கானடா நாடென்னும் போதினிலே

கானடா நாடென்னும் போதினிலே, இன்பக்
கானம்வந் தோதும் நம் காதினிலே
தேனினும் இனிய தேசமடா, இதைத்
தேடிப் புகுந்ததும் எம் யோகமடா

எங்கெங்கு காணினும் ஏரிகளே, திசை
எப்புறம் நோக்கினும் ஆறுகளே
பொங்குநீர் வீழ்ச்சிகள் மேவுமடா, பனிப்
பூக்களை வானமும் தூவுமடா

ஊசி இலைமரக் காடுகளாம், பனி
ஓங்கும் உயர்மலை மேடுகளாம்
வீசும் பனிப்புயல் வீடுகளாம், குளிரும்
வெப்பமும் மாறிடும் பருவங் களாம்.

Continue Reading →

கனடா தேசீய கீதம்

கனடா தேசீய கீதம்

ஓ கானடா !
எமது இல்லமே ! சொந்த பூமியே !
நின் மாந்தரிடம் எல்லாம்
நிஜ தேசப் பற்றை
நிலை நாட்டுவது நீதான் !
ஒளி நிறைந்த
உள்ளத் தோடு நீ
உயர்வதைக் காண்கிறோம் !
நேர்வட திசையில் நீ
நிலைத்திடும் தனி நாடே !
நீண்டு அகண்ட கண்டமே,
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
சீரும் சிறப்பும் பொங்கிட
எமது திரு நாட்டை, இறைவா நீ
சுதந்திர நாடாய் வைத்திரு !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !

Continue Reading →