ஆய்வு: சங்க காலத்தில் நாட்டை ஆண்ட மன்னர்களின் அரண் அமைப்பின் மாண்பு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தொன்மை வாய்ந்த தமிழ் நாட்டை அரசாண்டு வந்தனர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்ற மூன்று நாடுகளிலும், பாண்டிய நாடுதான் மிகப் பழமை பெற்ற நாடாகக் கருதப்பட்டது. ‘பாண்டிய நாடே பழம்பதி யென்ன’ என்ற சான்றோர் வாக்கு ஆதாரம் காட்டுகின்றது.  பாண்டிய மன்னர்கள் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் ஆகிய முச்சங்கங்களை அமைத்துத் தமிழை வளர்த்து வந்தனர். முச்சங்கங்களில் எழுந்த நூல்கள் பல. ஆவற்றுள் எஞ்சிய நூல்களைவிட அழிந்த நூல்களே அதிகமாகும். கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் சிறப்புற்ற சங்க காலமாகும். அன்றுதான் கடைச் சங்கம் நிலவியிருந்தது. அச்சங்கத்தில் எழுந்த பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் ஆகிய பதினெட்டு நூல்களும் நிகரற்ற இலக்கியங்களாய் இன்றும் உலாவி வருகின்றன. அதன்பின்னான சங்கம் மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள்;, ஐஞ்சிறு காப்பியங்கள் ஆக ஒருமித்து இருபத்தெட்டு நூல்கள் எழுந்தன. இனி, அன்றைய மன்னர்களின் அரண் அமைப்புக்களின் சிறப்பினை இலக்கியங்கள் பேசும் திறன் பற்றி விரிவு படுத்திப் பார்ப்போம்.

தொல்காப்பியம்
இடைச் சங்க காலத்தில் எழுந்த மூத்த நூலான தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகை மக்கள் இருந்துள்ளதாகத் தொல்காப்பியர் (கி.மு. 711) கூறியுள்ளார்.  இவர்களில் அந்தணர் முதல் இடத்திலும், அரசர் இரண்டாம் இடத்திலும், வணிகர் மூன்றாம் இடத்திலும், வேளாளர் நான்காம் இடத்திலும் வைக்கப்பட்டுள்ளனர். தெய்வ வழிபாட்டுத் தொடர்பான பிரிவில் மேற் கூறப்பட்ட நால்வகையினரும் பங்குபற்றலாம் என்று சூத்திரம் கூறுகின்றது.

‘மேலோர் முறைமை நால்வர்க்கும் எரித்தே.’ – (பொருள். 31)

அந்தணர்:- ‘நூலே கரகம் முக்கோல் மணையே, ஆயுங் காலை அந்தணர்க் குரிய.’ (பொருள். 615) என்று தொல்காப்பியர் சூத்திரம் அமைத்தார். அவர்கள்  அறநெறி  வாழ்முறையில்  ஈடுபடுவர்.

Continue Reading →

மெல்பனில் நாளை நூல் அறிமுக அரங்கு: லண்டனில் வதியும் கரவை மு.நற்குணதயாளனின் நூல்கள் வெளியீடு!

மெல்பனில்  நாளை  நூல்  அறிமுக  அரங்கு: லண்டனில் வதியும் கரவை மு.நற்குணதயாளனின் நூல்கள் வெளியீடு!கரவை  மு. தயாளன்   எழுதிய ‘சில மனிதர்களும் சில நியாயங்களும்’ என்ற நாவலும் எனது பேனாவிலிருந்து என்னும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள்  நாடகம்  மற்றும்  ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதைகள்,    கவிதைகள்  முதலானவற்றை உள்ளடக்கமாகக்கொண்டுள்ள   தொகுப்பு  நூலும்  அவுஸ்திரேலியா விக்ரோரியா   மாநிலத்தில்  மெல்பனில்  Dandenong North Senior Citizens Centre  ( 41 A, Latham  Crescent,    Dandenong North , Victoria 3175)   மண்டபத்தில்   நாளை   சனிக்கிழமை  மாலை  3.30  மணியிலிருந்து   7.00   மணிவரையில்  நடைபெறும்.

