இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு – ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு*

*முனைவர்.க.சுபாஷிணி*தொல்லியல் அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்ற சான்றுகள் ஒரு இனத்தின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு அடித்தளம் அமைக்கும் முக்கியக் கருவிகளாகும். தமிழ் இனத்தின் பண்டைய நாகரிகத்தையும், வரலாற்றையும், பண்பாட்டுக் கூறுகளையும் துல்லியமாகக் கண்டறிய தொடர்ச்சியான அகழ்வாய்வுகள் அவசியமாகின்றன. தமிழ் மக்கள் இன்று அதிகம் நிலைபெற்றிருக்கும் பகுதிகள் மட்டுமன்றி, இந்த இனம் பரவலாகச் சென்றிருக்கக் கூடிய பல்வேறு பகுதிகளிலும் அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்படும் சூழலில் தமிழ் மக்களின் வரலாறு மேலும் தெளிவு பெறும். இதன் அடிப்படையில் காணும் போது தமிழ் இனத்தின் முக்கிய வாழ்விட நிலப்பகுதியாக உள்ள தமிழகம் மட்டுமன்றி அதன் தீபகற்ப இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இலங்கையிலும் அதிக அளவில் தொல்லியல் அகழ்வாய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அந்த ரீதியில் அண்மையில் இலங்கையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கட்டுக்கரை பகுதியில் யாழ் பல்கலைக்கழத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர் டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்கள் தலைமையில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த அகழ்வாய்வு பற்றிய செய்தியைச் சிக்காகோ நகரில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஆய்வரங்கில் ஈழத்தில் இருந்து கலந்து கொண்ட பேராசிரியர் புஷ்பரட்ணம் ஆய்வுக்கட்டுரையாக சமர்ப்பித்தார்.

இந்த அகழ்வாய்வு வட இலங்கையில் கட்டுக்கரை என்ற இடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வரங்கின் தொகுப்பில் வடஇலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புராதன குடியிருப்பு மையம் கட்டுக்கட்டுரையில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கைத் தழிழரின் பூர்வீக வரலாறு விஜயன் வருகைக்கு முன்னர் (2500ஆண்டுகளுக்கு முன்னர்) நிலவிய பண்பாடுகளில் இருந்து தொடங்குவதை இலங்கையில் தமிழ்மக்களின் மிக நீண்ட தொடர்பினை இது உறுதி செய்வதாக அமைந்தது என்பதோடு சிங்கள மொழி உருவாக்கம் பெற்றதாகக் கருதப்படும் காலகட்டமான கிபி 6 அல்லது 7க்கு முன்னரே தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதிதான் இன்றைய இலங்கை என்பதை உறுதி செய்வதாகவும் அமைகின்ற ஒரு மிக முக்கியச் சான்று காட்டும் ஆய்வாகவும் இது அமைந்துள்ளதை விளக்கினார்.

Continue Reading →

யாழ்ப்பாணப் புத்தகத்திருவிழா!

யாழ்ப்பாணப் புத்தகத்திருவிழா!

இன்று வெளியான ‘காலைக்கதிர்’ பத்திரிகையில் வெளியான செய்தியொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி செப்டம்பர் 1 வரை யாழ் வீரசிங்க மண்டபத்தில், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணத்துக்கமைய நடைபெறவுள்ள ‘யாழ் புத்தகத் திருவிழா’ பற்றியது. பெரிய அளவில் நடைபெறவுள்ள இப்புத்தகத்திருவிழாவில் பாடப்புத்தகங்களுடன் இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று அறிய முடிகின்றது.

