வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) கவிதைகள் இரண்டு!

வேதா இலங்காதிலகம்1. காதல் நயம் தேடு!

அபிநயக் கணகளால்
கவிநயம் பேசிவிட்டு
காதல் நயம் தேடாது
தொலை தூரம் நிற்கிறாய்!

கண்ணடித்துக் கைதொட்டு
உன்னடியில் வீழவைத்து,
காணாதது போலின்று
ஏனோ நீ ஏய்க்கிறாய்!

மலைத்தேனது வாலிபத்தேன்!
வலை விரித்தால் வயோதிபம்
வாலிபத்தேன் தொலைந்திடும்!
காலியாகு முன்னர் களித்திடு!

Continue Reading →

பத்தி 4 – இணையவெளியில் படித்தவை: நவீன கவிதை – காட்சிப்படுத்துதலிலிருந்து தரிசனமும் புரிதலும்!

நவீன கவிதை – காட்சிப்படுத்துதலிலிருந்து தரிசனமும் புரிதலும்

சத்யானந்தன்

என் நூற்றாண்டு / MY CENTURY
என் நூற்றாண்டு
– தேவதச்சன் –

துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது.
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது.
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்

தேவதச்சனின் கவிதை அதன் ஆங்கில் மொழிபெயர்ப்பு மற்றும் கவிதை பற்றிய விமர்சனம் இவை மூன்றுமே பதாகை இணைய தளத்தில் வாசிக்கக் கிடைத்தன. அவற்றிற்கான இணைப்பு : இது.

Continue Reading →

சிறுகதை: முட்கள்

சிறுகதை: முட்கள்

தில்லை,மதியத்திற்கு சாப்பிட சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் அடைட்ட உணவுப் பொட்டலம்,சப்வேயில் வாசிக்கிறதுக்காக இரவலாக எடுத்த நூலகப் புத்தகம், கொஞ்சம் சில்லறை தாள்களுடன் உள்ள இடுப்பிலே கட்டிக் கொள்கிற தோல்ப்பை… எல்லாத்தையும் உள்ளடக்கிய‌  துணிப்பையை கழுத்தில் மாட்டிக் கொண்டு,கையிலே கையுறை,தலையிலே குளிரைத் தாங்கும் தொப்பி,கழுத்தைச் சுற்றிய கறுப்பு நிற மப்ளர் …சகிதம் விறு விறு என இருள் பிரியாத அந்த காலை நேரம் நடந்து கொண்டிருந்தான். அந்த துணிப் பையை சப்வேயில் அல்லது வேறெங்கேயும் தவற விட்டால் ‘பெ.. பெ’என விழிக்கக் கூடாது! என்பதற்காக 5 டொலர் தாளை எடுத்து கால்ச்சட்டையின் பிற்பொக்கற்றிலும் வைத்துக் கொள்கிறவன்.வேலையால் வருகிற போது வீதியில் கோப்பிக் கப்பை நீட்டிக் கொண்டு அங்காங்கே இருக்கிறவர்களில் இப்படி தவற விட்டவர்கள் சிலரும் இருக்கலாம் என்பது அவன்  நினைப்பு  .

“நாள், மாசம் போறதே தெரியிதில்லை.ஆனால், டாக்சி ஓடின பிறகு  உடம்பு    உலைச்சலாக இருக்கிறதடா” ராதாவிடம் சொன்ன போது,ஊரிலே தோழனாக இருந்தவன். இங்கேயும் தோழன் தான்.”டேய்,நான் சம்மரிலே சைக்கிளிலே வாரது ஏன்?வேலை ஒன்றும் உடற்பயிற்சி கிடையாது, அதற்கென்று புறிம்பா செய்ய‌வேண்டும்.ஊரிலே நெடுக சைக்கிளிலே திரியிறதிலே உடற் பயிற்சி நடக்கிறதே  …தெரியிறதில்லை. இங்கே பணத்தை குறியாய் வைத்து வேலையை   செய்கிறோம். ‘ பயிற்சியே’ வலியை பலன்ஸ் பண்ணுறது. இது  பலருக்கு தெரியாதபடியால் கொஞ்ச வயசிலே செத்துப் போறாங்கள் .கிடைக்கிற நேரத்தில் ஓடு அல்லது நட, நல்லதடா! “என்கிறான்.