நூலாசிரியர்   கரவை  மு.தயாளன்  லண்டனில்   கல்வி,  கலை இலக்கிய,  சமூகப்பணிகளில்  ஈடுபாடுள்ளவர்.   ஏற்கனவே  கடல் கடந்து   போனவர்கள்   என்னும்  நாவலையும்  மண்ணில்  தெரியுது வானம்  என்னும்  கட்டுரைத்தொகுப்பையும்  வெளியிட்டிருப்பவர். நாளை   மெல்பனில்  அறிமுகமாகவுள்ள  ‘சில  மனிதர்களும்  சில நியாயங்களும்’ என்ற  நாவல் தொடர்கதையாக  லண்டன்  தமிழர் தகவல்    இதழில்  வெளியாகியிருக்கிறது.    பின்னர்,  இலங்கையில் தினகரன்   வாரமஞ்சரியிலும்   லண்டனில்  பார்வைகள்  என்னும் இதழிலும்   தொடராக   வெளிவந்துள்ளது.

“இந்த  நாட்டிலிருந்து  புலம்பெயர்ந்து  சென்று  லண்டனில் குடியேறியவர்களையும்  அவர்களின்   வாரிசுகளான  அடுத்த சந்ததியினரையும்    பாத்திரங்களாகக்கொண்டு  இந்நாவல் படைக்கப்பட்டிருக்கிறது.    இங்கிருந்து  புலம்பெயர்ந்து சென்றவர்களின்   மூலவேர்,  அவர்கள்  பிறந்த  தாய்  நாட்டு மண்ணிலேயே   இன்றும்   ஆழப்பதிந்திருக்கின்றது.   ஆதனால் புலம்பெயர்ந்து    வாழும்  நாட்டு  மண்ணுடன்  முழுமையாக  ஒன்றிக்க முடியாத    அவலங்களுக்கும்  ஆளாகின்றனர்.   அவர்களது வாரிசுகளின்    வாழ்வும்  சிந்தனையும்  புலம்பெயர்ந்த  நாட்டு மண்ணுடன்    இசைவாக்கம்  பெறுகின்றன.   அதனால்  இரண்டு தலைமுறையிலும்    நடவடிக்கையிலும்  முரண்பாடுகள்  தோன்றுவது இயல்பு.    அந்த  முரண்   நிலையை   இந்த  நாவல்  சித்திரிக்கிறது ”  இவ்வாறு    இந்நாவல்  பற்றிய  தனது  மதிப்பீட்டை   ஈழத்தின்  மூத்த படைப்பாளி    தெணியான்   பதிவுசெய்துள்ளார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 195 : ‘குடிவரவாளன்’ நாவலும் , ‘அந்தாதி’ இலக்கிய வடிவமும்!

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

அண்மையில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான எனது ‘குடிவரவாளன்’ நாவலைப்பற்றி எழுத்தாளர் குப்பிழான் சண்முகம் அவர்கள் தனது கருத்துகளை முகநூலில் பதிவு செய்திருந்தார். அது வருமாறு:

“மே மாதம் 24, இன்று வ.ந. கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவலை வாசித்து முடித்தேன். சட்ட பூர்வமாகக் கனடாவுக்கு புலம் பெயரும் வழியில், எதிர் பாராத விதமாக அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர நேரிடுகிறது. ஒரு வருடம் அமெரிக்காவில் சட்ட பூர்வமற்ற அகதியாக வாழ்ந்த அனுபவங்களை நாவல் பேசுகிறது. புலம்பெயர் அகதி வாழ்வின் வித்தியாசமான அனுபவங்கள், வித்தியாசமான மனிதர்கள். எதனாலும் சலிக்காத கதாநாயகனின் உறுதி. இயற்கைக் காட்சிகளின் இரசிப்பு. தமிழ் கவிதைகளினதும்- குறிப்பாக பாரதி- இசை, இயற்கை மீதான ஈடுபாடு.. என விரியும் கதை. ‘ மீண்டும் தொடங்கும் ‘மிடுக்காய்’ தொடரும் வாழ்வு. இந் நூலில் அமெரிக்க அகதி வாழ்வின் அனுபவங்களையே கிரிதரன் முக்கியப்படுத்துகின்றார். இதனால் நாவலின் வடிவம் கேள்விக்குறியாகிறது. இந்த இடத்தில் பெர்லின் வாழ்வு அனுபவங்களைப் பேசும் கருணாகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் ‘நாவல்’ தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. குடிபெயரும் வாழ்வின் அனுபவங்களைப் பேசும் இவர்கள் எங்கள் பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்.”

