இப்பூவுலகில் மனித இனப் பெருக்கத்தில் மிகப் பாரிய பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டு நிற்பவர்கள் தன்னலங் கருதாப் பிறர் நலங்கருதும் பெண்குலத்தினர் ஆவர். அவர்கள்தான் பத்து மாதம் கருவைத் தம் வயிற்றில் சுமந்து பாதுகாத்துப் பிள்ளைச் செல்வங்களைப் பெற்றுத் தந்து உலகை நிலைநாட்டி நிற்கின்றனர். இது ஓர் அளப்பரிய சேவையாகும். பெண்களின் உடல் அமைப்பு அதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது. ஆண்களால் இதைச் செய்ய முடியாது. ஆனாலும் பெண்கள் கருவறையில் குழந்தை உருவாவதற்கு ஆண்கள்தான் உயிர் விந்துக்களைக் கொடுத்துதவுகின்றனர். இத்துடன் அவர்கள் உயிர் கொடுக்கும் வேலை முடிவடைந்து விடுகின்றது. தற்பொழுது உலகில் எழுநூற்றியொரு (701) கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரையும் பெற்றுத் தந்த பெருமை பெண்குலத்தாரைச் சாரும். பெண்கள் எல்லாரும் தாய்மை அடைவதையே விரும்புவர். அது அவர்கள் சுபாவம். திருமணம் ஆகியதும் பெண்கள,; குழந்தை வேண்டுமென்று திட்டம் தீட்டித் தொழிலில் இறங்கி விடுவர். அதிலும் வெற்றி காண்பது அவர்கள்தான். பிள்ளைப் பேறற்ர பெண்களை ‘மலடி’ என்று பட்டஞ் சூட்டி மகிழ்வர் மனித குலத்தார். “தாயறியாத சூல் உண்டோ? ” என்பது பழமொழியாகும். “பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த, மக்கட்பேறு அல்லபிற.” (குறள் 61) என்று பெண்நிலை முற்றும் அறிந்த திருவள்ளுவர் மக்கட்பேற்றின் பெருமை பற்றித் திருக்குறளில் பேசுகின்றார்.
அமர்வு-1 : நூல் அறிமுகம் – பிரக்ஞை
உரை- சபேஸ் சுகுணா சபேசன்
மீரா பாரதி (நூலாசிரியர்- கனடா)
வழிப்படுத்துகை- நா.சபேசன்