‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றி இவர்கள்: ‘பதிவுகளும் நானும்’ குரு அரவிந்தன்.

– ‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றிய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்ஏறோம். உங்கள் கருத்துகளை ngiri2704@rogers.com  என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். – பதிவுகள் –


குரு அரவிந்தன் பதிவுகள் என்ற இணையப் பத்திரிகையுடனான எனது தொடர்பு நீண்ட காலத்திற்கு முன்பே ஆரம்பமானது. இலக்கியக் கூட்டங்களில் பதிவுகளின் ஆசிரியரை அடிக்கடி சந்தித்திருக்கின்றேன் ஆனால் இவர்தான் அதன் ஆசிரியர் என்பதைத் தொடர்பு படுத்திப் பார்க்கவில்லை. ஆனந்தவிகடன் பவளவிழா ஆண்டில் வெளிவந்த ஒரு இதழில் ‘பல்லிக்கூடம்’ என்ற சிறந்ததொரு கதையை வ.ந. கிரிதரன் என்பவர் எழுதிப் பணப்பரிசு பெற்றிருந்தார். அதிபர் பொ.கனகசபாபதி அவர்களுடன் உரையாடும் போது பதிவுகள் ஆசிரியர் தான் இவர் என்பதை அறிந்து கொண்டேன். எனவே அவருடன் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டினேன். அவருடன் தொலைபேசி மூலம் உரையாடும் போது அவர் ஆனந்தவிகடனில் வெளிவந்த எனது கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார். அவரிடம் பாரபட்சமற்ற நிறையவே தேடல் இருப்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

ஒரு முறை அவருடன் தொலைபேசியில் உரையாடும்போது, அவர் என்னிடம் ‘விகடனுக்கான ஆக்கங்களைத் தபால் மூலமா அனுப்புகின்றீர்கள்’ என்று வினாவினார். நான் அதற்கு ஆம் என்று பதில் அளித்தேன். அந்தக் காலகட்டத்தில் நண்பர் சசிதரனின் பாமினி எழுத்துருதான் என்னிடம் இருந்தது. தமிழ் ஆரம் ஒளிநாடாவையும் பயிற்சி நூலையும் நான் முதலில் வெளியிட்ட போது எனக்கு ஒரு தமிழ் எழுத்துரு தேவைப்பட்டதால், பாமினி எழுத்துருவையே சசியிடம் இருந்து வாங்கியிருந்தேன். அப்பொழுது எழுத்துரு மாற்றிகள் பாவனையில் இல்லாத படியால் பாமினி எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் விகடனுக்கு என்னால் அனுப்ப முடியாமல் இருந்தது. அப்பொழுது ‘அஞ்சலி’ என்ற எழுத்துருவில் ஆக்கங்களை அனுப்ப முடியுமா என்று ஆசிரியர வீயெஸ்வி அவர்கள் என்னிடம் கேட்டிருந்தார். அதன் பாவனை எனக்குத் தெரியாததால் நான் தொடர்ந்தும் தபால் மூலமே விகடனுக்கு ஆக்கங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். காலதாமதத்தை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று நினைத்த போது நண்பர் கிரிதரன் எனக்கொரு ஆலோசனை தந்தார். எழுத்துருவை யூனிக்கோட்டாக மற்றி அனுப்பலாம் என்ற ஆலோசனையை முதலில் தந்தது அவர்தான்.

Continue Reading →

ஆய்வு: கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் நாவலில் பெண் சித்திரிப்புகள்

முன்னுரை
ஆய்வுக் கட்டுரைகள்!சங்க காலம் முதற்கொண்டே பாலியல் அடிப்படையில் பெண்கள் தாக்குதலுக்கு ஆளானார்கள். இடைக் காலங்களில் தோற்றமெடுத்த சாதி, சமய பூசல்களும், சமூக மாற்றங்களும் அடிமை முறையைத் தோற்றுவித்தன. அதன் காரணமாகப் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய பொதுவான சமூக உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்தன.
இதுபோன்ற துன்பங்களிலிருந்து பெண் விடுதலை பெறவேண்டும். ஆண்களுக்குச் சமமான உரிமையைப் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று பெண் விடுதலைக்காகப் பலர் போராடியிருக்கிறார்கள். பெண் விடுதலைக்குத் தேவையான ஆரம்பப்படிகள் சிலவற்றைப் பட்டியலாகப் பாரதியார் தருகிறார். அவை வருமாறு:

பெண்களுக்கு விடுதலைக் கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப்படிகள் எவையென்றால்,

1.    பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்து கொடுக்கக்கூடாது.
2.    அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி   வற்புறுத்தக்கூடாது.
3.    விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமான படுத்தக்கூடாது.

Continue Reading →