சிறுகதை: பாம்பும் ஏணியும்

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2018 இல்  முதற் பரிசு பெற்ற சிறுகதை கே.எஸ்.சுதாகரின் ‘பாம்பும் ஏணியும்’. நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது.பதிவுகள்


சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கடை. ஜனகன் பெரும்பாலான நாட்களில் தனக்குத் தேவையான உணவை அங்குதான் எடுத்துச் செல்வான்.

’பிறின்சஸ்’ என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அங்கு யாரும் வேலை செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வயது முதிர்ந்தவர் திருநீற்றுப்பூச்சுடன் பக்திப்பாடல்களை முணுமுணுத்தபடி கல்லாவில் இருப்பார். அவரின் மனைவியும், கூடமாட எடுபிடி வேலை செய்யும் ஒரு பையனும் அங்கே இருப்பார்கள். சமையல் அறைக்குள் யார் யாரெல்லாம் இருப்பார்கள்?

சமீப நாட்களாக குசினிக்குள் வேலை செய்யும் ஒருவர், மறைவாக ஒழித்து நின்று ஜனகனைப் பார்க்கின்றார். ஜனகனும் அதை அறிவான். கண்களைப் பார்த்தால் பெண்போல இருக்கின்றாள். ஒருபோதும் நேரில் கண்டதில்லை.

ஜனகன் கம்பீரமான உயர்ந்த இளைஞன். கூரிய மூக்கு. அளவாக வெட்டப்பட்ட மீசை. ஸ்ரைல் கண்ணாடி. பார்த்த மாத்திரத்தில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோற்றம்.
எப்போதும் அயன் செய்யப்பட்டு மடிப்புக் குலையாத ஆடை. சமயத்தில் தருணத்திற்கேற்றபடி நகைச்சுவையை அள்ளி வீசுவான். கல்லாவில் இருக்கும் முதியவருடன் அடிக்கடி பேச்சுக் கொடுப்பான்.கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா.

இன்று காலை கடையில் அலுவலை முடித்துக் கொண்டு வெளியேறுகையில் அவனுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது.
கசக்கி எறியப்பட்ட கடதாசித் துண்டு ஒன்று அவன் கால் முன்னே வந்து விழுந்தது.

குப்பைக்கூடைக்குள் அதை எறியப்போனவன், ஏதோ ஒரு யோசனை வந்ததில் அதை பிரித்துப் பார்த்தான்.

“நீங்கள் தனியாகவா இருக்கின்றீர்கள்?” என அதில் எழுதி இருந்தது.

ஜனகனின் மனம் குழம்பியது. குரங்கு போலக் கும்மியடித்தது. அன்று அவனால் ஒழுங்காக வேலை செய்யமுடியவில்லை. வீட்டிற்கு வந்தால் உறங்க முடியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது? பெண்ணை நேரில் பார்க்காமல் எப்படி?

Continue Reading →

எழுத்தாளர் நெல்லை க.பேரனை நினைவு கூர்வோம்!

நெல்லை க.பேரன் குடும்பத்தினர்எழுத்தாளர் நெல்லை க.பேரனின் நினைவு தினம் ஜூலை 15. 1991 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 அன்று இராணுவம் வீசிய ஏவுகணைக்களிலொன்று இவரது வீட்டின்மேல் விழுந்ததில் இவரது குடும்பத்தினர் அனைவருடன் இவரும் கொல்லப்பட்டார். அவர் நினைவாக அவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும், ‘நூலகம்’ தளத்திலுள்ள ‘வளைவுகளும், கோடுகளும்’ நாவலுக்கான இணைய இணைப்பினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து (https://ta.wikipedia.org/s/i8f) …

நெல்லை க. பேரன் (கந்தசாமி பேரம்பலம், டிசம்பர் 18, 1946 – ஜூலை 15, 1991) ஈழத்து எழுத்தாளர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினம், கவிதை, நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர்.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் கந்தசாமி, பறுபதம் ஆகியோருக்குப் பிறந்தவர் பேரம்பலம். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம், சட்டக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி கற்றார். பேரன் 1960களின் தொடக்கத்தில் வீரகேசரியில் யாழ்ப்பாண செய்தியாளராகவும், பின்னர் 1966 இல் அஞ்சல் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். குவைத் நாட்டில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். இவரது சிறுகதைகள் ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் மற்றும் சத்தியங்கள் ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. விமானங்கள் மீண்டும் வரும் என்ற குறுநாவல் இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1986 இல் நூலாக வெளிவந்தது.