Continue Reading →

நிகழ்வுகள்: இத்தாலியில் ஜெயசீலனின் இரண்டு கவிதை நூல்களின் வெளியீடு

நிகழ்வுகள்: இத்தாலியில் ஜெயசீலனின் இரண்டு கவிதை நூல்களின் வெளியீடுஇத்தாலியில் வாழ்ந்தாலும் தான் வாழ்ந்த நாரந்தனை மண்ணின் கனவுகளைச் சுமந்து ‘புலத்தின் கனவு’, ‘குளிர்விடும் மூச்சு’ ஆகிய இரண்டு கவிதைத்  தொகுதிகளை தந்திருக்கும் அந்தோனிப்பிள்ளை  ஜெயசீலனின் தமிழ் உணர்வு பாராட்டுக்குரியதொன்றாகும். சொந்த மண்ணில் வழங்கள் நிறைய இருந்தபோதிலும் அவற்றை பூரணப்படுத்திக் கொள்ள முடியாத பல தடைகள் தாயக மண்ணிலே நிகழ்ந்துவிட்டதே என்று மனதில் எழும் ஆதங்கங்களை மென்மையான கவிதை வரிகளிலே தமிழ் உணர்வும்,  ஆத்மீக மரபும்ää சமூக பொறுப்புணர்வும் கொண்டு படைத்திருக்கும் இக்கவிதை நூல்கள் ஜெயசீலனின் வெற்றிகரமான முயற்சியாகும். மிகவும் குறுகிய காலமே அவருடன் நான் பழக நேர்ந்தபோதிலும் ஒரு கருமத்தை எடுத்தால் அதனை நேர்த்தியாகச் செய்யும் ஆற்றல் அவரிடம் பொதிந்துள்ளது கண்டு வியந்திருக்கிறேன்’  என்று இத்தாலியின் பலர்மோ நகரின் கோல்டன் திரையரங்கில் இம்மாதம் ஆறாம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற நூல்வெளியிட்டு விழாவில் தலைமை தாங்கி உரையாற்றிய ஆன்மீகப்பணியக இயக்குனர் அருட்பணி பீற்றர் ராஜநாயகம் தெரிவித்தார்.

‘புலம் பெயர்ந்து வாழ்ந்த நிலையிலும் இங்குள்ள தமிழ் சிறார்கள் தமிழ் மொழியைக் கற்று நமது தமிழ் பண்பாட்டை பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு பலர்மோவில் இலக்கிய மன்றத்தை நிறுவி தமிழ்ப்பணி ஆற்றி வரும் ஜெயசீலனின் சமூக உணர்வு மதிக்கத்தக்கதொன்றாகும். கவிதைகள் மெல்லுணர்வுகளை வாசிப்போர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கவிபுனையும் ஆற்றல் ஜெயசீலனிடம் நிறையவே காணக்கிடக்கிறது’ என்று கௌரவ விருந்தினராக பிரான்சிலிருந்து வருகை தந்திருந்த குரூஸ் ஜெயசீலன் அவர்கள் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

‘கலை, கலாச்சாரம்,  நற்சிந்தனை ஆகியவற்றை  போதித்து என்றும் நல்லதையே செய்ää நல்லதையே நினை, வீழ்ந்தாலும் தாழ்ந்தாலும் துணிவோடு எழுந்து நில் என்று என்னைச் செதுக்கி வளர்த்தது போலவே என் தந்தை தன்; அயராத உழைப்பினால் கவிதை மணிகளைத் தந்திருக்கும் பண்பினை எண்ணிப் பெருமைப் படுகின்றேன்’ என்று செல்வி . யூலியா ஜெயசீலன் அவர்கள் இத்தாலி மொழியிலும்,  தமிழிலும் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.

Continue Reading →

கவிதைகள் மூன்று!

முகவரி.

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

திமிராகக் கம்பீரமாகக்
கரையொதுங்கும் அலைகளின்
நுரைச் சதங்கைகள் அமைதியாகின.
ஆர்ப்பரித்தலும் அடங்குதலும் அதன் விதி.
சங்கு சிப்பிகளை அள்ளி வருதலே அதன் முகவரி

கடல் மொழியின் கிளை உச்சாணியில்
காத்திருக்கும் பறவையாக அல்ல
சிறகு விரிக்கும் கவிதைப் பறவையாக நான்.
oo

வாழ்வு முழுதும்...

கெட்ட வார்:த்தைகள் மொழியும் ஒருவன்
கெட்ட வார்த்தைகளால் வளர்க்கப் பட்டிருப்பானோ!
கொட்டிப் பின்னப்பட்டு குட்டுப்பட்டும்
கெட்ட வார்த்தையோடு அமர்ந்திருப்பது
பட்ட மரத்தினடியில் இருப்பது போன்றது.
கெட்ட கனவுகளின்  கிண்ணமே  அவள் வாழ்வு முழுதும்.

