அஞ்சலி: அறிஞர் நுணாவிலூர் கா. விசயரத்தினம்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எழுத்தாளர் முருகபூபதி: அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு, நூணாவிலூர் விசயரத்தினம் அவர்களின் மறைவுச்செய்தி தங்கள் அஞ்சலி ஊடாகவே தெரிந்துகொண்டேன். எனது அஞ்சலியைத்தெரிவிக்கின்றேன். அவர் பற்றிய விரிவான வாழ்க்கை சரிதம் வெளிவருதல் நன்று. உங்களுக்கு அவரைப்பற்றி நன்கு தெரிந்திருக்கிறது என்பது உங்கள் சில பதிவுகளிலிருந்து அறிகின்றேன். அவர் எங்கு வாழ்ந்தார்..? எவ்வாறு மறைந்தார்? முதலான விபரங்களை பதிவகள் வாசகர்களுக்கு அறியத்தாருங்கள். நன்றி.
அன்புடன் – முருகபூபதி -letchumananm@gmail.com       

எழுத்தாளர் குரு அரவிந்தன்: எல்லோராலும் விரும்பப்பட்ட எழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரியதொரு இழப்பாகும்.  அவரது ஆத்மா சாந்தியடைய அவரது குடும்பத்தினருடன் இணைந்து  நாங்களும் பிரார்த்திக்கின்றோம். அவர் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றென்றும் வாழும். – குரு அரவிந்தன். kuruaravinthan@hotmail.com

கா.மு.அன்சாரி: எனது இனிய நண்பர்  விசயரத்தினம் மரணித்துவிட்ட துயரமான செய்தியை ஒரு நண்பர் தந்த தகவல் மூலமும், பதிவுகள் மூலமும் அறிந்தேன். பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். அமரர் விசயரத்தினம் அரசாங்க சேவையிலிருந்து  ஒய்வு பெற்றபின்னர் தமிழாராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். பொதுவாக சங்ககால இலக்கியத்திலும், குறிப்பாக தொல்காப்பியத்திலும் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். தொல்காப்பியக்கடலில் மூழ்கி, சுழியோடி தான் கண்டெடுத்த நல்முத்துக்களை தமிழை நேசிக்கும் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக ஆர்வமுள்ளவராக இருந்தார். இதற்கு அவர் எழுதிய எண்ணற்ற ஆராய்ச்சிக்கட்டுரைகளும், வெளியிடப்பட்ட நூல்களும் சான்று பகரும். இதற்கான, அறிஞர் பெருமக்களின் அங்கீகாரமும் அவருக்கு  கிடைத்துக்கொண்டே இருந்தது. அவர் வாழும் காலத்திலேயே வாசகப்பெருமக்கள் அவரை வாழ்த்திக்கொண்டே இருந்தார்கள். விருதுகள் பல அவரைத்தேடிவந்தன். சமீபத்தில் அவரது அயராத, ஆக்கபூர்வமான தமிழ்த்தொண்டை நினைவு கூர்ந்து, “பதிவுகளின்” ஆலோசகர் குழுவில் சேர்த்து கெளரவிக்கப்பட்டார் . இத்தகைய நல்ல மனிதர் இன்று நம் மத்தியில் இல்லை. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். – கா.மு.அன்சாரி, c.m.ansari@gmail.com

Continue Reading →

கவிதை: திருமண இன்னிசை வாழ்த்து – எட்மண்ட் ஸ்பென்ஸர்

- எட்மண்ட் ஸ்பென்ஸர் ( Prothalamion – Edmund Spenser ) | தமிழ் மொழியாக்கம் : முனைவர் ஆர். தாரணி -

- ஆர். தாரணி -

16 – ம் நூற்றாண்டின்,  இங்கிலாந்து ராணி  முதலாம் எலிசபெத்  அவையின் கீர்த்திமிகு நடு நாயகமாய் விளங்கிய ஆங்கிலக்கவி எட்மண்ட் ஸ்பென்ஸர், பதினான்கு வரிகளில் இயற்றும் சானெட் (Sonnet)  என்னும் பாட்டு வகையில் இயற்றிய காதல் பாடல்கள் (Amoretti) உலகப்புகழ் பெற்றவை. அது போன்றே, உயர்குலத்தை சார்ந்த லேடி எலிசபெத் மற்றும் லேடி காதரின் என்னும் இரு அழகிய இளம்பெண்களின் திருமண நிகழ்வுக்காக அவர் இயற்றிய இந்த  வாழ்த்துப்பா  மணமக்களை இரு அழகிய அன்னங்களாக்கி, திருமண நிகழ்வை வரவேற்கும் இனிய பாடலாக மட்டும் அல்லாது கண்ணுக்கினிய வர்ணங்களை கற்பனையில்  குழைத்து, வர்ணத்தூரிகை கொண்டு வரைந்த சித்திரக்காட்சிகள் போல பலவித நிறங்களை இயற்கையோடு இணைத்து வழங்கியுள்ள  பாணி இன்றளவும் யாரும் எட்டிப்பிடிக்க இயலா இனிமையாக மிளிர்கிறது என்றால் மிகையாகாது.

