செல்வி துளசி பாலமுரளியின் மறைவு பற்றி….

துளசி பாலமுரளிஎன் சகோதரன் எழுத்தாளர் பாலமுரளி (கடல்புத்திரன்) – காஞ்சனா தம்பதியினரின் புத்திரி செல்வி துளசி பாலமுரளி 8.7.2019 அன்று  தனது இருபத்து மூன்றாவது வயதில் இவ்வுலகை விட்டு நீங்கினார். மருத்துவரின் கவனக்குறைவினால் பிறப்பிலேயே பாதிக்கப்பட்ட துளசி  இதுநாள் வரை இருப்புக்கான தனது போராட்டத்தைத் துணிவுடன் எதிர் கொண்டு வந்தார். தனக்குரியதோர் உலகினில் வாழ்ந்தபோதினும் சுற்றியிருந்த அனைவருக்கும் இன்பத்தையே தந்து வந்தார். அவ்வப்போது புன்னகை மலர அனைவரையும் நோக்கும் துளசியின் முகம் நினைவிலென்றும் நிழலாடும். தன்னால் முடிந்தவரை இருப்புக்காகப் போராடிய துளசி பற்றிய நினைவுகள் அனைவர்தம் நெஞ்சங்களிலும் என்றும் பசுமையாக நிலைத்து நிற்கும்.

இவரது ஈமச்சடங்குகள்  Highland Funeral Home – Scarborough Chapel இல் ஜூலை 11, 2019 காலை நடைபெற்றன. பின்னர் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்பட்டு, St. John’s Norway, 256 Kingston Rd., Toronto ON M4L 1S7  என்னும் முகவரியில் அமைந்துள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இது பற்றிய விரிவான விபரங்களுக்கு: https://www.arbormemorial.ca/highland-scarborough/obituaries/miss-thulasi-balamuraly/36225/  துளசி பாலமுரளியின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. முகநூலில் இது பற்றிய தகவலறிந்து தமது அஞ்சலியினைத் தெரிவித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.


செல்வி துளசி பாலமுரளியின் பிரிவை எண்ணிக் கவிஞர் தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் எழுதிய அஞ்சலிக் கவிதை . –

துளசி மீண்டும் வரமாட்டாளா?

– தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் –

மனக்குறள் 9 & 10

மலர்தலை உலகம் மன்பதை சிறக்கும்
வளர்கலை அறிவம் வையகம் ஆக்கும்

புலர்பொழு தொன்றில் பூத்திட நின்ற
மலர்மகள் துளசி மலர்ந்திடக் கண்டோம்!

எழுத்துல கத்தொடும் இயம்பிடும் மானுடம்
பழுத்தவோர் மடியினிற் பாங்கினள் ஆயினும்

வழுத்திய மான்மகள் வைத்தியம் வதையுற
அழுத்திய தாம்பிழை ஆக்கினர் என்பதும்

Continue Reading →

‘பதிவுகள்’ வாசகர் கடிதங்கள் பகுதி ஒன்று (2000 -2006)

– ‘பதிவுகள்’ இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், பாவண்ணன், அ.முத்துலிங்கம், கந்தையா ரமணீதரன், நாகரத்தினம் கிருஷ்ணா, புதியமாதவி, மான்ரியால் மைக்கல், முத்துநிலவன், டிசெதமிழன், மருத்துவர் முருகானந்தன், கவிஞர் ஜெயபாலன் , சுமதி ரூபன்,  வெங்கட் சாமிநாதன் ,  லதா ராமகிருஷ்ணன், கே.எஸ்.சிவகுமாரன், என்று இவர்களைப் போன்ற  கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின்கருத்துகளை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களும் இவற்றிலுள்ளன. இவற்றில் சில பல முக்கியமான விவாதங்களையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றைப் பதிவு செய்வதன் அவசியம் கருதி இத்தொகுப்பு பதிவாகின்றது. ஏனைய கடிதங்கள் அடுத்த தொகுப்பில் இடம் பெறும். –


 

From: SANKAR SUBRAMANIAN
To:
Sent: Thursday, October 12, 2000 4:01 PM
Subject: வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

தேன் மதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிட பாரதி கண்ட கனவை மெய்ப்பிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியரே. “genom” சாத்தியப் பட்டால் வாழ்க நீவிர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள். உன்னை பெற்ற தமிழ்த்தாய் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பாள். ‘வலை விரித்தேன்’. ‘பதிவுகள்’ கண்டேன். நெஞ்சம் வலையில் படிந்து விட்டது. ‘பதிவுகள்’ தொடர்ந்து படிப்பேனே. மனதில் பட்டதை சொல்வேனே. மீண்டும் அடுத்த பதிவுகள் பார்த்து எழுதுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா! வாழ்க நீவிர் பல்லாண்டுகள்.
அன்புடன்
சங்கரன்

Continue Reading →