன. முச்சங்கம் எனப்படும் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பன இருந்துள்ளன. கடல்கோள் கொண்ட தென்மதுரையிலும், கபாடபுரத்திலும், மதுரையிலும் இச்சங்கள்  இருந்துள்ளன. இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பே தலைச்சங்கம் எனப்படும் முதற்சங்கம் இருந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை சங்க இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு நிறுவுகின்றனர் ஆய்வாளர்கள். அவற்றில் ஆயிரக்கணக்கான  புலவர்கள் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.  சங்க இலக்கியத்தில் பல்வேறு தெய்வங்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன. புத்துப்பாட்டு எட்டுத் தொகை நூல்களில் இறைவணக்கம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று தொல்காப்பியம் போன்றவற்றிலும் இடம்பெற்றுள்ளன.

சங்க இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கை முறைகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. மக்கள் வாழும் இயற்கைக்கேற்ப அவர்களின்வாழ்வியல் மாறுபட்டுக் காணப்பட்டதை தங்கள் பாடல்களின் மூலம் புலவர்கள் கையாண்டுள்ளனர். அக்காலத்தில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்னும் ஐவகை இயற்கைப் பிரிவுகள் இருந்தன. குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த பகுதியாகும். முல்லை காடும் காடு சார்ந்த பகுதியாகும். மருதம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதி. நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதி. பாலை, மணலும் மணல் சார்ந்த நிலப்பரப்பு. அந்தந்த நிலத்து மக்கள் அவரவருக்குரிய தெய்வங்களை வழிபாடு செய்து வந்தனர் என்பதனை பண்டைத் தமிழ் இலக்கியங்களின் வாயிலாகவும் அவற்றிற்கு இலக்கணமாக விளங்கும் தொல்காப்பியம் வாயிலாகவும் அறியக்கிடக்கின்றது.  குறிஞ்சிக்கடவுளாக முருகப்பெருமானும், மருதநிலத்துக் கடவுளாக இந்திரனும், நெய்தலில் வருணனையும், பாலை நிலத்தில் கொற்றவையையும், முல்லை நிலத்தில் திருமால் எனப்படும் மாயோனையும் வழிபாடு செய்யப்பட்டுள்ளமை சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு பயின்று வந்துள்ளமையை காணமுடிகின்றது.

Continue Reading →

சாயத்திரை நாவல் வங்காள மொழிபெயர்ப்பு அறிமுகம்!

சுப்ரபாரதிமணியன்கனவு இலக்கிய வட்டம் டிசம்பர்  மாதக் கூட்டம்:  நூல் அறிமுகம்
என் நாவல் சாயத்திரை : வங்காள மொழிபெயர்ப்பு அறிமுகம் கனவு இலக்கிய வட்டத்தின் டிசம்பர் மாதக் கூட்டம்  மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர்  நடந்தது.  கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர்  ) தலைமை தாங்கினார்.  சுப்ரபாரதிமணியனின்  ” சாயத்திரை ” நாவலின் வங்காள மொழிபெயர்ப்பு நூலை ஜோதி அறிமுகப்படுத்திப் பேசினார்.

” சாயத்திரை ” நாவல் “ ரங்க பர்தா “ என்ற பெயரில் அமரர் கல்கத்தா கிருஷ்ணமூரத்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு   கல்கத்தாவைவைச் சார்ந்த ஆதர்ஷ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நாவல் முன்பே ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.  புலவர் சொக்கலிங்கம் பேசுகையில் ”  குறிப்பிட பிரதேசம் சார்ந்த மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் இலக்கியம் எப்போதும் உயர்வான இடத்தை அதன் மொழி, கலாச்சாரம் சார்ந்து பெறும். அதுவே மண்ணின் படைப்பாக இருக்கும். திருப்பூர் மக்களின் பழமையான வாழ்க்கையையும், நகரமயமாதல், தொழில் மய்மாதலின் விளைவுகளையும்              ” சாயத்திரை “  பேசுவதாலே அது சிறப்பிடம் பெற்றுள்ளது “ என்றார்.சுப்ரபாரதிமணியன், மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விஜயா நன்றி கூறினார்.   Kanavu      8/2635, Pandian nagar, Tiruppir  641 602  ( ph. 9486101003 )

சுப்ரபாரதிமணியனின் நாவல் “ சாயத்திரை “ – சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு பெற்றது. ஆங்கிலம், மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காள மொழிகளில் வெளிவந்துள்ளது.*  தமிழின் சிறந்த நாவல்கள் பட்டியலில்  இடம் பெறுவது. – பிரேமா நந்தகுமார்: இந்தியா டுடே விமர்சனம் –

விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின்பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்தமனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லிமலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்றுஇயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக்கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.

Continue Reading →

வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) கவிதைகள் இரண்டு!

வேதா இலங்காதிலகம்1. காதல் நயம் தேடு!

அபிநயக் கணகளால்
கவிநயம் பேசிவிட்டு
காதல் நயம் தேடாது
தொலை தூரம் நிற்கிறாய்!

கண்ணடித்துக் கைதொட்டு
உன்னடியில் வீழவைத்து,
காணாதது போலின்று
ஏனோ நீ ஏய்க்கிறாய்!

மலைத்தேனது வாலிபத்தேன்!
வலை விரித்தால் வயோதிபம்
வாலிபத்தேன் தொலைந்திடும்!
காலியாகு முன்னர் களித்திடு!

