தெற்கிலிருந்து வரும் ரயில் காதலிக்காக- நீட்டி நிமிர்ந்து உறங்கும் பாதை! தமயந்தியின் கண்காட்சியில் பிரக்ஞாபூர்வமான புகைப்படங்கள்.

- தமயந்தி (நோர்வே) -நெருக்கடியான சூழ் நிலையில்தான் உன்னதமான கலை, இலக்கியங்கள் பிறக்கும்/ என்றான் ஒரு அறிஞன். இன்று நெருக்கடி மிக்க சூழ்நிலையில் தவிக்கின்ற யாழ் மண்ணுக்கு சமீபத்தில் சென்றபோது அந்த அறிஞனின் வார்த்தைகள்தான் எத்துணை அர்த்தம் பொதிந்தது என்பது புலனாகியது. ஷெல்கள் விழுந்தாலும், வானில் பறக்கும் ஹெலிகொப்டர் பறவைகள் “துப்பாக்கிச் சன்ன” எச்சில்களை துப்பினாலும், வரட்சிக்கு வசந்தம் வீசுமாப்போல் இலக்கிய அரங்குகளும், நூல் வெளியீடுகளும், கவியரங்குகளும் குறையேதுமின்றி நடந்து கொண்டிருப்பதை அங்கு காண முடிந்தது. இன்று தமயந்தியின் புகப்படக் கண்காட்சி – யாழ்.பீச் இன் ஹோட்டேலில் என்ற விளம்பரத்தை நாளேடு ஒன்றில் பார்த்ததும் ஆர்வம் மீதுற விரைந்தேன்.

“தமயந்தி”: நேரில் சென்று பார்த்த பின்பே என் கணிப்புத் தவறாகியது. அவர் ‘இளைஞர்’. ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது கரம் ‘கமெரா”வை மட்டும் பிடிக்கவில்லை, இவரது பேனாவில் பிறந்த இரண்டு கவிதை நூல்களும் உண்டு. “சாம்பல் பூத்த மேட்டில்”, “உரத்த இரவுகள்” ஆகிய இரண்டு தொகுப்புகளின் பிரம்மா இவர்.

கண்காட்சியில் இவர் வெளியிட்ட பிரசுரம் இரத்தினச் சுருக்கமாக புகைப்படக் கலையின் தாற்பரியத்தை விளக்குகிறது. அவர் சொல்கிறார்; “1839இல் புகைப்படம் தோன்றியது. இற்றைவரை காலத்தில் உலகெங்கிலுமான அறிவியற் சாதனைகளினாலும், படைப்புத்திறன் மிக்க கலைஞர்களின் பரிசோதனை முயற்சிகளினாலும் கலை என்ற வகையில் பாரிய வளர்ச்சி நிலைகளை அது எய்தியிருக்கிறது. ஆனால், இன்றும் ஈழத் தமிழர்களிடையில் புகைப்படத்துறை ஒரு கலையாக ஸ்தாபிதம் அடைந்திருக்கிறது எனக் கூற முடியாது. ஸ்ரூடியோக்களுக்குள் முடங்கியுள்ள ஒரு தொழிலாகவும், வெளியில் சில நிகழ்வுகளைப் பதிவு செய்யும் சடங்காகவுமே இது கருதப் படுகிறது. புகைப்படக் கண்காட்சிகளையோ, இத்துறைக் கலைஞர்களாகத் தமது ஆளுமைகளை ஸ்தாபித்துக் கொண்டவர்களையோ இங்கு காண முடியாமலே இருக்கிறது. எமது வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் இவை பற்றிய செய்திகளோ, கட்டுரைகளோ முக்கிய இடத்தைப் பெறுவதுமில்லை. இந்த நிலைமைகள் தொடர்ந்தும் நீடிப்பது மகிழ்ச்சிக்குரியதல்ல. எமது சமூக, பொருளாதார, அரசியற் கலாசார அம்சங்கள் புகைப்படம் என்ற கலை வடிவத்தினூடாக வெளிப்பாடு காணவேண்டும். ஆளுமை மிக்க கலைஞர்கள் உருவாக வேண்டும்.”