திரு.குப்பிழான் சண்முகம் அவர்களின் கருத்துகளுக்கு நன்றி. இப்பதிவில் அவர் நாவலின் வடிவம் பற்றி ‘இந் நூலில் அமெரிக்க அகதி வாழ்வின் அனுபவங்களையே கிரிதரன் முக்கியப்படுத்துகின்றார். இதனால் நாவலின் வடிவம் கேள்விக்குறியாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தது என் கவனத்தை ஈர்த்தது. அவரது கூற்றினை மீண்டுமொருமுறை சிந்தித்துப்பார்த்தேன்.

உண்மையில் இந்த நாவலுக்கு ஒரு வடிவம் உண்டு. அந்த வடிவத்துக்குள் தான் அனுபவங்கள் விபரிக்கப்படுகின்றன. ஒரு சட்டம் அமைக்கப்பட்டு , அதற்குள் ஓவியம் இருப்பதுபோல்தான் நான் நாவலின் வடிவத்தை அமைத்திருந்தேன். இந்த வடிவத்தை நான் இந்த நாவலுக்குப் பாவிக்க முனைந்ததற்கு முக்கிய காரணம் தமிழ் மரபுக் கவிதையினோர் வடிவம்தான்.

மரபுக்கவிதையில் ஒரு வடிவம் உண்டு. அது அந்தாதித்தொடை. ‘யாப்பருங்கலக்காரிகை’ ‘அந்தாதித்தொடை’ பற்றி ‘அந்தம் முதலாத் தொடுப்பதந் தாதி’ என்று கூறும். அடி தோறும் இறுதியாக (அந்தம்) நிற்கும் சீர், அசை, அல்லது எழுத்து ஆகியவற்றையே அடுத்த அடியின் முதலாக (ஆதி) வைத்துப் புனையப்படும் கவிதையில் பாவிக்கப்படும் தொடை அந்தாதித்தொடை என்பதிதன் பொருள்.

அபிராமி அந்தாதியில் அபிராமிப்பட்டர் ஒவ்வொரு பாடலின் இறுதிச் சொல்லாக வரும் சொல்லையே அடுத்த பாடலின் முதற் சொல்லாக வைத்து முழுப்பாடல்களையும் அமைத்திருப்பார். அதனாலேயே அப்பாடல்களின் தொகுதி அபிராமி அந்தாதி ஆயிற்று.

Continue Reading →

பயணம்: ‘சூரியனை நோக்கி ஒரு பயணம் 2

8ம் நாள் – தான்ஜீர்: மொரக்கோவின் வாசல்    July 25, 2016

- மீராபாரதி - தான்ஜீரில் பழைய ரீயாட் (Riyad) ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிய இடம் ஒன்றில் தங்கினோம். மிகச் சிறிய அறை. ஒரு ஈரோ 10 டினார்கள். ஒரு கனேடியன் டொலர் 7 டினார்கள். இலங்கை இந்தியாவை விட பண மதிப்பு கூடிய நாடு. இருப்பினும் ஐரோப்பாவின் விடுதி விலைகளுக்கு சரிசமனாகவே இங்கு அறவீடுகின்றார்கள். நாம் எதிர்பார்த்ததைவிட விடுதி விலைகள் அதிகம். ஆனால் மரக்கறிகள் மிக மலிவு. சமைத்து சாப்பிட இடமில்லாதது பெரும் குறையாக இருந்தது.

நமது பொதிகளை வைத்துவிட்டு வெளியில் கிளம்பினோம். முதல் வேளை தொலைபேசிக்கு சிம் காட் ஒன்று வாங்குவது. இரண்டாவது இரவு உணவிற்கு மரக்கறி சாப்பாடு சாப்பிடக் கூடிய கடை ஒன்றைத் தேடுவது. வெளியில் வந்தவுடனையே வாசிலில் நின்ற விற்பனையாளர்கள் நம்மை சூழ்ந்து கொண்டார்கள். தாம் மதீனா பார்க்க கூட்டிச் செல்வதாகவும் எங்கே போகவேண்டும் எனக் கேட்டு நமது பயணத்தை தீர்மானிப்பவர்களாக இருந்தார்கள். நாம் அவர்களிடமிருந்து மெதுவாக நழுவி நமக்கு கிடைத்த மதீனா வரைபடத்தின் உதவியுடன் நடந்தோம்.