கையிலே கிடக்கிற பையை என்ன செய்வது? அது தான் எடுத்து கழுத்திலே மாட்டியிருக்கிறான்.நகரக்காவலரின் கார் ஒன்று வீதியில் அவனை கடக்கையிலே, ஒரு மாதிரியாப் பார்த்துக் கொண்டு போனது. இவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம் தான்.கறுப்பு வெள்ளை தான் தோலிலே இருக்கிறதே! மெல்லிய குளிர்காற்று வீச கைகளை ஸ்சுவிங் பண்ணி நடக்க நல்லாய் தான் இருக்கிறது. அவனும் ராஜகுமாரன் தான்.நகரமே இன்னும் விடியவில்லை.வீதி ஒரிருவரைத்தவிர அமைதியாய் கிடந்தது.சப்வே கிடங்குள் படிகளில்  இறங்கினான்.சப்வே என்கிற சிறிய ரயில் வர 3 நிமிசம் ஆகும் என மேலே தொங்கிற தொலக்காட்சிப் பெட்டியில் காட்டியது.அதிலே வந்து கொண்டிருந்த சிறிய சதுரத்தில் பேசுற செய்தியையும்,கீழே எழுத்தில் போற செய்தியையும் கவனித்தான்.”ரஸ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது…”என்று போய்க் கொண்டிருந்தது. சிறிய திருப்பம்!இனி சிரியாப் போரில் உண்மைச் செய்திகள் கொஞ்சம் வெளியே வரலாம்.சிறிலங்கா துயரம் போய்,இப்ப சிரியாத் துயரம்.இந்த நாடு  பெருந்தன்மையுடன் பெருமளவு சிரியா அகதிகளை ஏற்கிறது. எங்களையும் இப்படித் தான் ஏற்றது.

Continue Reading →

தொல்காப்பியத் திணைகள் துறைகள் தூவும் தனிச்சிறப்பும் திகைப்பும்

தொல்காப்பியம்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனார் (கி.மு. 711) எனும் புலவர் தொல்காப்பியம் என்ற நூலை யாத்துத் தந்தனர். இந்நூல் தொன்மை, செப்பம், வளம், செழுமை, வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் அரிய இலக்கண இலக்கிய உயிர் நூலாய் எம் மத்தியில் பவனி வருகின்றது. ‘இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்’ என்பது நக்கீரனாரின் கூற்றாகும். இன்னும், ‘தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்’ என்று டாக்டர் மு. வரதராசன் கூறியுள்ளார். இனி, பொருளதிகாரத்தில,; அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய  இரு திணைகள் பற்றித் தொல்காப்பியம் கூறுவதையும் காண்போம்.
அகத்திணையியல்- பழந்தமிழர் வாழ்வியலை அகம் எனவும், புறம் எனவும் வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டினர். அகம் இன்ப ஒழுக்கத்தின் இணைந்த இல்வாழ்வு பற்றியதாகும். அதை மேலும் ஒருதலைக் காமம், அன்புடைக் காமம், பொருந்தாக் காமம் என மூன்று பகுதிகளாகக் காட்டி, அவற்றை முறையே கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை எனக் கூறி, அவற்றை ஒருமித்து ஏழு திணைகளாக ஆன்றோர் எடுத்துக் காட்டுவர். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் பின்வருமாறு அமைத்துள்ளார்.

‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் 
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.’ – (பொருள் 01)

மேற்கூறிய அன்புடைக் காமம், அன்பின் ஐந்திணை என்பன ஐவகை நெறி பற்றிய கூற்றாகும். அவை ஐவகை நிலங்களான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகியவற்றின் சூழல், சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய் நிகழ்வனவாம். இவற்றை ஐந்திணைகளான முல்லைத்திணை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை என்றழைப்பர். இதிற் காட்டிய ஐந்திணைகளுக்கும், ஐவகையான நிலங்களை ஒதுக்கியமை கண்டீர். ஆனால் கைக்கிளைக்கும், பெருந்திணைக்கும் நிலங்கள் ஒதுக்கப்படாதமையும் காண்பீர்.

Continue Reading →

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

“அருகிவரும் தமிழரின் பாரம்பரியக்கலைகள்”

நிகழ்ச்சி நிரல்
பிரதம பேச்சாளர் உரை:
“வில்லுப்பாட்டு”     பொன்.அருந்தவநாதன் B.A(Hons) M.Phil

சிறப்பு பேச்சாளர்கள் உரை:
“வசந்தன்கூத்து” – பேராசிரியர்.இ.பாலசுந்தரம்
“பறைமேளக்கலை” – ச.இரமணீகரன்  B.A(Hons) M.A
“வடமோடி,தென்மோடிக்கூத்து” – கலாநிதி.க.மதிபாஸ்கரன்
“இசைநாடகங்கள்” – திருமதி.பூங்கொடி அருந்தவநாதன்  B.A(Hons) Dip.in.Edu