Continue Reading →

முகநூல்: புலம்பெயர் தமிழர் படைப்புகள் பற்றி….

87, 88இல் இருந்து புகலிடச் சூழலையும், வாழ்வனுபவங்களையும் பாடுகளமாகவும், பாடுபொருளாகவும் வைத்து அன்றைய புகலிடச் சஞ்சிகைகளில் ஏராளமான கதைகள் வெளியாகியிருக்கின்றன. முயன்றால் ஆயிரம் இத்தகைய கதைகளைத் தொகுக்க…

Continue Reading →

புலம்பெயர் தமிழர்தம் படைப்புகள் 1: பனியும் பனையும் – புகலிடக்கதைக்களங்களையும், பாத்திரங்களையும் உள்ளடக்கிய புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் புனைகதைகளின் தொகுப்பு. –

புலம்பெயர் தமிழர்தம் படைப்புகள் 1: பனியும் பனையும் - புகலிடக்கதைகளளங்களையும், பாத்திரங்களையும் உள்ளடக்கிய புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் புனைகதைகளின் தொகுப்பு. - வ.ந.கிரிதரன் - வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்.....; புகலிடப்படைப்புகளைப்பற்றி...; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....இத்தொகுப்பிலுள்ள 39 கதைகளைப்பற்றியும் சுருக்கமான குறிப்புகளை அவ்வப்போது  பதிவு செய்யப்போகின்றேன். 1994இல் வெளியான இத்தொகுதி பற்றிய முழுமையானதொரு ஆய்வுக்கட்டுரைக்கு முதற்படியாக இவ்விதம் செய்வது பயனுள்ளது என்பது என் கருத்து. இது போல் தொடர்ந்தும் வாசிக்கவுள்ள அனைத்துப் புகலிடத்தமிழ்க் கதைகள் பற்றிய குறிப்புகளையும் அவ்வப்போது பதிவு செய்வேன். காரணம்: புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்தவர்களின் கதைகள் புகலிடக் கதைகளங்களை உள்ளடக்கியுள்ளனவா அல்லது இழந்த மண் மீதான கழிவிரக்கங்களை மட்டுமே வெளிப்படுத்துகின்றனவா என்பதை அறியும் பொருட்டுத்தான். தொடர்புகள் காரணமாகத் தமக்குக் கிடைக்கும் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் ஒரு சில கதைகளை மட்டும் படித்துவிட்டுப் புலம்பெயர் தமிழர் படைப்புகள் புகலிடக் கதைக்களங்களை, பாத்திரங்களை வெளிப்படுத்தவில்லை என்று கிளிப்பிள்ளைபோல் கூறிவரும் கூற்றுகளில் எவ்வளவு உண்மையுள்ளது என்பதை ஆராய்வதும் இவ்விதமான என் பதிவுகளுக்கு முக்கிய காரணங்களிலொன்றாகும்.

கதை ஒன்று:  ‘பனியும், பனையும்” தொகுப்பில் முதற் தொகுதிக்கதைகள் அவுஸ்திரேலியக் கதைகள். மொத்தம்: ஒன்பது. முதலாவது கதையின் தலைப்பு: …பனையும். எழுதியவர்: சந்திரிகா ரஞ்சன். அச்சிறுகதை பற்றிச்சிறிது பார்ப்போம்:

‘பனியும், பனையும்’: ஆஸ்திரேலியாக் கதைகள் 1- சந்திரிகா ரஞ்சனின் ‘…பனையும்’.

இந்தக்கதை கூறும் பொருள்தானென்ன? நிறுவனமொன்றில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்க்கும் இலங்கைத்தமிழர் ஒருவரின் பார்வையில் கதை கூறப்படுகிறது. கதை சொல்லி தன்னைப்பற்றிக் கதையின் தொடக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:

Continue Reading →