முகநூல்: புலம்பெயர் தமிழர் படைப்புகள் பற்றி….

87, 88இல் இருந்து புகலிடச் சூழலையும், வாழ்வனுபவங்களையும் பாடுகளமாகவும், பாடுபொருளாகவும் வைத்து அன்றைய புகலிடச் சஞ்சிகைகளில் ஏராளமான கதைகள் வெளியாகியிருக்கின்றன. முயன்றால் ஆயிரம் இத்தகைய கதைகளைத் தொகுக்க…

Continue Reading →

புலம்பெயர் தமிழர்தம் படைப்புகள் 1: பனியும் பனையும் – புகலிடக்கதைக்களங்களையும், பாத்திரங்களையும் உள்ளடக்கிய புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் புனைகதைகளின் தொகுப்பு. –

புலம்பெயர் தமிழர்தம் படைப்புகள் 1: பனியும் பனையும் - புகலிடக்கதைகளளங்களையும், பாத்திரங்களையும் உள்ளடக்கிய புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் புனைகதைகளின் தொகுப்பு. - வ.ந.கிரிதரன் - வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்.....; புகலிடப்படைப்புகளைப்பற்றி...; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....இத்தொகுப்பிலுள்ள 39 கதைகளைப்பற்றியும் சுருக்கமான குறிப்புகளை அவ்வப்போது  பதிவு செய்யப்போகின்றேன். 1994இல் வெளியான இத்தொகுதி பற்றிய முழுமையானதொரு ஆய்வுக்கட்டுரைக்கு முதற்படியாக இவ்விதம் செய்வது பயனுள்ளது என்பது என் கருத்து. இது போல் தொடர்ந்தும் வாசிக்கவுள்ள அனைத்துப் புகலிடத்தமிழ்க் கதைகள் பற்றிய குறிப்புகளையும் அவ்வப்போது பதிவு செய்வேன். காரணம்: புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்தவர்களின் கதைகள் புகலிடக் கதைகளங்களை உள்ளடக்கியுள்ளனவா அல்லது இழந்த மண் மீதான கழிவிரக்கங்களை மட்டுமே வெளிப்படுத்துகின்றனவா என்பதை அறியும் பொருட்டுத்தான். தொடர்புகள் காரணமாகத் தமக்குக் கிடைக்கும் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் ஒரு சில கதைகளை மட்டும் படித்துவிட்டுப் புலம்பெயர் தமிழர் படைப்புகள் புகலிடக் கதைக்களங்களை, பாத்திரங்களை வெளிப்படுத்தவில்லை என்று கிளிப்பிள்ளைபோல் கூறிவரும் கூற்றுகளில் எவ்வளவு உண்மையுள்ளது என்பதை ஆராய்வதும் இவ்விதமான என் பதிவுகளுக்கு முக்கிய காரணங்களிலொன்றாகும்.

கதை ஒன்று:  ‘பனியும், பனையும்” தொகுப்பில் முதற் தொகுதிக்கதைகள் அவுஸ்திரேலியக் கதைகள். மொத்தம்: ஒன்பது. முதலாவது கதையின் தலைப்பு: …பனையும். எழுதியவர்: சந்திரிகா ரஞ்சன். அச்சிறுகதை பற்றிச்சிறிது பார்ப்போம்:

‘பனியும், பனையும்’: ஆஸ்திரேலியாக் கதைகள் 1- சந்திரிகா ரஞ்சனின் ‘…பனையும்’.

இந்தக்கதை கூறும் பொருள்தானென்ன? நிறுவனமொன்றில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்க்கும் இலங்கைத்தமிழர் ஒருவரின் பார்வையில் கதை கூறப்படுகிறது. கதை சொல்லி தன்னைப்பற்றிக் கதையின் தொடக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:

Continue Reading →

லண்டனில் ஈழத்;தமிழ் மாணவர்கள் குறித்துக் கலந்துரையாடல்!