கவிதை: திருமண இன்னிசை வாழ்த்து – எட்மண்ட் ஸ்பென்ஸர் ( Prothalamion – Edmund Spenser ) | தமிழ் மொழியாக்கம் : முனைவர் ஆர். தாரணி

சலனமற்று “சிலிர்ப்பூட்டும் நாளொன்றின்
தென்றலின் சில்லிப்பினூடே வரும்
ஜெபெரஸ் களியாட்ட வேளையிது.

தகதக சூரியனின் கதகத ஒளிக்கற்றைகளை
இயற்கை தேவதை சோம்பலாக்க
அவளோடு இயைந்து உலவியபடியே
துயரார்ந்த சிந்தனையில் ஆழ்த்திருந்தேன்.

காலங்காலமாய் அரசவையில்
காலம் கனியா வெறுமையில்
காத்திருந்து பயனற்று சலித்துப்போன
என் மன நிறைவின்மையின் நடுவே
வெறுமை சூழ் நிழல் சிறகடிக்கிறது

Continue Reading →

அஞ்சலி: அறிஞர் நுணாவிலூர் கா.விசயரத்தினம்!

அஞ்சலி: எழுத்தாளர் நுணாவிலூர் கா.விசயரத்தினம்!

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எழுத்தாளர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள் அமரரான தகவலை முகநூல் மூலம் சற்று முன்னர் அறியத்தந்திருந்தார் எழுத்தாளர் உதயணன் அவர்கள். அதிர்ச்சியாகவிருந்தது. ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு ஆக்க, ஊக்கப்பங்களிப்பு வழங்கிய நல்ல உள்ளத்தை நாம் இழந்து விட்டோம். ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தொடர்ச்சியாகத் தனது சங்கத்தமிழ் இலக்கியம் பற்றி ஆக்கங்களை அனுப்பிக்கொண்டிருந்தவர். அதற்காகவே ‘பதிவுகள்’ இணைய இதழில் அவருக்கென்றொரு பக்கத்தையும் உருவாக்கியிருந்தோம். அவரது படைப்புகள் சிலவற்றைப் ‘பதிவுகள்’ இணைய இதழின் ‘நுணாவிலூர் கா.விசயரத்தினம் பக்கம்’ பக்கத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=section&layout=blog&id=43&Itemid=73

‘பதிவுகள்’ இணைய இதழுக்கான ஆலோசகர் குழுவிலும் ஒருவராக விளங்கிய அமரர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் ‘பதிவுகள்’ இதழுக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியவர். கணக்கியல் பட்டதாரியான இவர் தன் ஓய்வுக்காலத்தைச் சங்ககாலத்தமிழர்தம் இலக்கியத்தின்பால் திருப்பி ஆக்கபூர்வமாகத் தன் வாழ்வை மாற்றியவர். இத்துறையில் பல நூல்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அண்மையில் இவர் எழுதி ஒன்பதாவது நூலாக வெளிவந்த ‘சங்ககாலத் தமிழர் வாழ்வியல்’ நூலுக்கு ‘சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்\ என்றொரு கட்டுரையினையும் எழுதியிருந்தேன். அதனை அவர் அந்நூலின் ஆய்வுக்கட்டுரையாகப்பிரசுரித்திருந்தார்.

அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழும் இணைந்து கொள்கின்றது. ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தம் இறுதிவரையில் பங்களிப்புச் செய்த அமரர் வெங்கட் சாமிநாதனைப்போல் பங்களிப்புச் செய்தவர் அமரர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள். ‘பதிவுகள்’ இணைய இதழ் மீது மதிப்பினையும், என் மேல் அன்பினையும் வைத்திருந்த நல்ல உள்ளமொன்றினை இழந்து விட்டோம்.

அவரது படைப்புகளினூடு அவர் தொடர்ந்தும் இலக்கியத்தில் நிலைத்து நிற்பார். அவர் நினைவாக அவரது  ‘சங்ககாலத் தமிழர் வாழ்வியல்’ நூலுக்கான முன்னுரையினை மீள்பதிவு செய்கின்றோம்.

