வாசிப்பும், யோசிப்பும் 143 : பரதன் நவரத்தினத்தின் ‘மரண தேவன்’ முகநூல் பதிவு பற்றி….

வாசிப்பும், யோசிப்பும்!அண்மையில் பரதன் நவரத்தினம் தனது முகநூல் பதிவாக ‘மரணதேவன்’ என்னும் சிறு கதையொன்றினைப் பதிவு செய்திருந்தார். டொரான்டோ பாதாள இரயிலில் பயணிக்குமோர் இளைஞனை, அந்த இரயில் முன் விழுந்த மரணித்த மானுடர் ஒருவரின் நிலை எவ்விதம் பாதிக்கின்றது என்பதைப்பற்றிய சிறியதொரு விபரிப்பே அக்கதை. கதை சிறியதாக இருந்தாலும் வாசிப்பவரை ஈர்க்கும் தன்மை மிக்கது. மழை பெய்யும் இரவொன்றில் , கடையொன்றில் பணியாற்றும் தொழிலாளி ஒருவர், வீடு திரும்புவதை விபரிக்கும் கதை. அவ்விதம் இரவில் தனியே திரும்பும்போது , நகரத்து இரவில் ஒருவர் அடையும் பயப்பிராந்திகளையும் அழகாக விபரித்திருக்கின்றார். வாசிப்பவரையும் அந்தப்பயப்பிராந்தி பீடித்து விடுவதுதான் அவரது எழுத்தின் சிறப்பு.

மேலும் நல்ல எழுத்து நடை. கூடவே சூழலை அவதானிக்கும் ஆற்றலுடன் கூடிய சம்பவ விபரிப்பு. இவை அனைத்தும் சேர்ந்து நல்லதொரு சிறுகதையாக மலர்ந்திருக்கின்றது. இன்னுமொன்று நகரத்தின் தன்மையினை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள எழுத்து. பகலில் வெறும் கட்டடங்களும், விரையும் மனிதர்களுமாகக்காட்சியளிக்கும் நகரின் இரவு வித்தியாசமானது. விபரிக்கும் வரிகள் சிறக்கின்றன.

‘டிராகுலா’த்திரைப்படங்களில் அல்லது அது போன்ற திகிலூட்டும் திரைப்படங்களில் ஒவ்வொரு சிறு சிறு சம்பவத்தையும் பார்வையாளரின் அச்சத்தினைப் படிப்படியாக அதிகரிக்கும் வண்ணம் அமைத்திருப்பார்கள். அது போன்ற எழுத்துப்பாணியினைப் பரதன் இக்கதையில் கையாண்டிருக்கின்றார்.

எழுத்தில் சிறப்புண்டு. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். ஒரு பதிவுக்காக அவரது அக்கதையினை இப்பதிவின் இறுதியில் பதிவு செய்திருக்கின்றேன். நீங்களும் ஒருமுறை வாசித்து அந்த இரவில் அவரது கதையின் நாயகன் அடைந்த உணர்வினை நீங்களும் அடையுங்கள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 142 : றியாஸ் குரானாவின் தமயந்தி பற்றிய குறிப்பு பற்றி….

தமயந்திஅண்மையில் றியாஸ் குரானா தமயந்தியின் படைப்புகளைப்பற்றிப்பின்வருமாறு தன் முகநூல் குறிப்பொன்றில் கூறியிருந்தார்:

“சில விசயங்கள் ஆச்சரியமானதுதான். அவ்வப்போது உதிரியாக இதழ்களில் சில கதைகளைப் படித்திருக்கிறேன். ஓரிண்டு கவிதைகளும் அதிலடங்கும். ஆனால், அவர் ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கியமானவர்தான். ஆர்வமூட்டும் கதைசொல்லி. அவருடைய கதைகள், கவிதைகள் தொகுப்பாக்கம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஈழத்து இலக்கிய வெளியில் தொகுப்பாக்கம் செய்வதே பெரும் சவாலான விசயம். சிலர் அதை அவ்வளவாக பொருட்படுத்துவதே இல்லை. “

