எழுத்தாளர் பற்றி எழுத்தாளர் குப்பிளான் சண்முகம் தனது முகநூற் பதிவொன்றில் “கதை. கவிதை, கட்டுரை எழுதுபவர்களையே “எழுத்தாளர்” எனக் கொள்லாமென நம்பியிருந்தேன். அண்மைகாலங்களில் கட்டுரை எழுதுபவர்களுயும் எழுத்தாளர் எனக் கொள்ளலாமென ஒரு கருத்து மேலோங்கி இருக்கிறது என்னால் இதுபற்றி தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?.” என்றொரு வினாவினை எழுப்பியிருந்தார். அது பற்றிய எனது சிந்தனை கீழே.
எழுத்தாளன் என்பதற்குப் பல அர்த்தங்களுள்ளன. எழுத்தை ஆள்பவர் என்பது ஓர் அர்த்தம். ஆனால் எழுத்தாளன் என்னும் சொல் உருவானது அந்த அர்த்தத்தில் மட்டுமல்ல. ஆளன் என்பது விகுதி. அந்த விகுதியைக்கொண்டு அமைக்கப்பட்ட சொல்தான் எழுத்தாளன் என்பதுவும். அந்த அர்த்தத்தில் இங்கு எழுத்து என்பதுடன் ஆளன் என்னும் விகுதியைச்சேர்த்து உருவாக்கப்பட்ட சொல்லாக எழுத்தாளன் வருகின்றது. உதாரணமாக பேச்சு + ஆளன் = பேச்சாளன். எனவே கட்டுரை மட்டுமல்ல எழுத்தின் எந்த வடிவத்தினையும் கையாள்பவனை எழுத்தாளன் என்றும், பொதுவாக எழுத்தாளர் என்று அழைப்பதில் எந்த விதத்தவறுமில்லை.
Rajaji Rajagopalan ஆளன் என்னும் விகுதிக்கு நீங்கள் தந்த விளக்கம் அர்த்தமுள்ளது. எழுதும் எல்லாரும் எழுத்தையே தமது சிந்தனைக்கு உருவம் கொடுக்கும் ஆயுதமாகக் கொள்கிறார்கள்.
Sri Sritharan ஆங்கிலத்தில் writer, author என இரண்டு வெவ்வேறு சொற்கள் உள்ளன. https://en.wikipedia.org/wiki/Author
Jeeva Kumaran எனக்கு அறிவு தெரிந்த காலத்தில் புனைவு இலக்கியம் (FICTION: சிறறுதை-கதை-நாவல்-கவிதை-நாடகம்) போன்ற இலக்கிய வடிவங்களைப் படைத்தவர்களை ஆக்க (CREATIVE WRITERS) எழுத்தாளர்கள் என்றும்…. மற்றைய வகை நூல்களை எழுதியவர்களை நூலாசிரியர் என்றும் அழைத்ததாக ஞாபகம்.
F.ex: Writer Mr. Jeyakanthan: Authour Mr. Sivathamby
ஆனால் பத்தி எழுத்துகளும்… புனைவு இலக்கிய ஆசிரியர்களே பத்தி எழுத்துக்குள் வந்ததும் அவர்களை அங்கே வேறுபடுத்தாது அதே எழுத்தாளர்கள் தலையங்கத்துடன் பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. இன்று எழுதுபவன் எல்லாம் எழுத்தாளராயும் கவிஞனும் என்றாகி விட்டது என்று நினைக்கின்றேன்