மீண்டுமொருமுறை தனிப்பட்டரீதியிலும், ‘பதிவுகள்’ சார்பிலும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Continue Reading →

கவிதை: “ ஓங்கட்டும் தமிழுணர்வு….! ”

- “கவிச்சுடர்” கி.முத்தையா ..M.A.., B.Ed., (நெல்லை.,வீரவநல்லூர்) -

உ.வே.சா,   தமிழ்த்தாத்தா  ஆகும்  முன்பே
உயர்தொண்டு  நாவலரும்  தாமோ  தரரும்
தேவையென்று  அருந்தமிழில்  வளர்த்துக்  காத்த
செந்தமிழின்  நூலகத்தை  எரித்தார்  யாழில்..!
சோவாரித்  தமிங்கிலிசில்   சூறையிட்டார்
சுதந்திரமாய்  மொழிக்கொலையும்  செய்திட்  டாரே..!
நாவார  நாணமின்றி  தமிழில்  சொல்வார்
நம்தமிழ்க்கும்  அமுதென்று  பேரும்  உண்டே..!

Continue Reading →

அஞ்சலி: எம்.ஜி.சுரேஷ்!

எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் அக்டோபர் 3 அன்று மறைந்த செய்தியினை இணையம் மூலம் அறிந்தேன். இவரது ‘பின் நவீனத்துவம்’ பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி மூலமே முதலில் இவருடனான…

Continue Reading →

ஆய்வு : புறநானூற்றில் வாழ்வியல் அறம்

முன்னுரை
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -சங்கம் என்னும் அமைப்பின் சிறப்புக்கும், சங்கத் தமிழர்களின் பெருமைக்கும் சான்றளிப்பனவாகத் திகழ்பவை சங்க இலக்கியங்கள் ஆகும். அவை தொன்மைத் தமிழர்களின் பழைழையை, தொல்பழங்கால நாகரிகத்தை, அவர்தம் வாழ்வியல் வெளிப்பாடுகளை எடுத்துரைப்பதோடு, பிறர் அறியத்தக்க, கற்கத்தக்க, ஏற்கத்தக்க நற்க்கருத்துக்களை அறமாக வகுத்துரைக்கின்றன. சங்கச் சமூகத்தில் அறம் தழைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயலாற்றியவர்கள் நமது புலவர்கள் ஆவர். அதன் பொருட்டே அவர்கள் சான்றோர் என்று சிறப்பித்து உரைக்கப்பட்டனர்.

தமிழின் இலக்கியக் கோட்பாடு அறம், பொருள், இன்பம் என்பனவற்றை முதன்னிறுத்தியவை ஆகும். இவற்றுள் சங்கப் புலவர்கள் அறத்திற்கே முதன்மை கொடுத்துள்ளனர். மனித வாழ்வின் அனைத்து நிலைப்பாடுகளிலும் அறம் வலியுறுத்தப்பட்டது. அறத்தை நிலைநிறுத்துபவர்களாக நாடாளும் தலைவர்கள் திகழ வேண்டும் என்பதனைச் சங்கப் புலவர்கள் அவர்களுக்கு செவியறிவுறுத்தலாக வலியுறுத்திக் கூறியுள்ளனர். அறத்தினின்று வழுவிய மன்னர்களைச் சங்கப் புலவர்கள் போற்றுவது மரபில் இல்லை என்பதனை அவர்களது பாடல் புனைவாக்கத்திலிருந்து உய்த்துணரலாம்.

சங்கப் பாடல்களின் புறப்பாடல்கள் தனிச்சிறப்பும், தனித்தன்மையும் வாய்ந்தனவாகும். சங்கத் தொகைநூல்களில் புறநானூறும், பதிற்றுப்பத்தும் சங்கப் போரியல் வாழ்வின் நிலைப்பாட்டினைச் சமூகவியல் நோக்கில் எடுத்துரைக்கின்றன. சங்கப் புலவர்களின் பாடல்களுக்குப் போராற்றலில் சிறந்த வீரனே பாடுபொருளாக அமைந்தான். சங்க அக வாழ்விலும், புற வாழ்விலும் வீரம் முன்னிலைப்படுத்தப் பட்டது.