இங்கு விமர்சகர்கள் என்ற பெயரில் உலா வருபவர்களில் பலர் தம் அங்கீகாரத்துக்காக தம் சிஷ்யகோடிகளாகச்சிலரைத்தூக்கிப் பிடிப்பார்கள். சிஷ்யகோடிகளும் அவர்களைத்தூக்கிப்பிடிப்பார்கள். ஒருவரையொருவர் முதுகு சொறிந்து கொள்வதில் குளிர்காய்வார்கள். இவர்கள் வெளியிடும் தொகுப்புகளும் அவ்விதமாகவே இருப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் யாருக்கும் அடி பணியாத, வளைந்து கொடுக்காதவர்களை இந்த முதுகு சொறியும் கூட்டம் கண்டு கொள்வதில்லை. மேலும் அவர்களும் இவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. மேலும் வளைந்து கொடுக்காதவர்களைப்பற்றி அங்கீகாரத்தை நாடுமொரு விமர்சகர்  தூக்கி வைத்து எழுதினாலும், தம்மை அவ்விதம் எழுதி விட்டார்களே என்று வளையாதவர்கள் பதிலுக்கு அவர்களைத்தூக்கி வைப்பதில்லை வழக்கமான சிஷ்யகோடிகளைப்போல். இதனால் அவ்வகை விமர்சகர்களுக்கு எந்தவித ஆதாயமுமில்லை. ஆனால் உண்மையான படைப்பாளிகளை அவர்களது படைப்புகளினூடு தரமான வாசகர்கள் கண்டு கொள்வார்கள். இன்று நீங்கள் கண்டு கொண்டதைப்போல. அவ்விதமான படைப்புகள் கால ஓட்டத்தில் நின்று பிடிக்கும்.

மேலும் இக்காலத்தில்  தொகுப்புகள் வரவில்லையே  என்று குறைபடுபவர்கள் தேடுதலற்றவர்கள். அதிகமான படைப்புகளை இணையத்தில் காண முடியும். தேடினால் இணையத்தில் நிறையவே கிடைக்கிறது. தொகுப்புகள் வந்தால்தான் வாசிப்பேன் என்று அடம் பிடிக்காதீர்கள். இணையத்தில் தேடிப்பாருங்கள். கண்டு பிடியுங்கள். வாசியுங்கள். இன்று ப்ரதிலிபி போன்ற தளங்களின் எழுத்தாளர்களின் மின்னூல்கள் வெளியாகின்றன. பல எழுத்தாளர்கள் வலைப்பதிவுகளை வைத்திருக்கின்றார்கள். பலர் இணைய இதழ்களில் எழுதி வருகின்றார்கள். தொகுப்புகளில் வரும் படைப்புகளை விடப்பல மடங்கு அதிகமான படைப்புகளை இணையத்தில் தேடுதல் மிக்க ஆய்வாளர் ஒருவரால் கண்டு பிடிக்க முடியும்.

Continue Reading →

அழியாத கோலங்கள்: நா.பா.வின் ‘குறிஞ்சி மலர்’ – நிலவைப் பிடித்துச் – சிறு கறைகள் துடைத்துக் – குறு முறுவல் பதிந்த முகம்.| பூங்குழலி – அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?

1. நா.பா.வின் ‘குறிஞ்சி மலர்’ – நிலவைப் பிடித்துச் – சிறு கறைகள் துடைத்துக் – குறு முறுவல் பதிந்த முகம்,

நா.பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்'நா.பார்த்தசாரதிஎன் பதின்ம வயதுகளில் எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் நாவல்களை நான் இரசித்து வாசித்திருக்கின்றேன். அவர் தமிழ்ப்பண்டிதராதலால், பழந்தமிழ் இலக்கியத்தில் அவருக்குள்ள புலமையினை அவரது படைப்புகளினூடு உணர முடியும். சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் எனத்தமிழரின் பல்வகை இலக்கியப்படைப்புகளின் தாக்கங்களும் அவற்றினூடு விரவிக்கிடக்கும்.