Continue Reading →

ஆய்வு: தொண்டைநாட்டுக் கச்சி மாநகர்

தொண்டைமான் இளந்திரையனின் குடிமரபினர் காஞ்சிமாநகரை முதன்மை இடமாகக் கொண்டு ஆண்டு வந்தனர் என்பதை இலக்கியங்கள் காட்டுகின்றன. பண்டைய இலக்கியங்களில் காஞ்சிமாநகரைக் கச்சி, கச்சப்பேடு, கச்சிப்பேடு, கச்சிமூதூர், கச்சிமுற்றம், என்று அழைத்துள்ளனர். இம்மாநகரை ஆண்ட மன்னர்களையும் வேந்தர்களையும் அரசர்களையும் தலைவர்களையும் வள்ளல்களையும் இலக்கியங்களில் கச்சியோன், கச்சியர், கச்சிவேந்தன், கச்சிக்காவலன், கச்சியர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். கச்சி என்ற சொல்லானது காஞ்சிமாநகரைக் குறிக்கும் சொல்லாகும். இது இன்றையக் காஞ்சிபுரப் பகுதியாகும் என்பதைத் தமிழ்மொழி அகராதி, மதுரைத் தமிழ்ப்பேரகராதி, அபிதான சிந்தாமணி, கழகத்தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி, வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி, தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி போன்ற அகராதிகள் குறிப்பிடுகின்றன. பெரும்பாணாற்றுப்படையில் கச்சிமூதூரின் சிறப்புகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கச்சிமூதூருக்கு உள்ள நிலப்பரப்பு, மக்களின் பண்பாட்டுக்கூறுகள், வழக்காற்றுக்கூறுகள், பாணனின் வறுமை, பரிசில் பெற்றோரின் செல்வநிலை, தொண்டைமான் இளந்திரையனின் மாண்பு, ஆட்சியின் பெருமை, உப்புவணிகர் செல்லும்வழி, கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டுவழி, எழினர் குடிசை, புல்லரிசி எடுத்தல், எயிற்றியர் அளிக்கும் உணவு, பாலை நிலக் கானவர்களின் வேட்டை, எயினர் அரண்களில் பெறும் பொருள்கள், குறிஞ்சி நிலமக்களின் வாழ்க்கை, கோவலர் குடியிருப்பு, கோவலரின் குழலிசை, முல்லை நிலத்தில் கிடைக்கும் பொருள், மருதநிலம் சார்ந்த முல்லைநிலம், மருதநிலக் காட்சிகள், நெல்வயல்கள், நெல்லரிந்து கடாவிடுதல்,  மருதநிலத்து ஊர்களில் பெறும்உணவுகள், கருப்பம்சாறு, வலைஞர் குடியிருப்பு, வலைஞர் குடியில் பெறும்உணவு, தாமரைமலரை நீக்கி ஏனைய மலர்களைச்சூடுதல் அந்தணர்  குடியிருப்பும் அங்குப் பெறும்உணவும் , நீர்ப்பெயற்று என்னும் ஊர், அத்துறைமுகப் பட்டினத்தின் சிறப்பு, பட்டினத்து மக்களின் விருந்தோம்பல் பண்பு, ஒதுக்குப்புற நாடுகளின்வளம், திருவெஃகாவின் சிறப்பும் திருமால்வழிபாடும், கச்சிமூதூரின் சிறப்பு, இளந்திரையனின் போர்வெற்றி, அரசனது முற்றச்சிறப்பு, திரையன் மந்திரச்சுற்றமொடு அரசுவீற்றிருக்கும் காட்சி பாணன் அரசனைப் போற்றியவகை, பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல், பரிசுவழங்குதல், இளந்திரையனது மலையின் பெருமை முதலான செய்திகள் அதில்    கூறப்பட்டுள்ளது. சிறுபாணாற்றுப்படை, மலைபடுகாடாம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் கச்சிமாநகரின் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

கச்சி என்ற சொல் மணிமேகலையில், பூங்கொடி கச்சிமாநகர் புக்கதும் (மணி.பதி.90), பூங்கொடி கச்சிமாநகர் ஆதலின் (மணி.28:152), கச்சிமுற் றத்து நின்உயிர் கடைகொள (மணி.21:174), பொன்எயில் காஞ்சி நகர்கவின் அழிய (மணி.21:148), பொன்எயில் காஞ்சி நாடுகவின் அழிந்து (மணி.28:156), செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை (மணி.21:154), என்றும் பெருபாணாற்றுப்படையில் கச்சியோனே கைவண் தோன்றல் (பெரும்பாண்.420) எனவும் காஞ்சி அல்லது கச்சிமாநகர் பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன. சங்ககாலத்திற்கு முன்பிருந்தே கச்சி என்ற காஞ்சிமாநகர் களப்பிரர்காலத்திலும் பல்லவர் காலத்திலும் பிற்காலச் சோழர்காலத்திலும் விசயநகரப் பேரரசுக்காலத்திலும் ஆங்கிலேயர்காலத்திலும் சிறந்து விளங்கியுள்ளது என்பது வரலற்று உண்மையாகும். கச்சிப்பேடு என்றிருந்த காஞ்சிபுரம் திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பிலும் திருநாவுக்கரசரின் தேவாரத்திலும் கச்சி என்றும் காஞ்சி என்றும் பாடப்பட்டுள்ளது. கி.பி.7-ஆம் நூற்றாண்டுத் தமிழ்நூல்களிலும் இது பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கிறது.

Continue Reading →