போகும் வழியில் சிறிய உணவுவிடுதி. அதன் உணவு விபரங்களைப் பார்த்தோம். தான்ஜின் என்ற உணவில் பல வகைகளும் மற்றும் முட்டைப் பொறியலில் பல வகைகளும் இதைவிட மாமிச உணவு வகைகளுக்கான விபரங்களும் இருந்தன. Tripadvisorஆல் சிபார்சு செய்யப்பட்ட விளம்பரமும் ஒட்டப்பட்டிருந்தது. சரி வேறு உணவு விடுதிகளை கண்டு பிடிக்க முடியாவிட்டால் இந்தக் கடையில் வந்து சாப்பிடுவோம் என நினைத்துக் கொண்டு சென்றோம். ஒரு வீதியில் நிறைய சனம். கடைகள் திறந்து வீதி முழுக்க பலவிதமான வியாபாரிகள் தமது பண்டங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.

எல்லாவிதமான சாப்பாடுகளும் திறந்து விற்பனைக்கு இருந்தன. எந்தவிதமான  உணவு பாதுகாப்பு விதிகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. ஈக்களும் மனிதர்களைப் போல உணவுப்பண்டங்களை சுற்றி குமிந்து இருந்தன. புதிதாக  வரும் ஐரோப்பியர்களுக்கு அதுவும் தற்சமயம்  ஸ்பெயினின் அழகிய நகரங்களான மலக்கா சிவிலி என்பவற்றிலிருந்து  வருபவர்களுக்கு இது ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் எம்மைப் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அப்படி இருக்காது என நினைக்கின்றோம். நாம் கனடாவில் வாழ்ந்தபோதும் இந்த இடம் நமது ஊருக்கு வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

Continue Reading →

ஆய்வு: புதுக்கவிதைகளில் நில மாசுபாடு

நிஆய்வுக் கட்டுரைகள்!லமென்பது மண், நீர், காற்று மண்ணில் உள்ள தாதுப்பொருட்கள் தட்வெப்பம் முதலிய இயற்கை வளங்கள் எல்லாம் நிறைந்த இயற்கைச் செல்வம். இவ்வியற்கைச் செல்வங்கள் மனிதனுக்கு உணவு, உடை, மருந்து, உறைவிடம் ஆகியவற்றைத் தருகின்றன. சுற்றுச்சூழலில் நிலம் ஒரு முக்கியமான உள்ளுறுப்பாக உள்ளது. பூமியின் மேற்பரப்பானது வேளாண்மைப்பயிற்சி. கனிம வளங்களை வெளிக்கொண்டு வரச் சுரங்கம் தோண்டுதல், தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் வெளியேறுதல், நகரத் கழிவுகளைக் கண் மூடித்தனமாக அகற்றுதல் முதலிய அனைத்துக் காரணிகளாலும் மாசுபடுகிறது.

ஊட்டச்சத்துக் குறைபாடுகளினாலும், நிலத்தில் நீர் தேங்கிவிடுவதாலும் உவர்ப்புத் தன்மையினாலும், அளவுக்கதிகமாக ஆடு, மாடுகள் மேய்வதாலும், பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்காத காரணத்தினாலும் மண் வள பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கரித்துகள், புகை, தூசி, கதிரியக்க, வீழ்பொருள் போன்றவை காற்றின் மூலம் நிலத்தில் படிகின்றன. இவை மழை நீரால் அடித்துச்  செல்லப்படுவதும் உண். இதனால் நிலம் மாசடைகின்றது. இதனை

“நிலத்தின் மாசு மற்றும் மாசாக்கிகளின்
மூலங்கள் பற்றிய ஒரு பொதுக் கண்ணோட்டம்”
(சுற்றுச் சூழலியல், ப. 32)

நிலம்:

1. திடக்கழிவு, சாக்கடை – வீடுகள்
2. திடக்கழிவு    – உள்ளுர் ஆட்சி
3. தொழிலகக் கழிவு நீர் – தொழிலகங்கள்
4. தீங்குயிரிக் கொல்லிகள,;       
வேதிய உரங்கள்- வேளாண்மை
5. உலேகாகக் கழிவுப் பொருட்கள்
தூசி, எண்ணெய் – போக்குவரத்து
6.கதிரியக்கப் பொருட்கள் பயனற்ற வெப்பம்-    அணுக்கதிர்  நிலையங்கள், அணுக்குண்டு சோதனை

என்று சியாமளா தங்கமணி சுற்றுச் சூழலியல் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். பல்வேறு காரணிகளால் நிலம் மாசு அடையும் படிநிலைகளை கீழேக் காண்போம்.

