தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கு!

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கு!

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2016, பிப்பரவரியில் எமது கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக நடத்தத் திட்டுமிட்டுள்ளோம். எனவே சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. புலம்பெயர் சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகள் பற்றி கட்டுரை அமைந்திருந்தால் நலம் பயக்கும்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: மருத்துவ கலாநிதியாகியிருக்கவிருந்தவர், இலக்கிய மருத்துவ நிபுணரான அதிசயம்! தெல்லிப்பழை மகாஜனாவின் புதல்வர்களின் வரிசையில் வந்த விழிசைக்குயில் கோகிலா மகேந்திரன்!

கோகிலா மகேந்திரன்எல்லாமே  நேற்று  நடந்தது போலிருக்கிறது.   காலம்  என்னதான் விரைந்து  ஓடிMrsKohilamMahendranனாலும்,  நினைவுச்சிறைக்குள்  அடைபட்டுத்தான் வாழ்கிறது.    அவ்வப்போது  விடுதலையாகி  வெளியே  வந்தாலும்  அந்தக்கூட்டுக்குள்   மீண்டு விடுகிறது  பறவையைப்போன்று. திசை  மாறிய  பறவைகள் பற்றி அறிவோம்.  ஒரு  மருத்துவ கலாநிதியாக  வந்திருக்கவேண்டியவர்,  எவ்வாறு  திசைமாறி இலக்கிய  மருத்துவரானார்….?   தெல்லிப்பழை   விழிசிட்டி  என்ற கிராமத்திலிருந்து   கூவத்தொடங்கிய  ஒரு   விழிசைக்குயில் பற்றியதுதான்   இந்தப்பதிவு.

1972 ஆம்  ஆண்டு  ஜூலை  மாதம்  13  ஆம்  திகதியன்று  மதியம் எனது   வீட்டுக்கு  தபாலில்  வந்த  மல்லிகையின்  அந்த மாதத்திற்குரிய  இதழை   என்னால்   மறக்கமுடியாது.   அன்றுதான் எனது  பிறந்த  தினம். அந்த  மல்லிகையின்  அட்டையை   அலங்கரித்தவர்  பாவலர் துரையப்பாபிள்ளை.   அவர்  பற்றி  நான்  அதிகம்  அறிந்திராத  காலம்.   அவர்தான்  யாழ்ப்பாணம்  தெல்லிப்பழை  மகாஜனா கல்லூரியின்   ஸ்தாபகர்  என்ற  தகவலையும்,  தொலைவில்   வாழ்ந்த நான் மல்லிகையிலிருந்து   தெரிந்துகொண்டேன்.  அந்த  இதழில்தான் எனது   முதல்  சிறுகதை  கனவுகள்  ஆயிரம்  வெளியாகியிருந்தது.  அந்த   இதழை  தபால் ஊழியர்  தரும்பொழுது, ”  மொக்கத்த  பொத்த…?” (” என்ன  புத்தகம்…? ” ) எனச்சிங்களத்தில்  கேட்டார். ”  மல்லிகை ” என்றேன்.    அவருக்குப்புரியவில்லை.   வீட்டின்  முற்றத்தில் படர்ந்திருந்த   மல்லிகைக் கொடியையும்,  பூத்திருந்த  மல்லிகை மலர்களையும்   காண்பித்தேன்.

பின்னர்  அந்தத்  தபால்  ஊழியர்  மாதாந்தம்  மல்லிகையை கொண்டுவரும்பொழுது,   ஒருதடவை   அதன்  அட்டையில் பதிவாகியிருந்த   மூத்த சிங்கள  எழுத்தாளர்  மார்ட்டின் விக்கிரமசிங்காவின்   படத்தையும்  காண்பித்தேன்.

அந்த   ஊழியர்  ஆச்சரியப்பட்டார்.   அந்த  ஆச்சரியத்தின்  அர்த்தங்கள் ஆயிரம். ஆனால்,   சிங்கள  மக்களுக்கும்  இவ்வாறு   ஆச்சரியம்  தந்த மல்லிகை இன்று   இணையத்தில்தான்  (www.noolagam.com) வாழ்கிறது.

மகாஜனா  கல்லூரியில்  பயின்ற  பலர்  பின்னாளில்  கலைஞர்களாக, படைப்பாளிகளாக,  அதிபர்,   ஆசிரியர்களாக,  பத்திரிகையாளர்களாக, இசை,  நடனக் கலைஞர்களாக,  பாடகர்களாக  பிரபல்யம் பெற்றிருக்கிறார்கள்.

Continue Reading →