பாத்திரப்படைப்பு, மொழி ஆகியவற்றுக்காக அவரது படைப்புகளை நான் என் பதின்ம வயதுகளில் விரும்பி வாசித்திருக்கின்றேன். அவரது படைப்புகளில் வரும் மாந்தர்களெல்லாரும் , சாதாரண மானிடர்களை விட ஒரு படி மேலானவர்கள்; இலட்சிய நோக்கு மிக்கவர்கள்; குறிஞ்சி மலர், பொன் விலங்கு நாவல்களில் வரும் அரவிந்தன், பூரணி, சத்தியமூர்த்தி போன்றவர்கள். இது பற்றி அவரிடமே ஒருவர் கேள்வி கேட்டிருந்தபோது அதற்கு அவர் அவ்விதமான பாத்திரங்களை வைத்து எழுதுவதிலென்ன தவறு என்று கேட்டதை எங்கோ வாசித்திருக்கின்றேன்.

அவரது நாவல்கள் அதிகமானவற்றில் முடிவு அவலச்சுவையிலிருக்கும். [ இவரைப்போன்ற இன்னுமொருவர் அக்காலகட்டத்தில் கொடி கட்டிப்பறந்த எழுத்தாளர் ஜெகசிற்பியன். அவரது படைப்புகளும் பெரும்பாலும் துன்பத்திலேயே முடிவுறும்.]

எழுத்தாளர் நா.பா.வும் நல்ல கவிஞர்களிலொருவர். மணிவண்ணன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். அப்பெயரிலேயே ஆரம்பத்தில் கல்கியில் நாவல்களையும் படைத்து புகழடைந்தவவர் அவர்.

அவரது நாவலான குறிஞ்சி மலரில் நாயகனான அரவிந்தன் அவ்வப்போது தன் மனதிற்குகந்த நாயகியான பூரணியைப்பற்றி எழுதிய கவிதை வரிகள் ஆங்காங்கே நாவலில் வரும். அவரது படைப்புகளை விரும்பி வாசித்த காலகட்டத்தில் இவ்விதமாக குறிஞ்சி மலர் நாவலில் ஆங்காங்கே காணப்படும் அரவிந்தனின் கவிதை வரிகளையும் விரும்பி வாசித்ததை இப்பொழுதும் நினைத்துப்பார்க்கின்றேன்.

Continue Reading →

ரிஷி’யின் ஐந்து கவிதைகள்:

(1) 24 x 7 + மையங்கள்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

இரவு பகல் எந்நேரமும் திறந்திருக்கின்றன.
மும்முரமாய் கூவிக்கூவி வியாபாரம் நடந்தவாறு.
டாஸ்மாக் கடைகள் கூட நள்ளிரவைத் தாண்டி ஏதோவொரு சமயம்
மூடிவிடுவதாகக் கேள்வி.
ஆனால், இந்த விற்பனை மையங்களோ
ஒரு நாளின் 60,000 மணிநேரமும் ஓய்வின்றி இயங்கியபடியே….
வகைவகையாய்க் கொட்டிக்கிடக்கின்றன அதிகார மையங்கள்.
வகைக்கிரண்டாய் பொறுக்கிப்போட்டு
கூறுகட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும்
கொள் பொருள் அளவுகள்.
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் _
சனாதனம், இனமானம், இந்துமதம் _
பௌத்தம், கிறித்துவம், கவித்துவம் _
முற்போக்கு, பண்பாடு, கலாச்சாரம் _
விளையாட்டு, வீரம், தீரம் _
காரம் சாரம் வாரம் சோரம் பேரம்……..
அமோகமாய் நடக்கிறது வியாபாரம்.
அள்ள அள்ளக் குறையா லாபம்.

Continue Reading →