Continue Reading →

“தமிழ் மரபுத்திங்கள்” – விளக்கமும், கலந்துரையாடலும். வழங்குபவர்: அருட்தந்தை ஜெகத் கஸ்பார்

"தமிழ் மரபுத்திங்கள்" - விளக்கமும், கலந்துரையாடலும். வழங்குபவர்: அருட்தந்தை ஜெகத் கஸ்பார்

Date: Sunday, January 10, 2016
Time: 8:30 – 9:30 ET
Location: By Conference Call

Telephone Number: (641) 715-3670
Passcode: 873905

அனைவருக்கும் வணக்கம். வரும் ஜனவரி 10-ஆம் தேதி இரவு 8:30 முதல் 9:30 வரை (கிழக்கு நேரம்) இலக்கியக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். அதோடு தங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வைப்பகிர்ந்து அவர்களும் பங்குபெற்றுப் பயனடையச்செய்யவும்.

சொற்பொழிவு:- “தமிழ் மரபுத்திங்கள்” – விளக்கமும், கலந்துரையாடலும்.
வழங்குபவர்: அருட்தந்தை ஜெகத் கஸ்பார்

Continue Reading →

‘காவியத்துக்கு ஒரு மஹாகவி!’ – வ.ந.கிரிதரன் –

– கவிஞர் மஹாகவியின் பிறந்த தினம் ஜனவரி 9. அதனையொட்டிய பதிவிது.-

கண்மணியாள் காதை -- மஹாகவி -கவிஞர் மஹாகவி -
‘காவியத்துக்கு ஒரு மஹாகவி’ என்று அழைக்கப்படக்காரணமாக இருந்த காவியம் மஹாகவியின் ‘கண்மணியாள் காதை’ காவியம். அவலச்சுவை மிக்க காவியம். தீண்டாமைக்கொடுமையினை விபரிக்கும் குறுங்காவியமிது. கவிஞர் ‘சடங்கு’ என்று ‘விவேகி’யில் எழுதிய தனது குறுங்காவியத்தின்  நாயகனான செல்லையாவை வைத்து , லடீஸ் வீரமணிக்காக வில்லுப்பாட்டாக , இன்னுமொரு கோணத்தில் எழுதிய துயர காவியம் ‘கண்மணியாள் காதை’ . குறுங்காவியமானாலும் அதில்வரும் பாத்திரங்களான கண்மணியாளையும், செல்லையனையும் படித்தவர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவிற்குப் பாத்திரப்படைப்பு நன்கு அமைந்திருந்த காவியமது. இக்காவியம் முதலில் அன்னை வெளியீட்டகம் (யாழ்ப்பாணம்) என்னும் பதிப்பகத்தால் நவம்பர் 1968இல் நூலாக வெளிவந்தது. மேலும் ‘கண்மணியாள் காதை’ தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் லடீஸ் வீரமணி குழுவினரால் வில்லுப்பாட்டாக மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அது பற்றி ‘ஈழநாடு’ பத்திரிகையின் வாரமலரில் வெளிவந்த ‘தேனி’யின் விமர்சனம்  ‘காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப்பாட்டுக்கு ஒரு வீரமணி’ என்ற தலைப்புடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி ‘கண்மணியாள் காதை’யும் எனக்கு மிகவும் பிடித்த காவியங்களிலொன்று. அதில்வரும் ‘கண்மணி’, ‘செல்லையன்’ ஆகியோர் மறக்க முடியாதவர்கள். ஒரு விதத்தில் வாசிக்கும்போது அதன் பெயரும், பாடு பொருளும், காவியத்தில் வரும் சில கவிதை வரிகளும் சிலப்பதிகாரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் குறுங்காவியமது. காவியத்தை இரு கூறுகளாகக் கவிஞர் பிரித்திருப்பார். முதலாம் கூறு: வெண்ணிலவு காவியத்தின் இன்பமான பக்கத்தை விபரித்தால், இரண்டாம் கூறான ‘காரிருள்’ காவியத்தின் துன்பகரமான பக்கத்தை விபரிக்கும்.  அக்காவியத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடலாம்:

“யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!” எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு –
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!

Continue Reading →

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கு!

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கு!

