மானுடரின் வாழ்வின் வளர்ச்சிப் பருவங்களில் ஏற்படும் காதல் உணர்வுகள் தவிர்க்க முடியாதவை. இங்கு ஒரு பெண்ணின் காதல் உணர்வுகளைத் தன் எழுத்தால் சிறப்பாக வடித்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். அதற்குக் குரலால் உயிரூட்டியுள்ளார் பாடகர் பி.சுசீலா. நடிப்பால் உயிரூட்டியிருப்பவர் நடிகையர் திலகம். பாடலுக்கு இசையால் உயிரூட்டியுள்ளவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர். பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் : ” காத்திருந்த கண்கள்”
“ஊரெல்லாம் உறங்கிவிடும் உள்ளம் மட்டும் உறங்காது
ஓசையெல்லாம் அடங்கி விடும். ஆசை மட்டும் அடங்காது
ஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நினைத்திருப்பேன்.” – கவிஞர் வாலி –
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘கற்பகம்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கவிஞர் வாலியின் பாடல் ‘பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்’. பி.சுசீலாவின் உயிரோட்டமான குரலில், நடிகையர் திலகம் சாவித்திரியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் உயிரோட்டமான நடிப்பில், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையரின் உயிரோட்டமான இசையில் ஒலிக்கும் காலத்தால் அழியாத இன்னுமொரு கானம். இப்பாடலும் காதல் வயப்பட்ட உள்ளத்துணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தும் பாடல்.