லண்டனில் ஈழத்;தமிழ் மாணவர்கள் குறித்துக் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்தில் நெருக்கடியான நிலைமைகள் இருந்த போதிலும் ஒரு மாணவன் அல்லது மாணவி எத்தகைய கல்வி நெறியையும், எத்தகைய தொழில்கல்வியையும் கலந்து முன்னேறுவதற்கான சகல வாய்ப்புகளும் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்தின் வறிய நிலைமையிலுள்ள பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று வருவதே விசேஷமாகக் குறிப்பிடவேண்டும். அத்தகைய ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகின்ற மாணவர்களின் கல்விக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ முன்வருவது அவசியமாகும். யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை விஞ்ஞானக் கல்விக்கான ஆய்வுகூடங்களின்மை, ஆசிரியர்கள் நியமனத்திலும் அவர்களைப் பாடசாலைக்கு நியமித்தலிலும் காணப்படும் பாரபட்சமான தன்மைகள், வடக்கு மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தமிழ் மாணவர்களின் கல்வி நிலைமை மிகவும் கவலை தருவதாகவே உள்ளது. மலையகக் கல்வித் துறையிலும் விஞ்ஞானக்கல்விக்கான வளங்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன’ என்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை லண்டன் உயர்வாசற்குன்று முருகன் ஆலய மண்டபத்தில், கடந்த மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை பற்றி சிறப்புரை ஆற்றுகையில் தெரிவித்தார்.

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!உளமொத்த காதலர்கள் களவு வாழ்வில் இருந்து திருமண வாழ்வில் இணைதல் வேண்டித் தலைவனும் தலைவியும் சுற்றத்தார் யாரும் அறியாவண்ணம் வீட்டைவிட்டு வெளியேறிச் செல்லுதல் உடன்போக்கு என்பர். இவ்வுடன்போக்கின் போது, தலைவனும் தலைவியும் தலைவியின் வீட்டார் சார்ந்த சூழல், இயற்கை சார்ந்த சூழல் என இருவகை சூழல்களின் தாக்குதலுக்கு உட்படவேண்டியுள்ளது. இத்தாக்குதலில் தலைவியின் வீட்டார் நிகழ்த்திய வன்முறைப் பதிவுகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

உடன்போக்கு

அலர், இற்செறிப்பு, நொதுமலர் வரைவு, வரைவு கொடாமை போன்ற இடையூறுகள் ஏற்படும் பொழுது, தோழியின் உதவியுடன் தலைவியின் உறவினர் யாரும் அறியாவண்ணம் இல்லறவாழ்வை மேற்கொள்ளும் பொருட்டுத் தலைவியைத் தலைவன் தன்னுடன் அழைத்துச் செல்வது உடன்போக்கு எனப்படும். அதாவது, களவுவாழ்வில் ஈடுபட்டிருந்த தலைவனும் தலைவியும் கற்பு வாழ்வை (திருமணவாழ்வு) மேற்கொள்ளுதல். இவ்வுடன்போக்கு எல்லாக் காலத்தும் நிகழும். இதற்கு, “ஒருவழித் தணத்தற்குப் பருவங் கூறார்” (அகப்பொருள் விளக்கம், நூ.40)  என்று அகப்பொருள் விளக்கம் சான்று பகர்கின்றது.

சங்க இலக்கியத்தில் உடன்போக்குக் குறித்த பாடல்களாக, நற்றிணையில் 21 பாடல்களும், குறுந்தொகையில் 19 பாடல்களும், ஐங்குறுநூற்றில் 40 பாடல்களும், அகநானூற்றில் 36 பாடல்களும், கலித்தொகையில்  ஒரு பாடலும்  என மொத்தம் 117 பாடல்கள் உள்ளன.

உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிச் செவிலித்தாய், நற்றாய் மற்றும் உறவினர்கள் (தந்தை, தமையன்) சென்றதாக மட்டுமே பதிவுகள் காணப்படுகின்றன. ‘தோழி’ தேடிச் சென்றதாகப் பதிவுகள் இல்லை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 145: புகலிடப்படைப்புகளைப்பற்றி…

 வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்.....; புகலிடப்படைப்புகளைப்பற்றி...; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....‘எதுவரை’ இணைய இதழில் எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணலொன்று  வெளியாகியுள்ளது. அதனைக்கண்டவர் எழுத்தாளர் கோமகன். அந்நேர்காணலில் ஒரு கேள்வி. அது:

“புலம் பெயர் இலக்கிய சூழலில் இருந்து வெளியாகின்ற படைப்புகளில் ஒரு சிலதைத்தவிர அநேகமான படைப்புகள் மலரும் நினைவுகளையொத்த படைப்புகளாகவே வெளிவருகின்றன. இவர்களால் ஏன் புலம் பெயர் கதைக்களங்களையும், கதைமாந்தர்களையும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியாது இருக்கிறது ?”

