இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்று வரையிலான காலகட்டத்தில், இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் இருந்தவர்களில் மிகவும் கீழ்த்தரமான அல்லது மோசமான தலைவர்களாக நான் கருதும் இருவர்:
1. ஜே.ஆர்.ஜெயவர்த்தனே
2. மகிந்த ராஜபக்ச
ஏன் ஜே,ஆர்?
1. ஜே.ஆர். ஐம்பதுகளின் இறுதியில் கண்டிக்குப்பாத யாத்திரை சென்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக்கிழிக்கக் காரணமாகவிருந்தவர்.
2. 1977இல் பிரதமராகப் பதவியேற்றதும், நடைபெற்ற இனக்கலவரத்தின் போது ‘போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்’ என்று முழங்கிக் கலவரத்தைப்பற்றியெரிய வைத்தவர்.
3. ‘தர்மிஷ்ட்டர்’ என்று தன்னை அழைத்துக்கொள்வதை விரும்பும் இவர் தம்மிஷ்ட்டராகி, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாகத்தன்னைப்பிரகடனப்படுத்தி, தன் ஆட்சிக்காலத்தை அதிகரித்தவர்.
4. சிறிலங்காவின் முதலாவது ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர். தன் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தன் கட்சியைச்சேர்ந்த அமைச்சர்கள் பலரின் ஆதரவுடன் ( குறிப்பாக சிறில் மத்தியூ வெளிப்படையாகவே தமிழர்களுக்கெதிராக இனவாதத்தை நிகழ்த்தி வந்தார்) தமிழர்களுக்கெதிராக மிகப்பெரிய இனக்கலவரத்தை 1983இல் ஏற்படுத்தி, இலங்கை அரசுக்கெதிரான தமிழர்களின் ஆயுதப்போராட்டம் சர்வதேசப்பரிமாணங்கள் பெற்று வெடிக்கக்காரணமாகவிருந்தவர்.
Continue Reading →