சங்க கால வாழ்வியலில் புறம் பாடிய புலவர்கள், தங்கள் வயிறு வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு பாடல்களைப் புனையவில்லை. அவர்கள் பழுமரம் நாடிச் செல்லும் பறவைகளைப்போல, கொடுக்கும் குணமுடைய கொடைஞர்களைத் தேடித் தேடிச் சென்று அவர்களின் புகழினை உலகிற்கு அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு ஈதல் அறத்தைத் திறம்படச் செய்த வள்ளல்களே சங்கப் புறப்பாடல்களில் பெருமைப்படுத்தப்பட்டனர். அவ்வகையில் மக்கள் எக்காலத்தும் பின்பற்றி வாழத்தக்க அறக்கூறுகளைப் புறநானூற்றின் பொதுவியல் திணைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அவை வலியுறுத்தும் அறமானது இக்கால வாழ்வியலுக்கும் முதன்மையானதாக, எல்லோரும் கடைப்பிடிக்கத்தக்க அறங்களாக அமைவதனை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.

Continue Reading →

ஆய்வு: பெண்வெளியை முடக்கும் குடும்பக்கட்டுமானம்

முன்னுரை :
- முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -சங்க காலப் பெண் கவிஞர்களின் காலத்தை நோக்குகையில் பெண்ணிற்கானக் கட்டுப்பாடுகள் பெரும்பான்மையும் வெளிப்படையாகத் தோற்றம் அளிக்காமல் மறைமுகமாகவே இருந்தன. இருப்பினும் இக்கால பெண் கவிஞர்களின் படைப்புகள் என்பது பல்வேறு தடைகளைத் தாண்டி வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்கள் சார்ந்திருக்கும் சமூகம் அச்சமூகங்களில் ஊடாடும் சமயங்கள், சாதிகள், குடும்பம் போன்றவை உருவாக்கிய கட்டுப்பாடுகளும் தடைகளும் அத்தோடு அல்லாது மேலும் பெண் என்பதானாலேயே உருவாகும் மரபார்ந்த சட்டகம் வார்த்த மனத்தடை என இவ்வாறு பல தடைகளைத் தாண்டியே இக்கால படைப்புகளைப் பெண் கவிஞர்கள் உருவாக்க வேண்டியுள்ளது. 18, 19ஆம் நூற்றாண்டிற்கு முன்பும் சிற்றிலக்கியக் காலத்திற்கு பின்பும் சமூகத்திலும், அரசியல் களத்திலும் பல்வேறு மாற்றங்கள் உருவாயின. பல மொழிகள் நாட்டில் ஆதிக்கம் செலுத்தின. சுதந்திர இந்தியாவிற்கு முன்பும் பின்பும் ஆங்கிலவழிக் கல்வியே கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மை போதிக்கப்பட்டன. இதனால் தமிழ்ச் சூழலில் இலக்கியங்களும் தமிழ்க் கல்வி குறித்த சிந்தனையும் பின் தள்ளப்பட்டன எனலாம். அதனால் இவற்றைக் கற்கும் ஆர்வமும் குறைந்தே காணப்பட்டன. பெண்களுக்கோ அவ்வாய்ப்பு என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அதற்கான சூழலைச் சமூகமும் உருவாக்கித் தரவில்லை எனலாம். இத்தகையப் பல காரணங்கள் பெண் கவிஞர்கள் தம் படைப்புகளைப் படைப்பதற்கு நீண்ட இடைவெளி தேவைப்பட்டது. இத்தனை சூழ்நிலைகளையும் கடந்து பெண் கவிஞர் இக்காலத்தில் தமக்கான வெளியையும் மொழியையும் உருவாக்கி வருகின்றனர். படைப்பு முயற்சிகளில் பெண் கவிஞர்களுக்கு இருந்த தயக்கங்கள் தற்போது குறையத் தொடங்கியுள்ளன. பெண் குறித்து ஆண் நோக்கில் உருவாக்கப்பட்ட படைப்புகளையும் பெண் பற்றி ஆண் உருவாக்கிய பார்வையையும் விடுத்து இன்றைய பெண் கவிஞர்கள் தமது தமிழ்ப் படைப்புத் தளத்தில் மாற்றுச் சிந்தனையை உருவாக்கி அதைப் பதிவு செய்து வருகின்றனர்.

குடும்பக் கட்டுமானத்தில் பெண் நிலை : குடும்பம் எனும் அமைப்பு காலங்காலமாகப் பெண்களுக்கான கடமைகளையே அவர்களின் மீது திணித்து வருகிறது. இதனால் பெண்கள் தம் நிலையை உணர்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் “அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப்பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைபடுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்த இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் – தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள் தாம் என்று நினைத்து விட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள் தான் என நினைத்து தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும் விட்டார்கள்”1 என்ற நிர்மலாவின் கூற்று மூலம் தொடக்க காலத்தில் பெண்கள் வீட்டிற்குள் எவ்வாறு முடங்கினர் என்ற நிலையை அறிய முடிகிறது. ஆனால் இன்றைய பெண்மொழி பேசும் கவிஞர்கள் தம்மை முடக்கும் அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையினை உணரத் துவங்கி விட்டனர். அதை தம் கவிதை மொழியிலும் பெண் மொழியை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading →

பங்கிரையான் கவிதைகள்:

1. உருவத்தின் அழகு!