இவ்விதமான கேள்விகளை எதிர்கொள்ளும்போதுகளில் நான் எனக்குள் சிரித்துக்கொள்வதுண்டு. இந்தக்கேள்வியில் கூறப்பட்டிருப்பதுபோல்தான் உண்மையான நிலை உள்ளதா? ‘இவர்களால் ஏன் புலம் பெயர் கதைக்களங்களையும், கதைமாந்தர்களையும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியாது இருக்கிறது’ என்ற கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளது. இவ்விதமான கேள்விகளுக்கு முக்கிய காரணம்: இவ்விதமான கேள்விகளைக்கேட்பவர்கள் குறிப்பிட்ட சிலரின் படைப்புகளையே முக்கியமான , தரமான படைப்புகளாகக்கருதிக்கொண்டு, அவர்களது படைப்புகளை மட்டுமே படிப்பார்கள். அவ்விதம் படிப்பதால் , இவர்களால் ஏனைய படைப்பாளிகள் பலரின் படைப்புகளைப்படிக்க முடிவதில்லை என்றெண்ணுகின்றேன். உண்மையில் புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பல புலம் பெயர் கதைக்களங்களையும், மாந்தர்களையும் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.

புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத்தாங்கி வெளியான தொகுப்புகளில் முதலாவதும், முக்கியத்துவம் பெற்றதுமான தொகுப்பு: ‘பனியும், பனையும்’ அதிலுள்ள கதைகளை ஒருமுறை இந்த நேர்காணலைக்கண்ட கோமகன் வாசித்துப் பார்த்தால் தெரியும் அவற்றில் எவ்வளவு கதைகள் புகலிடச்சூழலைக் கதைக்களங்களாக்கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றன என்று.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: நிழலாகத்தொடர்ந்துவரும் நினைவுகளில் கனடா ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா! எழுத்தில் தர்மத்தையும் தார்மீகத்தை வேண்டி நிற்கும் பெண்ணியக்குரல்!

ஶ்ரீரஞ்சனி விஜேந்திராமுருகபூபதி” கனடாவுக்கு வந்த வயது முதிர்ந்த அம்மா அன்பிருந்தும் நேரமின்மையால் அல்லற்படும் பிள்ளைகளின் பாராமுகம் கண்டு இதென்ன வாழ்க்கை என்று ஊருக்குப் போய்விடுகிறாள். ஆனால் ஊரில் பெரிய காணியும் வீடும் இருந்தும் கனடாவில் பேரப் பிள்ளைகளைப் பிரிந்து வந்த குற்ற உணர்வு நிம்மதியைக் கெடுத்து விடுகிறது. முடிவில் தங்கள் விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு அந்தத் தாய் கனடாவுக்குத் திரும்புகிறாள்  பேரப் பிள்ளைகளுக்காக!

இந்தக் கதை கனடாவில் மனதுள்ளே பொருமும் எத்தனையோ தாய்மாருக்கு உங்கள் குமுறலுக்கு அர்த்தம் இல்லை என்று அறிவிக்க ரஞ்சனியால் எழுதப்பட்டிருக்கின்றது. பணத்தை வைத்துப் பயமின்றி வாழலாம்! ஆனால் பாசத்தை வைத்துத் தான் பதறாமல் வாழமுடியும்! ” என்று சாலினி என்பவர் கனடாவில் வதியும்  ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின்  நான் நிழலானால்  கதைத்தெகுப்பினை மதிப்பீடு செய்கிறார். பேரக்குழந்தைகளுடன்  வாழும்  வாழ்க்கை  காவிய  நயம் மிக்கது என முன்னர்  எழுதியிருக்கின்றேன்.

எனது மகளின் இரண்டு வயதுக்குழந்தையுடன்  ஒருநாள்  இரவு விளையாடிக்கொண்டிருந்தபொழுது,   அவள்  நடந்துவரும் அழகை ரசித்தேன்.   ஆனால்,  அவளோ  தன்னைப்பின்தொடரும் நிழலை திரும்பித்திரும்பிப்  பார்த்து  ரசித்தாள்.   சிரித்தாள்.   அவளைப்பின்பற்றி தொடரும்   நிழல் பற்றி அவளுக்கு எதுவும்  புரியவில்லை. அதனைக்காட்டி  “தாத்தா ” என்று  விளித்தாள்.   அவளுக்கு அது என்ன என்று   விளக்கவேண்டும். நானும்  அவளுடன்  நடந்து  எனது  நிழலையும்  அவளுக்கு காண்பித்தேன்.  அவள்  அட்டகாசமாகச்   சிரித்தாள்.   தொடர்ந்தும் அவ்வாறு   என்  கைபற்றி  நடந்து  திரும்பித்திரும்பி  நிழலைப்பார்த்து சிரித்தாள்.