1991 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் நாள் இலங்கை இராணுவம் ஏவிய எறிகணை ஒன்று பேரனின் வீட்டில் வீழ்ந்ததில் பேரன், மனைவி உமாதேவி, மகன் உமாசங்கர் (14 வயது), மகள் சர்மிளா (7 வயது) ஆகிய நால்வரைக் கொண்ட பேரன் குடும்பம் கொல்லப்பட்டது

இவரது நூல்கள்

ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறான் (சிறுகதைகள், 1975)
விமானங்கள் மீண்டும் வரும் (புதினம்)
வளைவுகளும் நேர்கோடுகளும் (புதினம், 1978)
சத்தியங்கள் (சிறுகதைகள், 1987)
பேரனின் கவிதைகள்
சந்திப்பு (நேர்காணல்கள், 1986)

Continue Reading →

வாசிப்பும் , யோசிப்பும் 344: எழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம் பற்றியதொரு நனவிடை தோய்தல்!

எழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம் தம்பதிஎழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம் அவர்களை நான் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அம்மா அராலி இந்துக்கல்லூரியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தபோது என் சகோதரன், இளைய சகோதரிகள் இருவரும் அங்குதான் படித்தார்கள். அங்குதான் ஆசிரியராக அப்பச்சி மகாலிங்கம் அவர்களும் பணி புரிந்து வந்தார். நவாலிப்பக்கம் வசித்து வந்ததாக என் தம்பி கூறுவான். அப்பச்சி மகாலிங்கம் அவர்களை நான் நேரில் அறிந்திருக்காவிட்டாலும் , அவரது சிறுகதைகள் பல வீரகேசரி வாரவெளியீட்டில், ஈழநாடு (யாழ்ப்பாணம்) வாரமஞ்சரியில் வெளியாகியிருப்பதை அறிந்திருக்கின்றேன். கடற்றொழிலாளர்களை மையமாக வைத்து அவரது கதைகள் பல இருந்தன.

என் தம்பி எழுத்தாளர் கடல்புத்திரனாக உருமாறியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அப்பச்சி மகாலிங்கம். இது பற்றிக் கடல்புத்திரன் தனது ‘வேலிகள்’ சிறுகதைத்தொகுதியில் பின்வருமாறு கூறுவார்: “இந்த என் எழுத்து முயற்சிக்கும் சிறிய வரலாறு இருக்கிறது. முதலில் 6-9 வகுப்பு வரையில் எனக்கு தமிழ்ப்பாடம் கற்பித்த அப்பச்சி மகாலிங்கம் ஆசியரை குறிப்பிட்டேயாக வேண்டும். நான் எழுதுகிற கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் இருந்தபோதும், அவற்றை பொறுமையுடன் படித்து எடுத்த விசயங்களையும், சம்பவங்களையும் பாராட்டியே வந்தார். “அ” னாவையும் ‘சு’ னாவையும் கவனித்து எழுது. வித்தியாசமில்லாமல் எழுதுகிறாய் கவனமாகவிரு உன்னால் கொஞ்சமாவது எழுத முடியும் என்பார்”.

அவரது நாவலொன்றும் வீரகேசரி பிரசுரமாகவும் வெளியானது. அவரது சிறுகதைகளில் ‘கடல் அட்டைகள்’ பற்றிய சிறுகதையொன்றைக் கடல்புத்திரன் அடிக்கடி சிலாகிப்பதை அவதானித்திருக்கின்றேன்.

அவரது ஆக்கங்களை மீண்டும் படிக்க வேண்டுமென்று ஆசையேற்பட்டது. நூலகம் தளத்திலும் தேடிப்பார்த்தேன். நூல்களாகக் கிடைக்கவில்லை. பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இருக்கலாம். தேடிப்பார்க்க வேண்டும். ஈழநாடு பத்திரிகைகள் பல இன்னும் வாசிக்கும்படியாக பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இவரது புத்திரனான மகாலிங்கம் கெளரீஸ்வரன் என் முகநூல் நண்பர்களிலொருவராக இருக்கின்றார். அண்மையில்தான் அறிந்துகொண்டேன். அவரிடம் அப்பச்சி மகாலிங்கள் படைப்புகள் இருந்தால் பதிவேற்றம் செய்யும்படி கூறியிருந்தேன். புகைப்படமிருந்தாலும் அனுப்பும்படியும் கூறியிருந்தேன். அனுப்பியிருந்தார். அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். விரைவில் அவரது படைப்புகளை நூலுருவில் பார்க்கக் காலம் துணை செய்யட்டும்.

இவரைப்பற்றி நூலகம் தளத்தில் ஆளுமைகள் பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

Continue Reading →