எனக்கும் உனக்கும்
முரண்பாடு இல்லை என்றால்
நாங்கள் தூக்கிய சிவந்த கொடிக்கு
கேலிக்கை குறைத்திருக்கும்
எங்களுக்குப் பல தோழர்களும்
பெண் தோழிகளும் கிடைத்திருப்பார்கள்
வாதிப் பிரதிவாதங்கள் எற்பட்டிருக்காது
நமக்கானவை எமக்கு கிடைத்திருக்கும் !

Continue Reading →

ஆய்வு: பழமொழி நானூறு உணர்த்தும் அரசியல் அறம்

- பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலம்பட்டி, திருமங்கலம், மதுரை - 625 706. -பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பழமொழிநானூறு பல அரசியல் கருத்தாக்கங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. அரசின் இயல்புகளை முறையே பாடல்கள் 231 முதல் 257 வரையிலும், அரசினை ஆளும் அரசனுக்குத் துணையாக நிற்கும் அமைச்சர் குறித்தும் முறையே பாடல்கள் 258 முதல் 265 வரையிலும், மன்னரைச் சேர்ந்தொழுகும் தன்மைக் குறித்தப் பாடல்கள் முறையே 266 முதல் 284 வரையிலும், மன்னரின் அங்கத்தினராயிருக்கும் படைவீரர் குறித்த பாடல்கள் முறையே 311 முதல் 326 வரையிலும் இடம்பெற்றுள்ளன. ஆக பழமொழிநானூறில் 44 பாடல்கள் அரசியல்பு தொடங்கி படைவீரர் உள்ளிட்ட தன்மைகளை ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் வரும் பழமொழிகளின் வழி வலியுறுத்தி நிற்கின்றன எனலாம்.

தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் பழமொழியை முதுமொழி, முதுசொல் என்று குறிப்பிடுகிறது. அதற்குச் சான்றாக முதுமொழி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை,

“நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப.” (பழமொழி.167)

என்னும் நூற்பா விளக்குகிறது. நுண்மை, சுருக்கம், தெளிவு, மென்மை ஆகிய இயல்புகளைக் கொண்டு கருதிய பொருளைக் காரணத்தோடு முடித்துக் கூறுதல் முதுமொழி ஆகிறது. முதுமொழியாகிய பழமொழிகள், பழமொழிநானூறின் ஒவ்வொருப் பாடலின் இறுதியிலும் இடம்பெறுகின்றன. இம்முதுமொழிகள் சொல்லப்பட்டதன் நோக்கமே சொல்லவந்த கருத்தைக் கூர்மைப்படுத்துவதற்கே எனலாம். பழமொழிநானூறில் வரும் அரசியல் குறித்தப் பழமொழிகளும் அத்தன்மையுடையதாகும். அரசியல் கொள்கைகளைப் பழமொழிகளின் வழி கூர்மைப்படுத்த முனைகின்றன.

“பழமொழிகள் எனப்படுபவை புதியனவாக அமைக்கப்படாது வழிவழியாக மக்களிடையே வழங்கிவரும் சுருதியுத்தி அனுபவங்களுக்கு இயைந்த அறிவுரை வாக்குகளாகும். இவை கருத்துக்களைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் கேட்போர் உளங்கொள்ளும் வகையிலும் தெரிவிக்கின்றன. இவை பொதுமக்களின் அனுபவம் வாயிலாக அவர்களது உணர்ச்சியினின்று வெளிப்படுவன என்பார் ஆ.வேலுப்பிள்ளை.” (தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்,பக்.73,74) அரசன் நீதி கூறுகின்றபோது தனக்கு இவர் நண்பர். தனக்கு இவர் பகைவர் எனக் கருதுவானாயின் அது அவனுடைய செங்கோல் தன்மைக்குக் குற்றமுடையதாகும். தனக்கு மிக்க வேண்டியவராயினும் தகுதியற்ற செயலைச் செய்கின்றபோது வன்கண் உடையவனாகி அவனைத் தண்டிக்க மனமில்லாதவன் அரசினை ஆளும் தகுதியில்லாதவன் எனும் கருத்தியல் பழமொழி நானூறில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை,

Continue Reading →