Continue Reading →

“சமூகரீதியான போராட்டங்களில் மீட்சிக்கான கருவியாகவே இலக்கியத்தை தெரிவு செய்தேன்” -அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் மெல்பன் சந்திப்பில் சல்மா

எழுத்தாளர் சல்மா ஆஸ்திரேலியாவில்“படைப்பு  இலக்கியமா -? ,   அரசியலா – ? இதில் எனது  இறுதித்தெரிவு எது ?  எனக்கேட்டால்,   படைப்பு  இலக்கியம்தான்  எனச்சொல்வேன். எனது   படைப்புக்கூடாக  சமூகத்தை  பார்க்கும்போது  தோன்றும் நெருக்கடிகளிலிருந்து  என்னைப் பாதுகாத்துக்கொள்ள  அரசியல்  ஒரு கவசமாகியது.   எனினும்,  எனது  சமூகம்சார்ந்த  பணியில் படைப்பு இலக்கியமே   இறுதித்தேர்வாக  அமையும் ”  என்று  தமிழகத்திலிருந்து வருகை   தந்திருந்த  எழுத்தாளரும்  சமூகச்செயற்பாட்டாளருமான சல்மா,    கடந்த  ஞாயிறன்று  மெல்பனில்  Mulgrave  Neighborhood House   மண்டபத்தில்   நடைபெற்ற இலக்கியச்சந்திப்பு    நிகழ்ச்சியில்  குறிப்பிட்டார்.  அவுஸ்திரேலியா    குவின்ஸ்லாந்து மாநிலத்தில்  நடைபெற்ற   Byron bay  எழுத்தாளர் விழாவில் பங்குபற்ற  வருதைந்திருந்த  சல்மா, சிட்னியில்   இரண்டு  தமிழ்  அமைப்புகள்  ஒழுங்குசெய்த   சந்திப்பு கலந்துரையாடலில்   பங்கேற்றபின்னர்  மெல்பனில்  நடந்த நிகழ்ச்சியிலும்   உரையாற்றினார்..

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின் துணைத்தலைவர்   லெ.முருகபூபதி  தலைமையில்   நடைபெற்ற இச்சந்திப்பில்   மெல்பனைச்சேர்ந்த  பல  எழுத்தாளர்களும்  இலக்கிய ஆர்வலர்களும்   கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்  கலந்துகொண்டவர்கள்   சல்மாவின்  வேண்டுகோளின் பிரகாரம்   தம்மை  முதலில்  அறிமுகப்படுத்திக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து   சல்மா   பற்றிய  சிறிய  அறிமுகத்தை முருகபூபதி   வழங்கினார். சல்மா   இலக்கியப் பிரதியாளராகவும்  சமூகச்செயற்பாட்டாளராகவும் ஒரே    சமயத்தில்  இயங்கிவருபவர்.   நாவல்,  சிறுகதை,  கவிதை, பயண   இலக்கியம்  முதலான  துறைகளில்  எழுதியிருக்கும்  சல்மா தமிழ்நாடு   திருச்சியில்  பொன்னாம்பட்டி  ஊராட்சி மன்றத்தலைவியாகவும்    சமூக  நலத்துறை  வாரியத் தலைவியாகவும் இயங்கியிருப்பவர்.   ஒரு  தடவை   சட்டமன்றத்தேர்தலிலும் போட்டியிட்டவர்.    செனல்  4   தயாரிப்பில்  சல்மாவின்  வாழ்வும் பணியும்    ஆவணப்படமாகியுள்ளது.  பல  உலகப்பட  விழாக்களில் விருதுகளையும்   வென்றுள்ளது.   சல்மாவின்  படைப்புகள்  ஆங்கிலம், மலையாளம்,   மராத்தி,   ஜெர்மன்,   மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

Continue Reading →

ஆய்வு: கேரள மாநிலத் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் வேளாண்மை

ஆய்வுக் கட்டுரைகள்!முதல் நான்கு வகுப்புகளிலும் வேளாண்மை குறித்துள்ள கருத்தாக்கங்கள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.