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2016, பிப்பரவரியில் எமது கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக நடத்தத் திட்டுமிட்டுள்ளோம். எனவே சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. புலம்பெயர் சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகள் பற்றி கட்டுரை அமைந்திருந்தால் நலம் பயக்கும்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: மருத்துவ கலாநிதியாகியிருக்கவிருந்தவர், இலக்கிய மருத்துவ நிபுணரான அதிசயம்! தெல்லிப்பழை மகாஜனாவின் புதல்வர்களின் வரிசையில் வந்த விழிசைக்குயில் கோகிலா மகேந்திரன்!

கோகிலா மகேந்திரன்எல்லாமே  நேற்று  நடந்தது போலிருக்கிறது.   காலம்  என்னதான் விரைந்து  ஓடிMrsKohilamMahendranனாலும்,  நினைவுச்சிறைக்குள்  அடைபட்டுத்தான் வாழ்கிறது.    அவ்வப்போது  விடுதலையாகி  வெளியே  வந்தாலும்  அந்தக்கூட்டுக்குள்   மீண்டு விடுகிறது  பறவையைப்போன்று. திசை  மாறிய  பறவைகள் பற்றி அறிவோம்.  ஒரு  மருத்துவ கலாநிதியாக  வந்திருக்கவேண்டியவர்,  எவ்வாறு  திசைமாறி இலக்கிய  மருத்துவரானார்….?   தெல்லிப்பழை   விழிசிட்டி  என்ற கிராமத்திலிருந்து   கூவத்தொடங்கிய  ஒரு   விழிசைக்குயில் பற்றியதுதான்   இந்தப்பதிவு.

1972 ஆம்  ஆண்டு  ஜூலை  மாதம்  13  ஆம்  திகதியன்று  மதியம் எனது   வீட்டுக்கு  தபாலில்  வந்த  மல்லிகையின்  அந்த மாதத்திற்குரிய  இதழை   என்னால்   மறக்கமுடியாது.   அன்றுதான் எனது  பிறந்த  தினம். அந்த  மல்லிகையின்  அட்டையை   அலங்கரித்தவர்  பாவலர் துரையப்பாபிள்ளை.   அவர்  பற்றி  நான்  அதிகம்  அறிந்திராத  காலம்.   அவர்தான்  யாழ்ப்பாணம்  தெல்லிப்பழை  மகாஜனா கல்லூரியின்   ஸ்தாபகர்  என்ற  தகவலையும்,  தொலைவில்   வாழ்ந்த நான் மல்லிகையிலிருந்து   தெரிந்துகொண்டேன்.  அந்த  இதழில்தான் எனது   முதல்  சிறுகதை  கனவுகள்  ஆயிரம்  வெளியாகியிருந்தது.  அந்த   இதழை  தபால் ஊழியர்  தரும்பொழுது, ”  மொக்கத்த  பொத்த…?” (” என்ன  புத்தகம்…? ” ) எனச்சிங்களத்தில்  கேட்டார். ”  மல்லிகை ” என்றேன்.    அவருக்குப்புரியவில்லை.   வீட்டின்  முற்றத்தில் படர்ந்திருந்த   மல்லிகைக் கொடியையும்,  பூத்திருந்த  மல்லிகை மலர்களையும்   காண்பித்தேன்.

பின்னர்  அந்தத்  தபால்  ஊழியர்  மாதாந்தம்  மல்லிகையை கொண்டுவரும்பொழுது,   ஒருதடவை   அதன்  அட்டையில் பதிவாகியிருந்த   மூத்த சிங்கள  எழுத்தாளர்  மார்ட்டின் விக்கிரமசிங்காவின்   படத்தையும்  காண்பித்தேன்.

அந்த   ஊழியர்  ஆச்சரியப்பட்டார்.   அந்த  ஆச்சரியத்தின்  அர்த்தங்கள் ஆயிரம். ஆனால்,   சிங்கள  மக்களுக்கும்  இவ்வாறு   ஆச்சரியம்  தந்த மல்லிகை இன்று   இணையத்தில்தான்  (www.noolagam.com) வாழ்கிறது.

மகாஜனா  கல்லூரியில்  பயின்ற  பலர்  பின்னாளில்  கலைஞர்களாக, படைப்பாளிகளாக,  அதிபர்,   ஆசிரியர்களாக,  பத்திரிகையாளர்களாக, இசை,  நடனக் கலைஞர்களாக,  பாடகர்களாக  பிரபல்யம் பெற்றிருக்கிறார்கள்.

Continue Reading →

கருணாகரனின் “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்“ – புதிய கவிதை நூல் வெளியீடு

கருணாகரனின் புதிய கவிதை நூல் – “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்“ – வெளியீடும் விமர்சனமும் எதிர்வரும் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப.300 மணிக்கு நடைபெறவுள்ளது.…

Continue Reading →