Continue Reading →

பத்தி 4 – இணையவெளியில் படித்தவை: நவீன கவிதை – காட்சிப்படுத்துதலிலிருந்து தரிசனமும் புரிதலும்!

நவீன கவிதை – காட்சிப்படுத்துதலிலிருந்து தரிசனமும் புரிதலும்

சத்யானந்தன்

என் நூற்றாண்டு / MY CENTURY
என் நூற்றாண்டு
– தேவதச்சன் –

துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது.
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது.
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்

தேவதச்சனின் கவிதை அதன் ஆங்கில் மொழிபெயர்ப்பு மற்றும் கவிதை பற்றிய விமர்சனம் இவை மூன்றுமே பதாகை இணைய தளத்தில் வாசிக்கக் கிடைத்தன. அவற்றிற்கான இணைப்பு : இது.

Continue Reading →

சிறுகதை: முட்கள்

சிறுகதை: முட்கள்

தில்லை,மதியத்திற்கு சாப்பிட சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் அடைட்ட உணவுப் பொட்டலம்,சப்வேயில் வாசிக்கிறதுக்காக இரவலாக எடுத்த நூலகப் புத்தகம், கொஞ்சம் சில்லறை தாள்களுடன் உள்ள இடுப்பிலே கட்டிக் கொள்கிற தோல்ப்பை… எல்லாத்தையும் உள்ளடக்கிய‌  துணிப்பையை கழுத்தில் மாட்டிக் கொண்டு,கையிலே கையுறை,தலையிலே குளிரைத் தாங்கும் தொப்பி,கழுத்தைச் சுற்றிய கறுப்பு நிற மப்ளர் …சகிதம் விறு விறு என இருள் பிரியாத அந்த காலை நேரம் நடந்து கொண்டிருந்தான். அந்த துணிப் பையை சப்வேயில் அல்லது வேறெங்கேயும் தவற விட்டால் ‘பெ.. பெ’என விழிக்கக் கூடாது! என்பதற்காக 5 டொலர் தாளை எடுத்து கால்ச்சட்டையின் பிற்பொக்கற்றிலும் வைத்துக் கொள்கிறவன்.வேலையால் வருகிற போது வீதியில் கோப்பிக் கப்பை நீட்டிக் கொண்டு அங்காங்கே இருக்கிறவர்களில் இப்படி தவற விட்டவர்கள் சிலரும் இருக்கலாம் என்பது அவன்  நினைப்பு  .

“நாள், மாசம் போறதே தெரியிதில்லை.ஆனால், டாக்சி ஓடின பிறகு  உடம்பு    உலைச்சலாக இருக்கிறதடா” ராதாவிடம் சொன்ன போது,ஊரிலே தோழனாக இருந்தவன். இங்கேயும் தோழன் தான்.”டேய்,நான் சம்மரிலே சைக்கிளிலே வாரது ஏன்?வேலை ஒன்றும் உடற்பயிற்சி கிடையாது, அதற்கென்று புறிம்பா செய்ய‌வேண்டும்.ஊரிலே நெடுக சைக்கிளிலே திரியிறதிலே உடற் பயிற்சி நடக்கிறதே  …தெரியிறதில்லை. இங்கே பணத்தை குறியாய் வைத்து வேலையை   செய்கிறோம். ‘ பயிற்சியே’ வலியை பலன்ஸ் பண்ணுறது. இது  பலருக்கு தெரியாதபடியால் கொஞ்ச வயசிலே செத்துப் போறாங்கள் .கிடைக்கிற நேரத்தில் ஓடு அல்லது நட, நல்லதடா! “என்கிறான்.

கையிலே கிடக்கிற பையை என்ன செய்வது? அது தான் எடுத்து கழுத்திலே மாட்டியிருக்கிறான்.நகரக்காவலரின் கார் ஒன்று வீதியில் அவனை கடக்கையிலே, ஒரு மாதிரியாப் பார்த்துக் கொண்டு போனது. இவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம் தான்.கறுப்பு வெள்ளை தான் தோலிலே இருக்கிறதே! மெல்லிய குளிர்காற்று வீச கைகளை ஸ்சுவிங் பண்ணி நடக்க நல்லாய் தான் இருக்கிறது. அவனும் ராஜகுமாரன் தான்.நகரமே இன்னும் விடியவில்லை.வீதி ஒரிருவரைத்தவிர அமைதியாய் கிடந்தது.சப்வே கிடங்குள் படிகளில்  இறங்கினான்.சப்வே என்கிற சிறிய ரயில் வர 3 நிமிசம் ஆகும் என மேலே தொங்கிற தொலக்காட்சிப் பெட்டியில் காட்டியது.அதிலே வந்து கொண்டிருந்த சிறிய சதுரத்தில் பேசுற செய்தியையும்,கீழே எழுத்தில் போற செய்தியையும் கவனித்தான்.”ரஸ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது…”என்று போய்க் கொண்டிருந்தது. சிறிய திருப்பம்!இனி சிரியாப் போரில் உண்மைச் செய்திகள் கொஞ்சம் வெளியே வரலாம்.சிறிலங்கா துயரம் போய்,இப்ப சிரியாத் துயரம்.இந்த நாடு  பெருந்தன்மையுடன் பெருமளவு சிரியா அகதிகளை ஏற்கிறது. எங்களையும் இப்படித் தான் ஏற்றது.

Continue Reading →