அந்தக்கணம்  என்னை  கொள்ளைகொண்டுசென்றது.   இப்படி உலகெங்கும்   எத்தனையோ  தாத்தா,  பாட்டிமார்  தங்கள்  மனதை தமது   பேரக்குழந்தைகளிடம்  பறிகொடுத்துவிட்டு,   எங்கும்  அகன்று சென்றுவிட   முடியாமல்   கட்டுண்டு  கிடக்கின்றனர். நாம் எமது  நிழலைப் பார்த்து என்றைக்காவது  சிரித்திருப்போமா—? நிழலுக்குள்  ஆயிரம்  அர்த்தங்கள்  இருக்கின்றன.   தென்னிந்தியாவில் ஒரு  நடிகர்  நிழல்களின்  பெயரில்  வாழ்கிறார்.   நிழல்கள்,  நிழல் நிஜமானால்   என்றெல்லாம்  படங்களும்  வெளியானது. ” இன்றும்  தாயகத்தின்  நினைவுகளிலேயே   அலைகிறார்கள். நனவிடைதோய்ந்துகொண்டிருக்கிறார்கள்.”  என்று  புலம்பெயர்ந்து வாழும்  எமது  ஈழத்தமிழ்ப்படைப்பாளிகள்  பற்றி  விமர்சகர்களிடம் பொதுவான  குற்றச்சாட்டு  நீடிக்கிறது. ( இதுபற்றிய விவாதத்தை கனடா பதிவுகள் கிரிதரன் தமது முகநூலில் தொடக்கியிருக்கும்  தருணத்தில்  ஸ்ரீரஞ்சனி  பற்றிய இந்தக்கட்டுரையை   எழுதநேரிட்டதும்   தற்செயலானது)

Continue Reading →

பத்தி 5: இணையவெளியில் படித்தவை

ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ – மாயயதார்த்தத்தின் வலிமை

சத்யானந்தன்

ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ சிறுகதைக்கான இணைப்பு —–   இது

வாசிப்பிலும் படைப்பிலும் சிறுகதையின் இடமே முதன்மையானது. இருப்பினும் படைப்பாளிகளால்சிறுகதை என்னும் உருவம் உள்ளடக்கத்தை ஒட்டியே தேர்ந்தெடுக்கப் படுகிறது. நவீனத்துவத்தில் சிறுகதையின் வீச்சு மேம்பட்டு ஆகச்சிறந்த வடிவம் இதுதானோ என்று அதிசயிக்க வைக்கிறது. ஆனால் சிறுகதை வடிவத்துக்கு வரம்புகள் உண்டா? என்ன வரம்புகள்? படைப்பாளிக்கு மட்டும் சில இடத்தில் முட்டி நின்றுவிட நேர்வதா? ஏன் அப்படி ஆக வேண்டும்? அடுத்ததாக வாசகனுக்கு சில தடைகள் உண்டா? சொற்களின் ஆற்றலுக்கும் வாசகனுக்கும் கூட தாண்டிச்செல்ல முடியாத இடங்கள் உண்டா?

உண்டு. நம்மால் நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியாத உணர்வுக் கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளிகள் உண்டு. நுட்பமான தருணங்கள் ஆழ்மன பிரக்ஞை அல்லது வெளிமனப் பிரக்ஞை எனப் பகுத்தறிய முடியாத தளத்தில் சலனப்பட்டு மறைபவை. அவற்றை நாம் புழங்கும் சொற்களால் நம் மனம் பழக்கப்படுத்தப்பட்ட வாசிப்பு மற்றும் உள்வாங்குவது நம் உள்ளார்ந்த தடைகளால் இயலாத ஒன்று.

இந்த இடத்தில் தான் மாயயதார்த்தத்தின் வீச்சு படைப்பாளி வாசகன் இருவருக்கும் இவற்றைத் தாண்டிச் செல்ல உதவுகிறது., காட்சி என்னும் ஊடகம் வாசிப்பு ஊடகத்தை ஒப்பிட நுட்பங்களைப் புரிய வைப்பதில் கையாலாகாதது. மாய யதார்த்தம் வார்த்தை என்னும் வடிவம் செயலிழக்கும் இடத்தை எளிதாகக் கடந்து செல்லுகிறது. நவீன கவிதையின் பலம் நாம் பழக்கப்பட்ட காட்சி அல்லது உரையாடலைக் காட்டி நாம் தடுமாறும் புள்ளியைத் தாண்டி ஒரு ஆழ் தரிசனத்துக்கு இட்டுச் செல்வது. மாய யதார்த்தம் காட்சி வழி நவீன கவிதை நம்மை உடன் அழைத்துச் செல்லும் மாயத்தை புனைகதைக்குள் கொண்டு வருவது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்….; “யாதும் ஊரே! யாவரும் கேளீர்!” ;முகநூல் பதிவுகள் பற்றி….;’பனியும், பனையும்’ தொகுப்பு பற்றி…

பழைய புத்தக விற்பனையில்…..

 வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்.....; புகலிடப்படைப்புகளைப்பற்றி...; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....எனக்கொரு பழக்கமுள்ளது. அது எங்காவது பாவித்த பழைய புத்தகங்கள் விற்பனைக்குப் போட்டிருந்தால் , அவற்றில் பிடித்த புத்தகங்களை வாங்குவதுதான். இங்குள்ள கிளை நூலகங்களுக்கு ஒரு பழக்கமுள்ளது. நல்ல தரமான புத்தகங்களைக்கூட, அவை அதிகம் பாவிக்கப்படாமலிருந்தால் விற்பனைக்குப்போட்டு விடுவார்கள். ஏன் அவற்றைப் பிற கிளைகளுக்கு அனுப்பக்கூடாது? எனென்றால் நல்ல நிலையிலுள்ள பல புத்தகங்களை இவ்விதம் விற்பனைக்குப்போட்டிருப்பதைப்பல தடவைகள் பார்த்திருக்கின்றேன்.

நேற்றும் ஸ்கார்பரோவிலுள்ள ஏஜின்கோர்ட் கிளைக்குச் சென்றிருந்தபொழுது அங்கும் புத்தகங்கள் பலவற்றை விற்பனைக்குப் போட்டிருந்தார்கள். அவற்றிலிருந்து ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் வெளியான உலகச்சிறுகதைத்தொகுப்பொன்றையும், க.நா.சு மொழிபெயர்ப்பில் வெளியான Animal Farm நூலின் தமிழ் மொழிபெயர்ப்பினையும் வாங்கினேன். ஒவ்வொன்றும் விலை ஒரு டாலர்தான். அம்ருத பதிப்பக வெளியீடாக வெளிவந்த நூல் ‘மிருகங்களின் பண்ணை’. நூலின் அட்டையில் ‘மிருகங்களின் பண்ணை’ என்று தலைப்பினையிட்டிருந்தவர்கள், நூலின் உள்ளே ‘மிருகங்கள் பண்ணை’ என்று குறிப்பிடிருக்கின்றார்கள்.

அங்கிருந்த மேலுமொரு தமிழ்ப்புத்தகமும் என் கவனத்தைக்கவர்ந்தது. அது அமெரிக்காவில் வாழும் பெண் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத்தொகுப்பு. ஏற்கனவே அவரது படைப்புகளை வாசித்திருக்கின்றேன். அந்தத்தொகுப்பு நூலை எடுத்துப் புரட்டிப்பார்த்தேன். நூலின் உள்ளே, முதல் பக்கத்தில் முத்து முத்தான எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது. அந்த நூலின் ஆசிரியரே அதிலிருந்த குறிப்பினை எழுதியிருந்தார். அந்தக் குறிப்பிலிருந்து ஒரு விடயத்தை அறிய முடிந்தது. அந்த நூலினை அவர் இங்கு, கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவருக்கு அன்பளிப்பாகப் பரிசளித்திருக்கின்றாரென்பதை அக்குறிப்பு வெளிப்படுத்தியது. அந்தக் கனடா எழுத்தாளர் இங்கிருந்து வெளியாகும் சஞ்சிகையொன்றின் ஆசிரியரென்பதும் தெரிந்திருந்தது. அத்துடன் அவரது சஞ்சிகையில் அமெரிக்காவில் வசிக்கும் அந்தப்பெண் எழுத்தாளர் எழுதியிருக்கின்றார் என்பதையும், அதற்காக அவர் கனடா எழுத்தாளருக்கு நன்றி கூறுவதையும் அந்தக் குறிப்பு வெளிப்படுத்தியது.

Continue Reading →

வானதி’ திருநாவுக்கரசு மறைவு!