தை…தை…விதை    –    வகுப்பு ஒன்று
நாற்று நட வாரீர்    –    வகுப்பு இரண்டு
கனவு பூக்கும் வயல்    –    வகுப்பு மூன்று
கழனி பூக்கும் காலம்    –    வகுப்பு நான்கு

வேளாண்மையைப் பாதுகாப்போம் என்ற கருத்தாக்கம் பதினேழு கருத்தலகுகளாகப் பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது.\

1.    செடி வந்த வரலாறு
2.    பயிர் தொழிலின் படிநிலை வளர்ச்சிகள்
3.    விதைகாத்தல்
4.    பழங்களும் சுவைகளும்
5.    செடிகொடி மரம்
6.    உழவுக்காலம்
7.    ஏர் உழும் காளை
8.    வேளாண் சங்கம்
9.    நாற்று நடுதல் ஒரு வேளாண் கலை
10.    பூசணிப்பயிர்

Continue Reading →

Attention All Srilankan Old School Associations:

*This event is held to honour Mr. Shan Thayalan who is currently visiting Canada. He will be the Assistant Director for Sports (Physical Education) representing the Northern District of Jaffna at the tournament.யாழ் இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், சர்வதேசக்கிரிக்கட் சபையின் அமெரிக்கத் துணைக்கண்டத்துக்குரிய நடுவர்களிலொருவருமான நண்பர் ரூபானந்தசிவம் (ரூபன்) சிவனடியான் கீழ்க்கண்ட செய்தியினை அனுப்பியிருந்தார். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


Attention All Srilankan Old School Associations:

Dear Sports Secretary and President, please take part in the “SRILANKAN LEGENDS CUP”, 7 A-Side 6-Over Cricket Tournament to be held in Toronto on Saturday 27th August 2016
The “SRILANKAN LEGENDS CUP” Cricket Tournament is organized to explore the hidden talents among Srilankan female and male cricketers in Canada .This tournament is to be held as an annual event.

*This event is held to honour Mr. Shan Thayalan who is currently visiting Canada. He will be the Assistant Director for Sports (Physical Education) representing the Northern District of Jaffna at the tournament.

All Srilankan School Associations (SSA) in Canada are invited to take part in the upcoming “SRILANKAN LEGENDS CUP”. This Tournament gives young girls and boys a new opportunity to participate even if they don’t have a team to play for. For all tournament related communication, correspondence and registration please contact Ruban R Sivanadian ( Old student of Jaffna Hindu College, ICC Umpire- Americas) at rubanhit6@yahoo.com or call 416 200 2330.

Continue Reading →

சிங்கள மொழிக் கவிதை: பூனையாகிய நான்…

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலிகவிதை பற்றிய மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
ஆதி முதல், யுத்த களத்துக்கு நெடுந்தூரம் பயணம் செய்யும் போர் வீரர்கள், வழியில் பூனையைக் கண்டால், அருகிலொரு மக்கள் குடியிருப்பு இருக்கிறதென அறிந்து கொண்டனர். பூனைகள் எப்போதும் மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவை. அவ்வாறே பெண்களையும் கருதுகின்றனர். பெண்களையும் பூனைகளுக்கு ஒப்பிடுகின்றனர்.

பெண்களிடம் கூறப்படும் ‘பூனைக் குட்டியைப் போல அழகாக இருக்கிறாய்’, ‘பூனை நடை’, ‘பூனையைப் போல மிருது’, ‘பூனையைப் போல மின்னும் கண்கள்’ போன்ற வர்ணனை வார்த்தைகளைப் போலவே ‘பூனையின் குறுக்குப் புத்தி’, ‘மாறிக் கொண்டேயிருக்கும் பூனைக் குணம்’ ‘பூனையைப் போல சோம்பேறி’, ‘பூனையைப் போல பாவனை’ போன்ற வசவு வார்த்தைகளும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து அவர்களை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

பெண்கள் பூனைகளாகின்றனர்; பூனைகள் பெண்களாகின்றனர். ஆண்களின் சந்தர்ப்பங்களும், உணர்வுகளுமே அதையும் தீர்மானிக்கின்றன. கீழுள்ள கவிதையின் தலைப்பை ‘அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அக உணர்வு’ எனக் கருதினாலும், கவிதையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் அவர்களுக்கும் எப்பொழுதும் பொருந்தக் கூடியன. இக் கவிதையை பெண்ணின் மன உணர்விலிருந்து வாசித்துப் பார்க்கலாம். பெண்களை வெறுப்பவர்கள், தாம் இஷ்டப்பட்ட பிராணியைத் தலைப்பிலாக்கி, கவிதையோடு பொருத்தி வாசித்துக் கொள்ளலாம். –


சிங்கள மொழிக் கவிதை: பூனையாகிய நான்…

– தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது
உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் அழ இயலாது

உங்களிடம் கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
உங்களிடம் என்னால் அவற்றைக் கூறி விட இயலவில்லை
உங்களைப் போலவே எனக்கும் வலிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் பசிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
உங்களைப் போல என்னால் அவற்றுக்கெதிராக போராட இயலவில்லை

Continue Reading →