வானதி' திருநாவுக்கரசு மறைவு!தமிழர்களின் வாசிப்பனுவத்தில் வானதி பதிப்பகத்துக்கு முக்கியமானதோரிடமுண்டு. இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் , மிகவும் அழகான முறையில் , நேர்த்தியாக வெளிவரும் வானதியின் நூல்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை. வாண்டுமாமாவின் சிறுவர் படைப்புகள் , பிலோ இருதயநாத்தின் ஆதி வாசிகளுடனான பயண அனுபவங்கள், ராஜாஜியின் வியாசர் விருந்து , சக்கரவர்த்தித்திருமகன் போன்ற ஆத்மீகப்படைப்புகள் எனத்தொடங்கி சாண்டில்யன், கல்கி, அகிலன், ஜெகசிற்பியன் போன்றோர் படைப்புகள் வரையில் அழகான அட்டைப்படங்களுடன் பல்வகை நூல்களைத் தனது வானதி பதிப்பக வெளியீடுகளாக, பல வருடங்களாகத்தந்தவர் ‘வானதி’ திருநாவுக்கரசு அவர்கள். இப்பதிகத்தின் நூல்களைப்பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் வெகுசனப்படைப்புகளாகவேயிருக்கும். இவர் தனது வாழ்வில் சந்தித்தவர்களைப்பற்றிய தனது பதிப்பகத்துறை அனுபவங்களை ஒரு நூலாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்.

அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வரும் கொடும்பாளூர் இளவரசியும், இராஜராஜனின் மனைவியுமான வானதி என்னும் பாத்திரத்தின் மீது கொண்ட பேரபிமானத்தினால் தனது பதிப்பகத்துக்கு ‘வானதி’ என்று பெயரிட்டவர் ‘வானதி’ திருநாவுக்கரசு அவர்கள்.  பல்துறைகளிலும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த படைப்புகளினூடுதான் எம் போன்றவர்களின் வாசிப்பும் வளர்ந்தது. நூல்களை மிகவும் நேர்த்தியாக வெளியிடுவதை ஒரு தவமாகச்செய்தவர் திருநாவுக்கரசு. அவரது மறைவு தமிழ்ப்பதிப்பகத்துறைக்கு முக்கியமானதோரிழப்பே.

Continue Reading →

பேரறிஞர் பேராசிரியர் கோபன் மகாதேவா

-பேராசிரியர் கோபன் மகாதேவா -பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களை முதன்முதலில் அவரது இலக்கியப் படைப்புக்கள் மூலமே அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஞானம் சஞ்சிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவரைச் சிறந்த படைப்பாளியாக எனக்கு அறிமுகப் படுத்தியிருந்தன. சென்ற 10-10-2015 அன்று டென்மார்க்கில் இடம்பெற்ற ஏழு சங்கங்கள் இணைந்து நடத்திய கலைவிழாவில் பிரதம அதிதியாக நானும் எனது மனைவியும் அங்கு சென்றபோது, பேராசிரியரும் அவ்விழாவிலே சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ள வந்திருந்தார். அவ்வேளையிலேதான், 1974ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலகத் தமிராய்ச்சி மகாநாட்டின் பிரதம செயலாளராகச் செயலாற்றிய கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவாதான் அவர் என்பதும், அவரே தொடர்ந்து தற்போது கோபன் மகாதேவா என்ற பெயரில் பிரபல்யமாகி பல்துறைச் செயற்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு இயங்கிவருகிறார்; என்பதும் தெரியவந்தது.

யாழ்ப்பாணத்தில்  அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த முடியாது என்றும் கொழும்பிலேதான் அது நடத்தப்பட வேண்டும் என்றும் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மந்திரிசபையில் தீர்மானித்திருந்த வேளையில் கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவா சிறிதும் தளராமல் தனது திறமையைப் பயன்படுத்தி சிறிமா அம்மையாருடன் வாதாடி யாழ்நகரிலேயே அந்த மாநாட்டை நடத்த அனுமதிபெற்றவர் என்பதும் என் நினைவில் வந்தது.

டென்மார்க்கில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக்கிடைத்தது. அவர் எமக்கு அன்பளிப்புச் செய்த நூல்கள் மூலமும் அவரது சமகாலப் பணிகளையும் அறிய முடிந்தது.

தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான அனுமதியை சிறிமாவிடம் வாதிட்டுப் பெற்றார் என்பதை விளக்குவதாக  டென்மார்க்கில் நடைபெற்ற கலைவிழாவில் அவரது உரை அமைந்திருந்தது. பின்னர் நான் அவரிடம் இது தொடர்பாக ஞானம் சஞ்சிகையில் வெளியிடுவதற்கென ஒரு நேர்காணலையும் பெற்றுக்கொண்டேன்.

Continue Reading →